செவ்வாய், மே 30, 2006

சர்வ ‚அதிகாரமும்’ கொண்ட அப்பா


சர்வ ‚அதிகாரமும்’ கொண்ட அப்பா

இரா. றஜீன்குமார்

வாந்தி முதலாய்
வலியால் துடித்து
முனகி…
முக்கி…
மலமும் கழிந்து,
ஜோனி கிழிந்து
குருதி வழிந்து…

இவ்வளவு நிகழ்வும்
நடந்து முடிந்தது.

தாதி ஒருத்தி
சேதி சொன்னாள்
„சுகப் பிரசவம்“.

நானும் எனது பங்களிப்புக்காய்,
இனிப்புப் பெட்டியுடன்
நண்பனைத் தேடி….
கேட்டான்
சொன்னேன் „சுகப்பிரசவம்“

நண்பனும் சொன்னான்
„எனது ஐந்து குழந்தைகளும்
சுகப்பிரசவம் தான்“.

என்ன சுகம்! என்ன சுகம்!
ஆகா
அப்பன் ஆகுதல் என்ன சுகம்!


Photo by Damayanthi, Norway(ஈழத்துப் புறநானூறு, நூல்,பெர்லின் 1991)

திங்கள், மே 29, 2006

„றஞ்சினி கவிதைகள்“ நூல் வெளியீட்டு விழா


„றஞ்சினி கவிதைகள்“ நூல் வெளியீட்டு விழா பல இலக்கிய ஆக்கதாரர்களை ஆர்வலர்களை, நண்பர்களை 29.05.2006, ஞாயிறு அன்று பெர்லின்-சூனபெர்க் வட்டாரத்தில் Kolonnen Strasse 43 இல் இருக்கும் இலங்கை இந்திய உணவகமான "மதுரா" வில் ஒன்றாகச் சந்திக்க வைத்தது. அத்தோடு பல பார்வை விமர்சனங்கள், பரிமாணங்கள் நிகழ்வை கலகலப்பாக மாற்றின. கலந்து கொண்டவர்கள் அனைவருமே உற்சாகமாக உரையாடலில் பங்கேற்றுக் கொண்டமை, இன்னும் நிகழ்வுகள் ஆயிரம் இங்கே நடத்தலாம் என்று நம்பிக்கை கொள்ளவைத்தது. விழாவின் தொடக்கத்தில் தலைமை தாங்கிய ராகவன் இலங்கையில் சண்டைக்காலத்திலும் சமாதான காலத்திலும் மரித்தோருக்கான இரு நிமிட மௌன அஞ்சலிக்கு எல்லோரும் எழுந்து நிற்க வேண்டிக்கொண்டவர், எழுந்து நின்றவாறு ஒரு பத்து நிமிடங்கள் குட்டித் தூக்கம் ஒன்றைப் போட்டுவிட்டார். இந்தா முடிகிறது, இந்தா முடிகிறது என்றும் எப்படா முடியும் இந்த மௌன அஞ்சலி என்றும் நாங்களும் ஒரு ஐந்து நிமிடமாகிலும் அமைதி இழந்து தவித்தோம். பொறுமையிழந்த நான்தான் இப்போது எல்லோரும் உட்காரலாம் என்று உரத்துச் சொன்னேன்.


இலங்கைக்குத் தன்னை நாடுகடத்தக் கூடாது என்று கோரித் தடுப்புக் காவலில் சாகும் வரை உண்ணாவிரதமிருந்து, அதனால் கேட்டல் புலன் பாதிக்கப்பட்டிருக்கும் சிவா என்கிற சிவபாதசுந்தரம் இப்போது ஜெர்மன் நாடகக் குழு ஒன்றில் அவைக்கு ஆற்றும் பயிற்சியில் ஈடுபட்டிருக்கிறார். அதனால் அவரது தொடக்கப் பேச்சு ஒரு அவை நிகழ்த்தலாகவே மாறிப்போனது. பெண்ணும் எழுத்தும் என்ற தலைப்பில் அடுத்து உமா அவர்களும் றஜீன்குமார் மற்றும் சுசீந்திரன் ஆகியோரும் பல நோக்கு நிலைகளில் நின்று தங்கள் பேச்சினூடு சபையோரைக் கவர்ந்தனர். அப்போது தான் பெற்றுக் கொண்ட „றஞ்சினி கவிதைகள்“ நூலைப் பற்றிய தங்கள் அபிப்பிராயங்களை நடன ஆசிரியை வினோதா தம்பிப்பிள்ளை தொடக்கி வைத்தார். சபையின் மௌனம் கலைந்து ஜசிந்தா, இன்பா, ஈசன்,பரா என்று பலரும் கவிதைகளின் புரிதலின் தங்கள் பிரதிபலிப்புக்களை மனம் திறந்தனர். இடைவேளை, இரவுணவு, கலை நிகழ்ச்சிகள் என்று இந்த ஒன்றுகூடல் உற்சாகத்திலும் மகிழ்விலும் ஆனந்தம் கொட்டியது. தாருணி, திருமகள், சலட் மேரி, வினோதா, ஜசிந்தா, நந்தா, சர்மா எல்லோரும் இவ்வளவு நன்றாகப் பாடுகிறார்களே என்று என்னையும் என் தொண்டையையும் நினைத்து (இந்தத் தாழ்வுச் சிக்கலுக்கு ஏதேனும் மருந்து உண்டா?)கவலைப்பட்டேன்.


பெண்ணியம் அறிந்து பல் நிலைகளில் தம் வாழ்வை எதிர்கொள்ளும் பெண்கள் மீது வீசப்படும் கற்களை படிக்கற்களாக மாற்ற வேண்டியதன் அவசியத்தை உமா மிக நன்றாகச் சொன்னதோடு றஞ்சினி கவிதைகளின் பெண்ணிலைவாதக் கூறுகளின் எளிமை, தீவிரம், அனுபவ தீட்சண்யம் என்பவற்றை மாயா ஆஞ்ஜலோ, வெர்ஜீனியா வொல்வ் ஆகியோரின் கவிதை, கூற்றுக்களின் துணையோடு முன்வைத்தார். „ „கூண்டுப் பறவை ஏன் பாடுகின்றது என்பதை நான் அறிவேன்“ (I know why the caged bird sings) என்ற மாயா ஆஞ்ஜலோவின் புத்தக வரிகளும் றஞ்சினியின் கவிதைகளூடு வந்து சேரும் அனுபங்களின் சமாந்தரப் போக்கினையும் சொல்லியதோடு தான் விரும்பும் கவிதைகள் சிலவற்றை வாசித்தும் காட்டினார். ஈழத்தில் பெண் எழுத்தின் புதிய வரவுகளும், சிவரமணி, செல்வி, மைத்திரேயி போன்ற கவிஞர்கள் தம் தாயை நோக்கி எழுதியவற்றையும் „ நீ ஏன் இப்படி ஆனாய்“ என்ற கவிதையில் றஞ்சினி அவர்கள் சொன்தையும் ஒப்பீடு செய்து ஆசிய சமூகங்களில் தாய்-மகள் உறவின் பெண்ணிய வலுவினையும் அதன் பெறுதியையும் குறிப்பிட்டார். நூலாசிரியர் றஞ்சினி அவர்களும் சுசீந்திரனும் கவிதைகளை சிலவற்றை வாசித்த போது, ஏற்படுகின்ற உணர்வின் அனுபவம் தனித்துவமானது என்று தெரியவந்தது. புரிதலின் மந்திரம் தெரிந்தது போலும் தோன்றியது.
„(…) ஆகா என்ன சுகம், என்ன சுகம் அப்பனாகுதல் என்ன சுகம்(…)“ என்ற சிறகு முளைத்த கவிதை வரிகளின் மூலம் அறியப் பெற்ற றஜீன்குமார் („இருபதாம் நூற்றாண்டின் ஈழத்துப் புறநானூறு“ ) அவர்களின் விமர்சன உரை வரலாற்றின் பரப்பில் தமிழில் பெண் எழுத்துக்களின் தனித்துவத்தையும் தடங்கல்களையும் எடுத்துச் சொல்லியது.சல்மா, மாலதிமைத்திரி, குட்டி ரேவதி, சுகிர்தராணி போன்றவர்களின் எழுத்தியக்கம் பதிக்கின்ற தடங்கள் பற்றியெல்லாம் பேசினார். ஒரு விமர்சனத்துக்கான முன்வரைவு என்று தன் குறிப்புக்களைக் குறிப்பிடுகிறார் றஜீன்குமார். நூலின் முதற் பிரதிகள் தேவகாந்த சர்மா, மல்லிகா, பரா,தாருணியா ஆகியோருக்கு வழங்கப்பட்டன. இக் கவிதை நூல் அழகாகவும் கைக்கடக்கமானதாகவும் செய்யப்பட்டுள்ளதால் வந்தவர்கள் அனைவருமே பெற்றுக்கொண்டனர்.


