சனி, ஜூலை 23, 2005

பிரமிள் கவிதைகள்: "பிய்த்து எடுத்தவை-1"

பிரமிள் கவிதைகளில் பிய்த்து எடுத்தவை:

விடிவு:
„...இருளின் சிறகைத் தின்னும் கிருமி...“
லௌகீகம்:
„...குடி தண்ணீர்
வாளி வீச்சில்
நடுங்காது நிற்குமா?
அலைக்காமல் தான்
அள்ளமுடியுமா?“


ஒளிக்கு ஓர் இரவு:


„...லாப மீன் திரியும்
பட்டணப் பெருங்கடல்
தாவிக்குதிக்கும்
காரியப் படகுகள்...“


காவியம்:
சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது

இரும்பின் இசை:
„கண்ணுக்குள் விரிகிறது கடல்...“

“...புரியாது கழிந்த பொய் நாட்கள் எல்லாம் உடைந்து குவிந்து பழங்கதையாக் கிடந்தன பார்...“
(இன்னும் வரமுடியும்)

4 கருத்துகள்:

dondu(#11168674346665545885) சொன்னது…

"காவியம்:சிறகிலிருந்து பிரிந்த
இறகு ஒன்று
காற்றின்
தீராத பக்கங்களில்
ஒரு பறவையின் வாழ்வை
எழுதிச் செல்கிறது"

மேலே குறிப்பிட்ட அதே கவிதையைப் பற்றி நண்பர் ரோஸா வசந்த் அவ்ர்கள் ஒரு பதிவு போட்டுள்ளார். பார்க்க
http://rozavasanth.blogspot.com/2004/10/blog-post_109877978221018657.html#comments
அதற்கு நான் இட்டப் பின்னூட்டங்களும், ரோஸா அவர்களின் பதில்களும் கீழே கொடுத்துள்ளேன்.

இதே கவிதையை என் நண்பர் ஸ்றீராம் அவர்கள் 1979-ல் பிரெஞ்சில் அழகாக மொழி பெயர்த்து ஒரு பிரெஞ்சுக் காரரிடம் காட்ட, அவர் இக்கருத்தை புகழ் பெற்ற ப்ரெவெர் என்ற பிரெஞ்சுக் கவிஞர் எழுதியிருக்க வேண்டும் என்று அடித்துக் கூறினார். பிரெஞ்சில் அக்கவிதை பின் வருமாறு:

"Isolée de l'ail, s'envole une plume
écrivant la vie d'un oiseau dans
les pages vides du ciel"

அன்புடன்,
டோண்டு

By Dondu, at 11/20/2004 12:38 AM

நன்றி டோண்டு, (கடந்தமுறை பெயரை தப்பாய் குறிபிட்டதற்கு மன்னிக்கவும்).

இது மிகவும் ஆச்சரியமளிக்கும் செய்தியாக இருக்கிறது. பிரமீளின் இந்த பிரபலமான கவிதை குறித்து இதுவரை இப்படி ஒரு செய்தியை நான் கேள்வி பட்டதில்லை. (ஸ்ரீராம் என்று நீங்கள் குறிப்பிடுபவர், `குட்டி இளவரசன்' உள்ளிட்ட பல பிரஞ்சு படைப்புகளை பொருத்தமான தமிழில் மொழிபெயர்த்த அதே ஸ்ரீராமா?).

அந்த பிரஞ்சுகாரரின் தகவல் உண்மையாய் இருக்கும்பட்சத்தில் இயற்கையான சில கேள்விகள் எழுகிறது. பிரமீள் காப்பியடித்திருக்க கூடுமா, எனபது உடனடியாய் எழக்கூடியது. அப்படி இல்லாத படசத்தில் இந்த `எதேச்சையான ஒரே நிகழ்வு' மிகவும் ஆச்சரையமானது.

பிரமீளின் கவிதையில் காற்றின் தீராத(unfinished) பக்கம் என்று வருவது `ப்ரேவரின் கவிதை'யில் வானத்தின் வெற்று பக்கம் என்பதாக இருக்கிறது. பிரமீளின் கவிதை தரும் படிமத்தில் சிறகு கீழ்நோக்கி வீழ்வதாகவோ, காற்றின் போக்கில் செல்வதாகவோ எனது வாசிப்பு. ப்ரேவரின் சிறகு மேலே வானத்தில் பறந்து கொண்டிருக்கிறது. இந்த சாதாரண வித்தியாசம் மிக வேறுபட்ட interpretationsக்கு கொண்டு செல்ல கூடும்.

இதை ஸ்ரீராம் பல ஆண்டுகளுக்கு முன்னால்(பிரமீள் உயிருடனிருந்தபோது) வெளிபடுத்தியிருந்தால் பிரமீளுக்கு இருந்த இலக்கிய விரோதத்தில் பெரிய பிரச்சனை ஆகியிருக்கும். ஏன் வெளிபடுத்தவில்லை என்று புரியவில்லை.

அன்புள்ள வசந்த்.

By ROSAVASANTH, at 11/20/2004 4:35 PM

"அந்த பிரஞ்சுகாரரின் தகவல் உண்மையாய் இருக்கும்பட்சத்தில் இயற்கையான சில கேள்விகள் எழுகிறது. பிரமீள் காப்பியடித்திருக்க கூடுமா, எனபது உடனடியாய் எழக்கூடியது. அப்படி இல்லாத படசத்தில் இந்த `எதேச்சையான ஒரே நிகழ்வு' மிகவும் ஆச்சரையமானது.