„கனகி புராணம்“ எழுதிய நட்டுவச் சுப்யையா என்று எழுதி வைக்கப்பட்டுள்ள சுப்பையாப்புலவர் அவர்களுக்கு ஈழத்தின் வரலாற்றெழுத்தியல் செய்த வஞ்சனை; புதுக்கவிதையின் வரலாறு, கவிதைகளின் இன்றைய சமூகப் பெறுமானம் என்றவாறாக நகர்ந்தது சுசீந்திரனின் பேச்சு. பெர்லின் வாழ், அறியப்பட்ட இலக்கிய ஆக்கர்கள் ,தீவிரமாக உழைப்பவர்கள்(ஊதிய வேலையில் படு சோம்பேறிகள்) மற்றும் ஆர்வலர்கள் பலர் இந் நிகழ்வில் கலந்து கொண்டனர். கருணாகர மூர்த்தி, தமிழரசன் போன்றவர்களின் தலைகளும் தெரிந்தன. இப்படி நிகழ்வுகள் அடிக்கடி நிகழ வேண்டும் என்ற ஆதங்கத்தோடு நடு ராத்திரியில் மது-ரா விட்டு அவரவர் வீடுகளுக்கு வந்து சேர்ந்தோம். வாழ்க கவிஞர்கள்!!

ஞாயிறு, மே 28, 2006

From The Sunday Leader

From The Sunday Leader, Colombo. 28 May 2006.
--D.B.S.Jeyarajah

Rajapakse is being circumscribed due to his dependency on the Janatha Vimukthi Peramuna and Jathika Hela Urumaya it is said. There are also other external pressure groups like the Patriotic National Movement. Like SWRD Bandaranaike 50 years ago Mahinda too is unable to do the right thing by the Tamils due to JVP, JHU and PNM constraints it is argued.
This argument could have been true of SWRDB. He was a Westernised Liberal Democrat who donned the national dress and promoted Sinhala and Buddhism to capture votes. The real Solomon wanted to be just by the Tamils after he had opened the floodgates. He could not as the torrents he had released engulfed him. Literally and metaphorically he was destroyed by the very same forces he unleashed to achieve power.


In Mahinda Rajapakse's case it is different. He is not play acting when he takes flower baskets and trays to the pansala. The only time he is play acting is when he sits with foreigners talking about serious political reform. The crucial difference between SWRD and Mahinda is that the latter unlike the former really and truly believes in what may be called the Sinhala Buddhist supremacist ideology. Mahinda is of the same mindset as the JVP, JHU and PNM. He is not their unwilling captive. If that ideology is indeed restrictive then it is a state which Mahinda has willingly chosen and will not come out of.


Buddhists sole heirs
Rajapakse was born in 1946 but he is in reality the politically quintessential child of 1956 (Panashaye Daruwo). Mahinda believes that the Sinhala Buddhists are the rightful and sole heirs to this island. The Sinhala Buddhists who have a divine right to this Dhammadeepa have no where else to go. The Sinhala Buddhists being a generous people have allowed other minority communities also to share this land. But they must know their place and behave accordingly. The Sinhala Buddhists are way on top of the pecking order.


The privileged position of the Sinhala people depends on a united and undivided Sri Lanka. For this a strong, centralised state under a unitary constitution is essential. Some minorities may be concentrated in certain regions. This does not mean that they have special rights or that power needs to be devolved to the periphery. There can be no federalism. There can be no recognition of any region as a historic habitat of the minorities. There cannot be even real devolution. Only some decentralisation for the sake of administrative convenience could be possible.
This is not a case of Rajapakse being flexible and the Sinhala hardliners being rigid. Mahinda and the mahajanaya are of the same opinion. He is truly a man of his people in this.
Total breakdown
Against this backdrop Rajapakse realises that whatever the time frame of any potential discussions with the LTTE the final outcome can only be a total breakdown. The impasse will surely lead to total war. Mahinda sees himself as the divine instrument that would lead the rightful owners of this island to complete victory over the enemy threatening country, race and religion (Lanka, Sinhala and Buddhism). There was much talk of the great liberator "Diyasena" in 1956. Mahinda is Diyasena delayed perhaps by 50 years.
It is well - known that Mahinda is a strong southern regionalist. Such Ruhunu consciousness has its own baggage. There is the Dutu Gemunu syndrome where many sons of the south think they are latter-day incarnations of Rohana. They have to protect the country and liberate it from its enemies.
Let it not be forgotten that Mahinda never associated himself with any major effort to resolve the national question through federalism under Chandrika Kumaratunga. The excuse is that Kumaratunga ignored him. True! But then this was what Rajapakse wanted. Had Rajapakse really wanted to associate with those efforts I am sure he could have bulldozed his way in. After all when he wanted to be premier he cut Lakshman Kadirgamar's throat neatly. When he wanted presidential nomination he circumvented the Bandaranaikes , did he not?
Mahinda's consistency
What has been apparent in the past is Mahinda's consistency in identifying himself with the forces of Sinhala racism opposing even meagre concessions to the Tamils. There he was at the Buddhist demonstration opposing the devolution bill in 2000. There he was visiting fasting Omalpe Sobhitha Thero at Dalada Maligawa. Who was the man behind the JVP action against the P- TOMS.
Compounding matters further is the treatment meted out to Mahinda in Jaffna in the aftermath of the tsunami by Tiger instigated mobs. Of course Rajapakse can say he has no grudges against Tamils and prove it by saying "my best friend is a Tamil. It’s Douglas Devananda."
Rajapakse has very correctly gauged the LTTE to be the primary and effective obstacle to his political aims. He has devised a policy therefore of containing and undermining the LTTE in the short run. In the long run he hopes to launch an all out war to annihilate the Tigers. Another important consideration is the IC. The active support of the IC is required to bankroll the economy while war is conducted. These are the defining parameters of Mahinda Rajapakse's current policy towards the resolution of the national question.
Satisfying or hoodwinking the IC is of crucial importance. The idea is to pay lip- service to certain words , phrases and statements that are music to the IC's ear. Its like chanting manthras in a pooja. The current key words as far as the IC is concerned is peace, talks and peace process. Other manthras of importance are negotiated settlement, democracy, pluralism, human rights, devolution, minority rights, inclusivity etc.
Impressing the IC
The important thing to remember is that only paying lip-service is required. Keep mumbling the jargon and go through the motions of peace process participation. In order to impress the IC Rajapakse would always appear to be reasonable and flexible. Take the Geneva talks for instance. Mahinda instructs his team to accept the accord. "Porunthuvelaa enda. Passay balamu" (Promise and come. Lets see later).
So the Geneva agreement is signed. But within 24 hours all sorts of new interpretations are given. A fresh stance is articulated. This negates the essence of what was agreed upon in Geneva. The LTTE is humiliated at the airport. Helicopters are not provided for internal transport thereby causing an unnecessary crisis. Making promises on the one hand in Geneva and defaulting in performance on the other in Sri Lanka is the stand adopted.
In a sense Mahinda is not being very original in this approach. The tragic history of Sinhala - Tamil relations in this country is replete with such instances. The first Sinhala film (produced by a Tamil S. M. Nayagam) to be made was 'Kadawuna Poronthuwa' or Broken Promise. The breakdown in ethnic relations is characterised by a trail of broken political promises. That history continues.
So this component of the strategy is quite simple. Appear to be reasonable and flexible and above all amenable to the IC requests. Talking to the Tigers? Yes of course! Strengthen the ceasefire? Yes certainly!! But act entirely the opposite in practice. Thus we witness the spectacle of refusing to dismantle the high security zones, we see assassinations of Tamil activists and the blatantly transparent support extended to alternate armed Tamil groups.
While impressing the IC in this manner attempts are made to diplomatically weaken and isolate the LTTE. The most convenient label is terrorist. The LTTE is essentially a freedom movement but some of the methods it uses are 'terroristic.' It is easy therefore for Colombo to get the LTTE proscribed internationally in a post - 9/11 world. Even here the GOSL is smart. It requests international proscription of the LTTE only for two reasons. One is to pressurise the Tigers into participating more actively in the peace process. The other is to protect Tamil expatriates from Tiger extortionists.
Isolation of LTTE
What is underway carefully and systematically is a slow process through which the LTTE is being driven away into the cold. The Tigers are being put in the international dog house. The purpose is long term. The isolation of the LTTE from the mainstream International Community would be of immense help to Colombo when all out war starts. A concerted transnational effort short of deploying actual personnel on ground could very much be on the cards.
Unfortunately the LTTE seems unable or unwilling to transform itself even as a tactic to prevent this phenomenon. It makes all the wrong noises and emits all the wrong signals thereby expediting its downfall. It appears utterly helpless in preventing or even forestalling the impending calamity. Some policies practised by the Tigers in Sri Lanka and abroad have proved counterproductive. It is now experiencing the consequences of such conduct.
Preparing for war
Meanwhile Rajapakse is preparing for total war. Shopping lists are being sent out. Diplomatic missions are undertaken to solicit support. Not so subtle efforts are being made to exploit differences among rival nations to stimulate competition in helping Lanka's war effort most. Plans are afoot for conscription. A war emergency declaration suppressing press freedom and concentrating power in Rajapakse's hands is very likely. Those who think Mahinda with the beatific grin is incapable of dictatorial tendencies are in for a nasty surprise. A Bonapartist is in the making.
If preparatory efforts are on for a total war there is overt and covert warfare of a limited nature going on at present. This is another important aspect of Rajapakse's regime. Overtly it is described as retaliatory and confined to specific objectives. Covertly it is an undeclared, shadow war, that is both provocative and retaliatory at times.
Whenever the LTTE crosses the line too much like the suicide bomber attack on army headquarters or the marine assault on a naval convoy retaliatory strikes are openly announced and implemented. Thus we had the air, sea and land assault on Muttur. Aerial bombardment, artillery firing from army camps and shelling from naval gunboats was done incessantly. The second time saw Muttur getting only artillery firing and naval gunboat shelling. Nothing from the air. But Kilinochchi and Mullaitivu districts experienced aerial bombardment.
The amazing thing about this is that Rajapakse has been able to get away with it. No international opprobrium at a policy which deliberately targets a segment of civilian population as collective punishment. Vicarious responsibility is being imposed upon a people for no fault of their own. The IC through its silence is being perceived as supportive of this. Again Rajapakse has been clever in responding this way only after a grave violation by the LTTE.
Violating the ceasefire
Thus the IC sees these acts as a consequence of LTTE behaviour. Both the GOSL and LTTE are guilty of violating the ceasefire and basic human rights. But the culpability of the GOSL is even higher but in a post - Iraq scenario the global policeman acts dumb.
On the other hand there is the covert warfare. On one level it is retaliatory and reactive. Those responsible are Tamil groups like the EPDP and TEMVP (Karuna faction). The security personnel provide logistical support. So if and when a soldier is targetted by the LTTE or pro-Tiger militia the alternative armed groups go ahead and bump off civilians suspected of having Tiger links. The GOSL propaganda machinery puts the blame on the LTTE or it is attributed to internecine intra-Tamil strife. The IC praises the "Commendable restraint" of the armed forces and the 'Buddhist' patience of Rajapakse.
There is also proactive and even provocative violence unleashed by the state. These are of different types and serve different goals. One result of the ceasefire has been the growing influence of the LTTE in GOSL controlled areas. This has created a potential fifth column in these areas. By targetting those supporters of the LTTE and those suspected of being connected to the Tigers the people are being driven through fear into Tiger controlled areas. Thus a potential fifth colum threat when open war erupts is being diminished.
There is also the deliberate provocative violence which targets the LTTE or Tiger supporters. The deep penetration squads are actively infiltrating LTTE areas and exploding landmines. Civilian supporter Vigneswaran is shot dead in Trincomalee. LTTE senior leader Ramanan is killed in Batticaloa. Muslim groups are being armed and instigated into targetting Tamil civilian supporters of the LTTE in Muttur. Sinhala home guards and criminal elements are being encouraged to engage in anti - Tamil violence with armed forces aiding and abetting.
Violence by armed forces
There are also acts of violence against civilians by armed forces. The Puthur, Nelliaddy, Allaipiddy killings, Manthuvil disappearances etc. are some of these. There are specific acts against LTTE supporters like businessmen, auto rickshaw drivers and barbers by Tamil paramilitary outfits like the EPDP. It is interesting to note that EPDP Chief Douglas Devananda is a minister in this cabinet. The trail of responsibility goes right up to ministerial level. Not even one person has been penalised so far for any act of violence against Tamil civilians.
All these acts are not individual or random acts of violence. There is method in this mayhem. A clear design is visible. The climate of impunity afforded by the Rajapakse regime and its active encouragement is very much conducive to the violence. What is going on now is calculated state terror. Colombo newspapers spoke of a 'Dog response' or 'Lion response' when it came to responding to LTTE violence. Naturally the regime headed by the Ruhunu lion chose the lion response. The state terror being unleashed is the lion response.
LTTE blamed
This does not mean that the LTTE is blameless. Of course it has to bear much blame. But there are three points to consider. Firstly Tiger violence is duly recognised and roundly condemned nationally and internationally whereas the state-inspired violence is neither identified correctly nor condemned deservedly. Secondly not all state violence is provoked by the LTTE. Much of it is initiated by state agencies. Thirdly the LTTE is after all a 'terrorist' outfit being proscribed by the IC. The GOSL is a democratically elected entity that has a greater responsibility to refrain from state terror.
These then are parameters of Rajapakse's policies towards the Tigers and by extension the Tamils. Against this backdrop is the slow build up of a Sinhala consensus for war. The farce that is an all party conference passes resolutions supportive of peace and negotiations for international consumption. Outside the conference the JVP and JHU and PNM carry on relentless campaigning for war against the LTTE which in practice would be against the Tamils.
It cannot be denied that Mahinda Rajapakse's task has been made much easier by the LTTE. The Tigers by their conduct and posturing have alienated much of international opinion. Erik Solheim rescued them several times and delayed the inevitable international backlash. The LTTE however keeps on blundering diplomatically again and again. Instead of being able to expose Mahinda Rajapakse for what he is the LTTE has succeeded in the impossible. They have managed to make even Mahinda look good in international eyes and get praised for his restraint.
Align with UNP
If Mahinda was really keen to free himself of JVP and JHU shackles the easiest course would be to align with the UNP. But he does not do that. Instead he travels along with them. Apart from being ideologically similiar Mahinda needs them to make him look moderate. Also they are building up the climate for hate and war. I think a national government comprising the JVP , JHU and hawks among the UNP will be a reality when open war breaks out. To a man of Mahinda's Chinthana war will be the best option to garner, consolidate and retain power.
Will Mahinda Rajapakse be able to achieve his objectives and usher in war? If he does so will he succeed in defeating the LTTE and re-structuring the Sri Lankan state under majoritarian hegemony? The answer to the first question rests primarily on the Sinhala people and the international community. The answer to the second lies in the LTTE.
Unless the Sinhala people and the international community recognise the true colours of Rajapakse total war would be inevitable. In such an eventuality the Tamil people will be forced to support or a least not oppose the LTTE. The war that will erupt would be a terrible, horrible one. Whichever side wins the ultimate losers will be Sri Lanka and her people.