மன்னிக்கவும் ரோசா அவர்களே, நீங்கள் மேலே எழுதியப் பின்னூட்டத்தை யதேச்சையாக இன்றுதான் (12-05௨005)பார்த்தேன். நான் வலைப்ப்பூவில் சேர்ந்த புதிதில் நான் பின்னூட்டமிட்ட இடங்களைத் திரும்ப கண்டுபிடிப்பதில் அவ்வளவு பயிற்சியில்லாததே காரணம். ஆகவே நான் கூறவந்ததை சரியாகக் கூறவில்லை என்பதை இப்போதுதான் பார்த்தேன்.

சிறீராம் (நீங்கள் சொன்ன அதே சிறீராம்தான்) பிரெஞ்சுக்காரரிடம் தன் மொழிபெயர்ப்பைக் காட்டியிருக்கிறார். பிரெஞ்சுக்காரர் ப்ரெவெரில் அதாரிட்டி. ஆகவே அவர் ஆச்சரியப்பட்டிருக்கிறார். பிறகு சிறீராம் அவரிடம் அது தமிழிலிருந்து தன்னால் மொழிபெயர்க்கபாட்டது என்பதைக் கூறியிருக்கிறார். சுதாரித்து கொண்ட பிரெஞ்சுக்காரர் கவிதையின் தரம் ப்ரெவரின் தரத்தில் உள்ளது என பாராட்டியிருக்கிறார். அதுதான் நடந்தது.

"pages vides" என்பதற்கு பதில் "pages iépuisables" என்று எழுதலாமா என்று நான் ஆலோசனை கூறியதற்கு சிறீராம் தான் எழுதியது சரியே என்பதை எனக்கு பொறுமையாக விளக்கினார்.

அன்புடன்,
டோண்டு ராகவன்

By Dondu, at 5/13/2005 1:18 AM

விளக்கத்திற்கு நன்றி. இதை நீங்கள் விளக்கியது முக்கியமானது. அதாவது மேலே உள்ள பிரஞ்சு வடிவம் பிரமீள் எழுதியதன் மொழிபெயர்ப்பே அன்றி, பிரேவரின் கவிதை அல்ல என்று புரிந்துகொள்கிறேன். பிரமீள் மீதான அபிமானம் கூடுகிறது. நன்றி.

By ROSAVASANTH, at 5/13/2005 1:54 PM

அன்புடன்,
டோண்டு ராகவன்

சுசீந்திரன் சொன்னது…

அன்பு டோண்டு ராகவன் அவர்களுக்கு
ஆவலைத் தூண்டும் உங்கள் பின்னூட்டத்திற்கு மிகவும் நன்றி. தமிழில் ழாக் ப்ரெவெரின் கவிதைகளைப் பெருமளவில் தமிழுக்கு அறிமுகப் படுத்தியவர்கள் க. கலாமோகன் அவர்களும் வெ.சிறீராம் அவர்களும். 90 களின் தொடக்கத்தில் கலாமோகனின் மொழிபெயர்ப்பில் ழாக் ப்ரெவெரின் கவிதைகள் பல புகலிட சஞ்சிகைகளில் வெளியாகின. Paroles என்ற நூலில் இருந்து சில கவிதைகளைத் தமிழாக்கஞ் செய்து வெளியிட்டிருக்கிறார் நண்பர் வெ.சிறீராம் அவர்கள்.
அதில் ஒரு கவிதை ஒன்று:
"...ஆக பறவையின் இறகுகளில் ஒன்றை
மிக மென்மையாகப் பிடுங்கி
சித்திரத்தின் ஒரு மூலையில்
எழுது உன் பெயரை." என்று முடிகிறது.
( "..une des plumes de l'oiseau
et vous ecrivez votre nom dans un coin du tableau." )
பிரமிளின் கவிதைகள் ழாக் ப்ரெவெரின் கவிதைகளுடன் ஒப்புநோக்கத்தக்கவைதான்.அத்தோடு சில பிரஞ்சுமொழிக் கவிதைகள் பிரமிளினால் தமிழாக்கஞ் செய்யப்பட்டன என்பதும் இங்கே மனங்கொள்ளத்தக்கது. மீண்டும் நன்றி.
அன்புடன்
செகசித்தன்

ரவி ஸ்ரீநிவாஸ் சொன்னது…

do you have the collected volume or are you using some other source

சுசீந்திரன் சொன்னது…

என்னிடம்
1. "பிரமிள் கவிதைகள்",(327 பக்கங்கள்) அக்டோபர் 1998, லயம் வெளியீடு, பெரியூர், சத்திய மங்கலம்-638 402

2. "ழாக் ப்ரெவெர் சொற்கள்" (111 பக்கங்கள்), ஆகஸ்ட் 2000, க்ரியா-Alliance Fracaise of Madras
ISBN 81-85602-78-6

3.Jacques Prevert,"Paroles", Editions Gallimard, 1997
ISBN 2-07-039425-5

ஆகிய தொகுப்புக்கள் இருகின்றன.