வியாழன், மே 25, 2006

ஆங்கிலவாணிஆங்கில வாணி

„சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள்“ என்று மூன்று தொகுப்பு நூல்கள் 1997 ஆம் ஆண்டு இலங்கையில் வெளிவந்துள்ளன. இவற்றில் விபுலாநந்தரின் நூற்றி இருபத்தேழு (127) தமிழ் மொழி, ஆங்கில மொழிக் கட்டுரைகள் இடம்பெறுகின்றன. அவரது ஆக்கங்கள் முழுவதும் தொகுக்கப்பட்டு விட்டன என்று சொல்லமுடியாவிட்டாலும், அனேகமானவை தொகுக்கப்பட்டு விட்டன என்று தொகுப்பசிரியர் உரையில் சொல்கிறார்கள் இப்பணியை மேற்கொண்ட வ. சிவசுப்பிரமணியம் மற்றும் சா.இ.கமலநாதன் ஆகியோர்.
„சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள்“ – தொகுதி-3 இல் ஆங்கில வாணி என்ற ஒரு கட்டுரை இருக்கின்றது. இது பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் மணிமலருக்காக 1941 ஆம் ஆண்டு எழுதப்பட்டு அந்த மலரில் வெளிவந்துள்ளது. ஷேக்ஸ்பியரின் கவிதை வனப்பினை எடுத்துக் காட்டுவதற்காக அவரது நாடகங்களில் இருந்து சில காட்சிகளை மட்டும் மொழிபெயர்த்து இக்கட்டுரையிற் சேர்த்திருக்கிறார். ஷேக்ஸ்பியரின் „கவிவனப்பினை மதங்க சூளாமணியில் சற்று விரிவாகக் கூறியிருக்கிறாம்“ என்று விபுலாநந்தர் இக்கட்டுரையின் ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். ஆங்கில வாணி என்பது ஆங்கில இலக்கியம் என்ற தலைப்பாக நாங்கள் எடுத்துக்கொள்ளலாம். மூன்று பகுதிகளாக இதில் இடம்பெறுகிறது.

இங்கே ஆங்கிலவாணி-பகுதி-I படிக்கலாம்

கீழே இரண்டாவது பகுதி


நூல்: சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள் தொகுதி-3
முதற்பதிப்பு: டிசம்பர்-1997
வெளியீடு: கல்வி,பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை அமைச்சு; வடக்கு-கிழக்கு மாகாணம், திருகோணமலை

ஆங்கில வாணி-IIதொடர்ச்சி:

பிளூத்தாக் (Plutarch) எனப் பெயரிய யவனபுரத் தறிஞர் இயற்றிய வீரர்வாழ்க்கைச் சரிதங்கள் என்னும் நூலின் வழியாக அனேக சரித்திரங்களையும், ஆங்கிலநாட்டு மன்னர் சரித்திரங்கள் பலவற்றையும் செகசிற்பியர் நாடகமாக்கி உலகிற்கு அளித்தார். ஆங்கில மொழி உலகில் வழங்குங் காலம் வரையும் இப்பெருங்கவியின் பெயர் நின்று நிலவும். ஆங்கில நாடு பெருஞ் சிறப்புற்றிருந்த காலத்திலே தோன்றிய செகசிற்பியாரைப் போலத் த்மிழ்நாட்டு மன்னர் கடல்கடந்து சென்று பல நாடுகளிலும் தமது வெற்றிக்கொடி நாட்டிய காலத்திலே தோன்றிய கம்பநாடர், உலகு புகழும் வனப்பு வாய்ந்த காப்பியத்தை வகுத்தளித்தார். வீரத்தையும், ஆண்மையையும் மக்கள் நீர்மையையும் சித்தரித்துக் காட்டும் வகையிலே இரு பெருங்கவிஞரும் ஒத்தபான்மையர்; இருவர் நாவிலும் நின்று கவிதை சுரந்தளித்தவள் ஒருத்தியன்றோ?

இக்காலத்திலே மில்தனார் எனப்பெரிய காப்பியக் கவியும் வாழ்ந்தார். யவனபுரத்துக் காவியங்களிலே நன்கு பயின்று, அவை தம்முட் பொதிந்த வனப்பு விளங்கச் செய்யுள் செய்தார். அவரியற்றிய பெருங்காப்பியம் ‚சுவர்க்க நீக்கம்’ எனப் பெயரியது. இதன் ஒருபகுதியினைத் தமிழ்ப்பெருங்கவி வெ.ப.சுப்பிரமணியமுதலியாரவர்கள் தமிழ் விருத்தச் செய்யுளில் மொழிபெயர்த்துள்ளார்கள்.
தேவாசுர யுத்தங்கூறுதலின் இந்நூல் கந்தபுராணம் போன்றது. வானுலகத்திலே ஆண்டவன் முன்னிலையிலிருந்த தேவர்களின் மூன்றின் ஒருபகுதியார் இறைவனாணைக்கு அமைந்து நடக்காத காரணத்தினாலே நரகராயினர். இவர்கள் தலைவனாகிய ஒளிவண்ணன் சாத்தானாயினான். இந்த எல்லையிலே, இறைவன் இம்மண்ணுலகையும் புல், பூண்டு, மரஞ்செடி, கொடி, பறவை, விலங்கு, மீன் எனும் இவற்றையும் படைத்து இறுதியிலே மன்பதைக்குத் தந்தை தாயாராகிய அத்தனையும், அவ்வையையும் படைத்து அவர் தம்மை ஏதேன் எனும் உவவனத்தில் இருத்தினார். இவ்வுவவனம் பேரழகுடையது. இதன் நடுவிலே கலை ஞானத்தருவிருந்தது. அதன் கனியை உண்ணவேண்டாமென்று ஆதித்தந்தை தாயாருக்கு ஆண்டவன் ஆணையிட்டிருந்தனர். சாத்தான் அவர்களை வஞ்சித்துக் கனியை உண்ணுமாறு செய்தனன். அக்குற்றத்திற்காக அத்தனும் அவ்வையும் பூலோக சுவர்க்கமாகிய உவவனத்திலுருந்து துரத்தப்பட்டனர். இதுவே காப்பியத்தின் கதை.
ஐந்தாம் பரிச்சேதத்தின் தொடக்கத்திற் சில அடிகளின் மொழி பெயர்ப்பினைத் தருகிறோம்.

நித்திலத்தை வாரி நிலத்தில் உகுத்தது போல்
காலைப் பரிதி கதிர் காலும் வேளையிலே,
உள்ளக் கவலையின்றி உணவுடலிற் சேர்தலினால்,
நன்கு துயின்றெழுந்த நல்லோர் புகழ் அத்தன்
இளங்காற் றிசையொலியும், இன்ப இலையொலியும்,
வளஞ்சான்ற நீரருவி வாய்நின் றெழுமொலியும்,
பள்ளி யெளிச்சிப்பண் பாடுகின்ற புள்ளொலியும்,
ஆரா உவகைதர, அன்பிதயத் துள்ளூரச்,
சீரார் இளமான், திருமகள் போல்வாள் அவ்வை,
காதற் கிளியனைய கட்டழகி, எந்நாளும்
வைகறையில் முன்னெழுவாள் மலர்ச் சயனம் விட்டகலாச்
செய்கையினை நோக்கி, அவள் செந்தா மரைவதனம்
ஏறச் சிவந்த இயல்பும், மலர் கூந்தல்
சீர்சிதைந்து சோர்ந்த செயலுங்கண் டுள்ளுருகி,
எழிலார் மட நல்லார் இன்றுயிலுஞ் சீரிதே
என்னவுளத் தெண்ணி இளந்தென்றல் மென்மலர்மேற்
சென்று வருடுந் திறமனைய மெல்லொலியில்,
„என்னா ருயிர்த் துணையே; ஈசன் எனக்களித்த
செல்வ நிதியே செழுந்துயில்நீத் தேயெழுவாய்,
புத்தமிழ்தே!, அன்பே புலரிப் பொழுதினிலே,
வாச மலர்க்கொடியில் வண்டினங்கள் தேன் அருந்தும்
விந்தையினைக் காண்போம், விழிதுயில்நீத் தேயெழுவாய்,
வண்ணவண்ணப் பூக்கள் மலர்ந்தனகாண்“ என்றுரைத்தான்;
ஆங்கவளும் இன்றுயில்நீத் தன்பன் முகநோக்கி
„மேதகவு செம்மைநெறி மேவியஎன் னன்பரே!
காதலரே! நும்முகமும் காலை இளம்பொழுதும்
கண்டேன்; கவலையற்றேன்; கங்குற் பொழுதினிலே,
கனவோ நனவோ நான் கண்டதொரு காட்சியினை
விண்டுரைப்பேன் கேளீரிம் மேதினியில் வந்ததற்பின்,
நாளின்பின் நாள்கழிய நாளையென்ப தொன்றறியாத்
துன்ப மறியாத் தொடக்கறியா வாழ்க்கை துய்த்தேன்;
கடந்த இரவிற் கலக்கமுறுஞ் செய்திகண்டேன்;
நின்குரல்போல் மென்குரலில், நித்திரையோ அவ்வையே!“
இனிய நிசிப் பொழுதில் எவ்விடத்தும் மோனநிலை.
வட்ட மதியம் உயர்வானின் றொளிகாலும்;
இருள்குவிந்த மென்னிழலால் எங்கெங்கும் எப்பொருளுங்
கண்ணுக் கினியகண்டாய், காரிகையே! வானுறையும்
விண்ணவர்நின் பேரழகில் வேட்கையுற்ற நீர்மையராய்க்
கண்ணிமையார் நோக்குதலைக் கண்டிலையோ,’ ‚என்றுரைக்க
எழுந்தெங்கும் நோக்கினேன்; இன்குரலின் பின்சென்றேன்;
ஞானத் தருவிடத்தை நண்ணினேன், ஆங்கொருவன்
வானோர் படிவத்தன் வாய்விட் டுரைபகர்வான்;
“கண்ணுக் கினிய செவிக்கினிய வாய்க்கினிய
உண்ணத் தெவிட்டா உணர்வமிழ்தச் செங்கனிகள்
எண்ணென் கலைஞான இன்கனிகள் தாங்கிநின்ற
செல்வ மரமே நின் செழுங்கிளைகள் பாரித்த
தீங்கனியை மானிடருந் தேவர்களும் உண்டிலர்காண்;
கல்வி யறிவைக் கடிந்தொதுக்கல் சீரிதோ?
உண்பல்யான்“, என்றான் ஒரு கனியை வாய்மடுத்தான்;
ஆணை கடந்தசெயல் ஆதலினால் நான் அஞ்சி,
ஒருபால் ஒதுங்கினேன்: உரவோன்பின் னும்மொழிவான்,
“மானிடர் இத் தீங்கனியை மாந்துவரேல், வானுலக
இன்பம் பெறுவார்; எழிற்பாவாய் அவ்வையே!
இக்கனியை உண்ணுதியேல், எழிலார் அரமகளிர்
தோற்றப் பொலிவுடனே தூயஅறி வும்பெறுவாய்;
வானத் திவர்ந்து செல்லும் வல்லமையும் நீ பெறுவாய்
நாகநாட் டோர்தம் நலம்பெறுவாய்.“ என்று சொல்லி,
ஓர்கனியத் தந்தான் உயர் மணமுந் தீஞ்சுவையும்
புலன்வழியென் சிந்தைபுகப் புதுக்கனியை வாய்மடுதேன்
ககனத் தெழுந்தந்தக் கந்தருவன் பின்போனேன்;
மேகமியங்கும் வியன்புலத்தைத் தாண்டியபின்,
மேதினியை நோக்கி வியந்தேன்; அவ்வெல்லையிலே
கந்தருவன் சென்றுவிட்டான்; கண்டுயின்றேன் காதலரே!
கனவீ தெனவறிந்தேன் கலக்கந் தெளிந்த “ தென்றாள்.

செகசிற்பியார் காலம் கி.பி. 1564 முதல் 1616 வரை ஆகும். மில்தனார் காலம் 1608 முதல் 1674 வரை ஆகும். டிறைடன் என்னும் அகலக் கவி 1631 முதல் 1700 வரையும் வாழ்ந்தார். பாப்பு என்னும் இலக்கணக் கவி 1688 முதல் 1744 வரை வாழ்ந்தார்.

செவ்வாய், மே 23, 2006

Bertolt Brecht: Der Rauch

புகை


ஏரியின் ஓரம் மரங்களின் கீழே அந்தச் சிறிய வீடு
கூரையில் இருந்து புகை கிளம்பிப் போகிறது
அது இல்லையென்றால்
எத்துணை அநாதரவானவை
வீடும் மரங்களும் ஏரியும்.Der Rauch


Das kleine Haus unter Bäumen am See.
Vom Dach steigt Rauch
Fehlte er
Wie trostlos dann wären
Haus, Bäume und See.

திங்கள், மே 22, 2006

விபுலாநந்தரின் ஆக்கங்கள்

படங்கள்/Photos: ©தமயந்தி/©Damayanthi,நோர்வே/Norway
ஆங்கில வாணி

„சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள்“ என்று மூன்று தொகுப்பு நூல்கள் 1997 ஆம் ஆண்டு இலங்கையில் வெளிவந்துள்ளன. இவற்றில் விபுலாநந்தரின் நூற்றி இருபத்தேழு (127) தமிழ் மொழி, ஆங்கில மொழிக் கட்டுரைகள் இடம்பெறுகின்றன. அவரது ஆக்கங்கள் முழுவதும் தொகுக்கப்பட்டு விட்டன என்று சொல்லமுடியாவிட்டாலும், அனேகமானவை தொகுக்கப்பட்டு விட்டன என்று தொகுப்பசிரியர் உரையில் சொல்கிறார்கள் இப்பணியை மேற்கொண்ட வ. சிவசுப்பிரமணியம் மற்றும் சா.இ.கமலநாதன் ஆகியோர்.
„சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள்“ – தொகுதி-3 இல் ஆங்கில வாணி என்ற ஒரு கட்டுரை இருக்கின்றது. இது பண்டிதமணி மு.கதிரேசன் செட்டியார் மணிமலருக்காக 1941 ஆம் ஆண்டு எழுதப்பட்டு அந்த மலரில் வெளிவந்துள்ளது. ஷேக்ஸ்பியரின் கவிதை வனப்பினை எடுத்துக் காட்டுவதற்காக அவரது நாடகங்களில் இருந்து சில காட்சிகளை மட்டும் மொழிபெயர்த்து இக்கட்டுரையிற் சேர்த்திருக்கிறார். ஷேக்ஸ்பியரின் „கவிவனப்பினை மதங்க சூளாமணியில் சற்று விரிவாகக் கூறியிருக்கிறாம்“ என்று விபுலாநந்தர் இக்கட்டுரையின் ஒரு இடத்தில் குறிப்பிடுகிறார். ஆங்கில வாணி என்பது ஆங்கில இலக்கியம் என்ற தலைப்பாக நாங்கள் எடுத்துக்கொள்ளலாம். மூன்று பகுதிகளாக இதில் இடம்பெறுகிறது.


நூல்: சுவாமி விபுலாநந்தரின் ஆக்கங்கள் தொகுதி-3
முதற்பதிப்பு: டிசம்பர்-1997
வெளியீடு: கல்வி,பண்பாட்டலுவல்கள்,விளையாட்டுத்துறை அமைச்சு; வடக்கு-கிழக்கு மாகாணம், திருகோணமலை

ஆங்கில வாணி


திருமலிந்தோங்கிய நிலவுலகத்தின் வடமேற்குக்கோடியிலே, பவளம் பொலிந்து விளங்கும் ஆங்கில நாட்டின் கலைச்செல்வத்தை ஆராயப்புகுமுன், அந்நாட்டு மக்களது வரன்முறையை ஒரு சிறிது அறிந்து கொள்ளுதல் இன்றியமையாததாகும். நாற்றிசையினும் கடலினாற் சூழப்பட்ட பிரித்தானியா என்னும் தீவின் வடபாலிலே ஒருபகுதி, ஸ்காட்லாந்து எனப்படும். மேற்றிசையிலே ஒருபகுதி, உவேல்சு எனப்படும். இவ்விருபகுதியும் நீங்கலாக எஞ்சி நின்ற பெரும்பாகம் இங்கிலாந்து (அங்கிளத்தரை) எனப்படும். ‚அங்கிளர்’ என்னும் மொழிதிரிந்து ஆங்கிளர், ஆங்கிலர், இங்கிலீஷ் எனவாயிற்று. தெற்குக் கரையிலே சுண்ணக் கற்பாறைகள் மருவிக் கடலிலிருந்து நோகுவொருக்கு கரை வெண்ணிறமாகத் தோற்றுதலின், ஆங்கில நாட்டுக்கு அல்பியன் (albion) வெண்ணிறத்தீவு, சுவேதத்துவீபம் என்னுங் கவிதைப் பெயருண்டு. மேறிசையிலே கடலுக்கப்புறத்திலே ஐர்லாந்து என்னும் தீவு உளது. இது பசும் புற்றரைகள் செறிந்திருத்தலின், மரகதத் துவீபம் எனும் கவிதைப் பெயர் பெற்றது.

மேற்குறித்த நான்கு தேசங்களிலும் வாழும் மக்கள் வெவ்வேறு இனத்தினர். ஸ்கொட்ஸ், உவெல்ஷ், இங்கிலீஷ், ஐரிஷ் என்னும் நான்கு இனத்தவரும் ஆதியிலே வழங்கிய மொழிகளும் நால்வேறு ஆவன. பூர்வத்தில் இவர்கள் கைக்கொண்ட சமயமும் வேறு. ஆங்கிலர் வருவதற்கு முன் பிரித்தானியாவின் கீழ் , தென் பாகங்களில் வாழ்ந்த மக்கள் பிரித்தன் என்னும் இனத்தினர். இவர்கள் வெளிநாட்டுத் தொடர்பின்றி நானகரிகன் குறைந்தவர்களாயிருந்தனர்.

இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மூற்பட்ட காலத்திலே இத்தாலி தேசத்தின் தலைநகரமாகிய உரோமாபுரியானது பெரிய சரக்கரவர்த்திகளுக்குரிய இராசதானியாக விளங்கியது. இச் ச்க்கரவர்த்திகள் தங்கள் இயற்பெயரோடு சீசர் என்னும் விருதுப் பெயரினச் சார்த்தி ஆகஸ்தஸ் சீசர், திபேரியஸ் சீசர், கிளோடியஸ் சீசர் என்றித்தகைய பெயர்களைத் தாங்கினார்கள். சீசர் என்னும் பெயரினைத் தமக்கு இயற் பெயராகக் கொண்டவர் யூலியஸ் சீசர் எனப் பெயரிய பராக்கிரமசாலி. இவர் உரோமாபுரிச் சேனைகளுக்குத் தளபதியாகச் சென்று பல நாடுகளை மேற்கொண்டு உரோமச் சக்கராதிபத்தியத்தின் எல்லையை அகலச் செய்தார். கிளோடியஸ் சீசர் காலத்திலே கி.பி. 43 ஆம் ஆண்டிலே, பிரித்தானியாவின் தென்கீழ்ப்பாகங்கள் உரோமரது ஆளுகைக்குட்பட்டன: வடபாலிலுள்ள கலிடோனியா எனப்படும் ஸ்கொட்லாந்தை உரோமர் கைப்பற்றவில்லை. நானூறு ஆண்டுகளுக்கு உரோமர் ஆங்கில நாட்டை ஆண்டனர். அக்காலத்திலே அவர்கள் அமைத்த பாதைகளும், பாலங்களும் இன்றும் இருக்கின்றன. உரோமச் சக்கராதிபத்தியம் நிலைகுலைந்த காரணத்தினாலே உரோமர் வெளியேறிய பின், வடபாலிலுள்ள ஸ்கொட்ஸ் தெற்கே வந்து ஆநிரைகளைக் கவர்ந்து பிரித்தானியரைச் சிலகாலம் துன்புறுத்தினர்.
ஐந்தாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலே ஜெர்மனி, ஸ்கண்டிநேவியா (இக் காலத்து நோர்வே, சுவீடன்) நாடுகளிலிருந்து கடல் கடந்து சென்ற சாக்சனியரும், அங்கிளரும் பிரித்தானியாவின் கீழ்த்திசையிலே, சில பகுதிகளைப் பற்றி ஆளுகை புரிந்தனர். தேன்மார்க் நாட்டினராகிய தேனர் அவரை மேற்கொண்டு தம்மாணை செலுத்தினர். ஐந்நூறு ஆண்டுகளுக்கு நாடு பல குறுநில மன்னர்களால் ஆளப்பட்டு வந்தது. இவ்வாறு வந்து குடியேறினோர் பலருடைய கலப்பினாலே ஆங்கில மக்கள் தோன்றினர். வாடைக்காற்றுக்கஞ்சாது சிறு படகுகளிலே கடல்மீது சென்ற வைக்கிங்ஸ் என்னும் ஆங்கில முன்னோர் போர்த்தொழிற் பிரியராயிருந்தனர். பண்டைத் தமிழ் நாட்டிலிருந்த குறுநில மன்னரைப்போலப் பூர்வ ஆங்கிலரும் ஒருவரோடொருவர் போர்மலைந்து கொண்டிருந்தனர். சிறையாகப் பிடிக்கப்பட்டு உரோமாபுரியை அடைந்த ஆங்கில இளைஞர் சிலரைக் கண்ட கத்தோலிக்க கிறீஸ்தவ சமயத் தலைமைப் பீடாதிபதி யாகிய பாப்பரசர் அவ்விளைஞர்கள் தோற்றப் பொலிவை நோக்கி வியந்து இவர்கள் ‚அங்கிள்ஸ்’ அல்ல ‚ஏஞ்ஜெல்ஸ்’ (வானவர்) எனக்கூறி ஆங்கில நாட்டிலே கிறிஸ்தவ சமயத்தைப் பரப்பும்படி சில குருமாரை அனுப்பினர்.
கிறிஸ்தவ சமயம் புகுவதற்கு முற்பட்ட காலத்திலே, அங்கிள சக்ஸன் என்னும் பூர்வ ஆங்கிலத்திலே பெயவுல்வ் (Beowulf) எனப்பெரிய காப்பியமொன்று இயற்றப்பட்டது. இஹன் பகுதிகள் இன்றும் இருக்கின்றன. கிறிஸ்து சமயம் புகுந்தபின் பழைய போர்த்தொழிலைக் கைவிட்டு மக்கள் கட்டுகடங்கி வாழத் தொடங்கினர். கவிகளும் சமய சம்பந்தமான நூல்களை ஆக்கினர். கேய்ட்மன்(Caedmon) கயின்வுல்வ்(Cynewulf) அல்பிரட் அரசர்(King Alfred) என்றின்னோர் ஆக்கிய நூல்கள் சமய சம்பந்தமானவை.

கி.பி. 1066 ஆம் ஆண்டிலே, பிராஞ்சு தேசத்தின் வடபாலிலுள்ள நோர்மாண்டி நாட்டுச் சிற்றரசனாகிய உவில்லியம் என்பான், ஆங்கில நாட்டின்மீது படையெடுத்துச் சென்று வெற்றிகொண்டு அந் நாட்டின் முடிமன்னனானான். இவனை உவில்லியம் –த-கொங்கரர்- ‚வாகை சூடிய உவில்லிய மன்னன்’ எனச் சரித்திர நூலாசிரியர் கூறுவர். இம்மன்னனோடு நோர்மானிய, பிராஞ்சியர் அநேகர் ஆங்கில நாட்டிலே குடியேறினர். ஆங்கில மொழியும் நோர்மானிய பிரஞ்சுப்பதங்களை ஏற்று வழங்கத் தொடங்கியது. அதனாற் பாஷையானது வலமெய்தியது. ஆயினும் நாட்டிலே அரசியற் கலக்கமிருந்தமையின், பெரிய நூல்கள் தோன்றவில்லை. முந்நூறாண்டின் எல்லையிலே நோர்மான் பிராஞ்சியர் வேறுபாடின்றிக் கலந்து ஆங்கிலரோடு ஒன்றாயினர். நாட்டிலும் சமாதானம் நிலவியது.

கி.பி. 1340 முதல் 1400 வரையும் வாழ்ந்த சாசர் (Chaucer) என்னும் கவியை ஆங்கிலக் கவிதைவானின் உதயதாரகையென இலக்கிய வரன்முறை ஆசிரியர் கூறுவார். இவர் முதலிலே தோன்றிய காரணத்தினாலே பெருமையுற்றனரேயன்றிக் கவித்திறமையினால் அல்ல. பிராஞ்சிய செய்யுள் மரபினைப் பின்பற்றிப் புது யாப்புமுறைகளை வழங்கினார். கந்தர்பெரி எனப் பெயரிய ஆலயத்திற்கு யாத்திரை புரிந்த யாத்திரிகர்கள், வழியிலே ஒரு சத்திரத்தில் இறங்கி நிற்கும் போது தத்தமது யநுபவத்திலே கண்டறிந்த சரித்திரம் ஒவ்வொன்றைக் கூறுவதாக அமைத்துக் கந்தர்பெரிக் கதைகள் என்னும் காப்பியத்தையும் சில சிறு நூல்களையும் சாசர் வகுத்தார். சாசர் காலத்திலிருந்த ஒரு நூற்றைம்பது ஆண்டுகளுக்குப் பின் வாழ்ந்த ஸ்பென்சர்(கி.பி. 1552-1599) என்னும் மகாகவி கவிஞர்க்குள் கவிஞர் எனப் போற்றப்பட்டார். இவரியற்றிய அரமடந்தையார் இராணி (Fairy Queen) என்னும் பெருங்காப்பியம் கவிநயம் நிறைந்தது, கற்பனையிலும் செஞ்சொல்லாட்சியிலும் நமது சீவகசிந்தாமணியை நிகர்த்தது. ஸ்பென்சர் காலத்திலே ஆங்கில நாட்டிலே அரசு புரிந்த எலிசபெத்து இராணி இல்வாழ்க்கையுட் புகாமல் , மணிமுடிசூடி நாட்டினைப் பரிபாலித்தலிலே முழுமனத்தையும் செலுத்தி வந்தாள். பாவாணர்களயும் சேனைத்தலைவர்களையும் பாராட்டி அவர்களுக்கு வேண்டுவ நல்கினாள். அதனாற் கைதை வளம் எய்தியது. மக்களுடைய சிந்தை விசாலிப்பதற்கு வேறு சில சரித்திர நிகழ்ச்சிகளும் ஏற்பட்டன. அவற்றைச் சுருக்கமாக் கூறுகின்றாம். எலிசபெத்து இராணியே ஸ்பென்சரது பெருங்கப்பியத்திற்குக் கவிதைத் தலைவி. எலிசபெத்திலன் தந்தையாகிய எட்டாம் ஹென்றி மன்னன் காலத்திலே ஆங்கில நாட்டு மதக் கொள்கையிலே ஒரு பெரிய மாறுதல் ஏற்பட்டது. இம்மன்னன் ஒருவர் பின் ஒருவராக ஆறு மனைவியரை மணந்தான். முதல் மனைவியை நீக்கிவிட்டு இரண்டாம் மனைவியை முறையாக விவாகஞ் செய்து இராணியாக்குதல் கருதி, அவ்வாறு செதற்கு உத்தரவளிக்கும்படிக்குத் தனது சமயத் தலைவராகிய உரோமாபுரிப் பாப்பரசரை வேண்டினான். கத்தோலிக்க கிறிஸ்தவ சமயக் கொள்கைப்படி முறையின் மணந்த மனைவியை நீக்குதல் மரபண்ரு ஆதலின், பாப்பரசர் உத்தரவளித்திலர். ஹென்றி னன்னன் அவரது ஆணைக்கு அடங்காது, ஆங்கில நாட்டின் தலைமையோடு அந்நாட்டு மக்களின் சமய நெறித் தலைமையையும் தானே தாங்குவதாக முற்பட்டுக் கத்தோலிக்க சமயத் தொடர்பினின்று நீங்கி, ஆங்கில திருச்சபையென ஒன்றினையேற்படுத்திச் சில சமய அத்தியஷர்களத் தன்வசப்படுத்தித் தன் கருத்தை நிறைவேற்றினான். இதனால், ஆங்கில நாட்டு மக்களின் சிந்தையிலே ஒரு புத்துணர்ச்சியேற்பட்டது.

ஐரோப்பியர், அமெரிக்காக் கண்டத்தினைக்கண்டு பிடித்தது மற்றொரு விசேஷ நிகழ்ச்சி. கிறிஸ்தோபர் கொலம்பஸ் என்னும் மீகாமன் ஸ்பானியா தேசத்து இராணியாகிய இசபெல்லாவின் பொருளுதவியைப் பெற்றுக்கொண்டு மேற்குக் கடலைக் கடந்து இந்தியாவுக்குச் செல்லும் ஒரு புதிய மார்க்கத்தைக் கண்டுபிடிக்கும் நோக்கமாகச் சில பாய்க் கப்பல்களை அமைத்துக் கொண்டு புறப்பட்டான். அக்காலட்தில் நமது பாரத நாடு பெருஞ் செல்வமுற்ற நாடாக விளங்கியது. நமது நாட்டு விளைபொருள்கள் அராபிக்கடல்,பாரசீகக்கடல், செங்கடல் வழியாகச் சென்று பின்பு தரைவழியாகவும், மத்தித்தரைக்கடல் வழியாகவும் இத்தாலி நாட்டுத் துறைமுகங்களை அடைந்தன. வேனிஸ் நகரம் சிறந்த வர்த்தக ஸ்தலமாக விளங்கியது. இந்தியாவில் இருந்து சென்ற பட்டுத்துணிகளும், பொன்னும், முத்தும், யானைத்தந்தமும் மிளகும் சந்தனமும் இலவங்கப்பட்டையும் பிறவும் மேனாட்டு மக்களுடைய உள்ளத்தைக் கவர்ந்தன. பூவுலகம் கோளவடிவமானது எனும் கருத்து மெனாட்டிலே பரவிய அக்காலத்திலே கிழக்கு நோக்கி இந்தியாவுக்குச் செல்ல ஒரு பாதை இருப்பதினாலே மேற்கு நோக்கிச் செல்லவும் ஒரு பாதை இருக்க வேண்டுமெனும் எண்ணம் கல்வியறிவுடையோர் சிந்தனையில் உலவியது. கொலம்பஸ் புறப்பட்டு இந்தியாவுக்குச் செல்லும் வழி காண்பதற்கு; ஆனால் கண்டு பிடித்தது அமெரிக்காக் கண்டத்தை. கி.பி. 1642 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திலே கொலம்பஸ் மத்திய அமெரிக்காவிலே சில தீவுகளை அடைந்தான். அக் காலத்திலே மத்திய அமெரிக்காவிலே மெக்சிக்கோ, பீரு என்னும் நாடுகள் சிறந்த நாகரிகம் அடைந்திருந்தன. மிகப் பழைய காலத்திலே,தமிழ் நாட்டு வணிகர் கிழக்கு நோகிக் கடல் கடந்து சென்று மத்திய அமெரிக்காவை அடைந்தனர் என்றும் அங்கு நிலவிய நாகரிகம் நமது நாகரிகத் தொடர்புடையதென்றும் அறிஞர் கருதுகின்றனர். சாமன் லால் என்னும் ஆசிரியர் எழுதிய இந்து அமெரிக்கா என்னும் நூலிலே பல் சான்றுகளோடு இவ்வுண்மை நிறுவப் பட்டிருக்கிறது. அஃது ஒரு பாலாக மேனாட்டாராகிய கொலம்பஸ் மீகாமன் அமெரிக்காவைக் கண்டு பிடித்த பின் ஸ்பானியா தேசத்து மக்கள் துப்பாக்கியோடு சென்று மத்திய அமெரிக்க மன்னரைட் தந்திரத்தாலும் துப்பாக்கி வன்மையாலும் சிறைப்படுத்தி அவர்கள் குவித்து வைத்த போனைக் கவர்ந்து கொண்டு தம்மூர்க்கு வந்தனர். ஆங்கில நாட்டினராகிய கடற்கொள்ளைக்காரர் இடையில் நின்று அப்பொன்னின் ஒரு பகுதியைக் கைப்பற்றிக் கொண்டு தம்மூர்க்குச் சென்றனர். அஃதன்றியும் எலிசபேத் இராணியின் அரசியலாற்றலினாலே ஆங்கில நாட்டுச் சைனியங்கள் சில போர்க்களங்களிலே ஸ்பானிய சேனைகளை வெற்றி கொண்டன. ஐரோப்பாவின் மேற்குக் கரையில் உளவாகிய போர்த்துக்கல், பிரான்சு, ஒல்லாந்து நாடுகள் கடல் வர்த்தகத்தினாலேயே பொருளீட்டினவெனினும், பொருளும் கடற்படையுந் திரட்டியவகையில் ஆங்கில நாடே முன்னணியில் நின்றது.


மேனாட்டார் அறிவு விசாலிப்பதற்குரிய மற்றொரு நிகழ்ச்சி அராபியா தேசத்திலே நிகழ்ந்தது. திருநாவுக்கரசு சுவாமிகள் நமது நாட்டில் இருந்த காலத்திலே அராபியா நாட்டு மக்கம்மா நகரிலே முகம்மது நபி அவதரித்தார். நபியின் சிஷ்ஷிய பரம்பரையில் வந்தோர் மேற்கேயுள்ள பலநாடுகளிலே ஆணை செலுத்தி அரசு புரிந்ததோடு கூட அறிவொளிவிளங்குமாறுஞ் செய்தார்கள். கிறிஸ்து நாதர் காலத்திற்குப் பல நூற்றாண்டுகளின் முன்னே யவனபுரத்தில் வாழ்ந்த அறிஞர்கள் இயற்றிவைத்த அரிய கலைநூல்கள் அராபியர் வழியாக மேனாட்டிலே பரவி அறிவொளிபரப்பின. யவனவாணியின் செல்வப் புதல்வியருள் ஒருவராக ஆங்கில வாணி உதித்தாள்.
ஆண்டவன் ஒருவனேயாயினும் பற்பல நாட்டு மக்கள் அவனுக்குப் பற்பல திருநாமங்களைத் தந்து வழிபடுமாறு போலச் சொல்லின் கிழத்தியாகிய கலைவாணியும் பற்பல நாட்டு மொழிச்சார்பினாலே பற்பல உருவங்களை வகித்தாள். ஆதியிலே நான்முகக்கடவுளது நாவிலிருந்து வேதத்தையருளி இடைக் காலத்திலே வேதவியாசரது நாவினின்று மகாபாரதத்தைத் தோற்றுவித்துக் காளிதாசனையுள்ளிட்ட உத்தமக் கவிகளது நாவிலே களிநடம் புரிந்தாள் ஆரியவாணி. இமயத்திற்கு வடபாலதாய் உத்தர குருவெனப் புராணங்கள் கூறும் போக பூமியையுள்ளிட்டதாய், நாற்பது கோடி மக்களுக்கு உறைவிடமாகிய சீனத்திலே தோன்றிய கவிவாணரது நாவினை இருப்பிடமாக்கிக்கொண்டாள் சீனவாணி. பண்டைக் காலத்திலே, யவனபுரத்தாரோடு போர் மலைந்தும் நட்புப் பூண்டும் மேற்றிசைக்கும் கீழ்த்திசைக்கும் நடு நாடாகி, அக்கினி தேவனை வழிபடுவோருக்கு உறைவிடமாகிப் பொலிந்த செல்வப் பாரசீகப் பழந்தேசத்து மக்கள் களிகூரும் வண்ணம் அந்நாட்டுப் புலவர் நாவினின்று கவிசுரந்தளித்தாள் பாரசீக வாணி. ஹோமார் என்னும் அந்தகக் கவியின் நாவிலிருந்து துரோயம் என்னும் ஈலிய நாட்டிலே நிகழ்ந்த போரினை விரித்துக் கூறும் ஈலிய காவியமும் அப்போர்க் களத்திலே சிறந்து விளங்கிய உலீசன் (Ulysses Odysses)என்னும் வீரனது நிகழ்ச்சிகளைக்கூறும் உலீச காவியமும் ஆகிய வீர காவியங்களை அளித்தும் , ஐய்க்கிலீஸ், அரிஸ்தொபனீஸ், இயூரிப்பிடீஸ், என்னும் நாடகக் கவிகள் வாயிலாக என்றும் புலராது யாணர் நாட் செல்கினும் நின்றலர்ந்து தேன் பிலிற்றும் நீர்மையவாக்ய அழகிய நாடகங்களை அளித்தும், பிண்டார் என்னும் கவிவானர், சஃபோ என்னுங் கவியரசி வாயிலாக அகப்பொருட்டுறை தழுவிய இசைப் பாடல்களைத் தோற்றுவித்தும் சோக்கிரதீஸ், பிளேத்தோ, அர்ஸ்தாத்தில் என்றித் தொடக்கத்த தத்துவஞானிகள் வாயிலாக உண்மைநூல், ஒழுக்கநூல்களைட் தொற்றுவிட்தும் பண்டை யவன மொழிக்கு ஆக்கமளித்தாள் யவன வாணி. உரோமவாணி, இத்தாலியவாணி, ஜெர்மானிய வாணி,பிராஞ்சியவாணி யென்றின்னோரெல்லாம் யவனவாணியின் செல்வப் புதல்வியரேயாவர்.
கணிதம், சிற்பம், வைத்தியம், காவியம், தர்க்கம், தத்துவம் என்னும் அருங்கலைகளுக்கெல்லாம் தாயகம் யவனபுரமேயாகும். ஆதலினாலன்றோ, மேனாட்டுக் கலைக்கழகங்களிலே, யவனபுரத்டு மொழியாகிய கிரேக்க மொழியும் உரோமருக்குரிய லத்தீன் மொழியும் பெரிதும் கற்கப்பட்டு வருகின்றன. எலிசபெத் இராணி காலத்திலே, அமெரிக்காக் கண்டத்துப் பொருட்செல்வமும் பழைய யவன புரத்துக் கலைச் செல்வமும் ஆங்கிலநாட்டுக்குரியவாயின. ஸ்பென்சர் என்னும் மகாகவி ‚அரமடந்தையர் இராணி’ என்னும் பெருங்காப்பியத்தோடமையாது அழகு பொருந்த்ய சிறு காப்பியங்கள் பலவற்றையும் செய்தார். „ஆயன் நாட்குறிப்பு“ என்பது அவறுல் ஒன்று. இது இயற்கை வனப்பினக் கூறுவது.
பலவகையிலும் ஆங்கில நாடு பொலிவுற்ற இக்காலத்திலே தான் செகசிற்பியார்(சேக்ஸ்பியர்) என்னும் சிறந்த நாடகக் கவி தோற்றினார். இவருடைய கவி வனப்பினை மதங்க சூளாமணி என்னும் நூலிலே சற்று விரிவாகக் கூறியிருக்கின்றாம். யூலியஸ் சீசர் என்னும் நாடகத்தின் ஒரு பகுதியின் பமொழிபெயர்ப்பை ஈங்குத் தருகின்றோம். இந் நாடகத் தலைவராகிய யூலியஸ் சீசர் பராக்கிரமசாலியென்றும் சேனைத் தலைவரென்றும் முன்னர்க் குறிப்பிடப்பட்டார். உரோமாபுரியில் வாழ்ந்த காஷிஸ் எனப் பெரிய சனத் தலைவனொருவன் கஸ்கா, திரேபோனியஸ், லிகாறியஸ், டெகியஸ், சின்னாகிம்பர் என்பாரையும் நீதிமானும் யூலியசீசரது நண்பனுமாகிய மார்கஸ் புரூட்டஸையுந் தன்வயப்படுத்தி பங்குனித் திங்களில் நண்பகலில், அத்தாணி மண்டபத்தில், யூலியஸ் சீசரது உயிரைக் கவர்வதற்கு ஏற்பாடு செய்தனன். குறித்த தினத்திற்கு முன்னாளிரவில், விண்வீழ் கொள்ளிகளும், தூம கேதுக்களும் பலவகை உற்பாதங்களுந் தோன்றின. யூலியசீசரின் மனைவி கல்பூர்ணீயா தீக்கனாக் கண்டு அச்சமுறெழுந்து புறத்தே நிகழ்கின்ற உற்பாதங்களினால் உள்ளம் அவலித்துத் துயிலெழுந்திருந்து காலைப்பொழுது வந்ததும் கணவனது முன்னிலையை அடைந்து

பேரிரவில் நடந்ததெல்லாம் பீழையினை விளக்கப்
பேதலிக்கும் உளச் சிறியேன் பேசுகின்ற மொழிகள்
ஆருயிர்க்குத் தலைவ! நினதருட் செவியில் வீழ்க,
அகத்திடையின் றிருந்திடுக, அவைபுகுத லொழிக,
எனக்குறையிரந்து வேண்டி நின்றாள்.
அதனைக் கேட்ட சீசர் புன்னகை புரிந்து,

அஞ்சினர்க்குச் சதமரணம், அஞ்சாத நெஞ்சத் (து)
ஆடவர்(க்) ஒரு மரணம். அவனிமிசைப் பிறந்தோர்
துஞ்சுவர்என் றறிந்தும் சாதலுக்கு நடுங்கும்
துன்மதிமூ டரைக் கண்டாற் புன்னகை செய் பவன்யான்.

இன்னலும் யானும் பிறந்த தொருதினத்தில் அறிவாய்
இளம் சிங்கக் குருளைகள் யாம்; யான் மூத்தோன் எனது
பின் வருவது இன்னல் எனப் பகை மன்னர் அறிவார்
பேதுறல் பெண்ணணங்கே யான் போய் வருதல் வேண்டும்.
எனக் கூறினார்.

இத்தருணத்தில் டெசியஸ் என்பவன் வந்து அத்தாணி மண்டபத்திற் குழுமிருந்த முதியோர் சீசரை அழைத்து வருமபடி சொல்லியதாகத் தெரிவித்தான். சீசர் முதலிலே மறுத்துப் பின்பு இசைந்து உடன் போயினார். வழியிலே ஒரு சேவகன் ஒரு நிருபத்தைக் கொண்டு வந்து கொடுத்து இது சீசருடைய சுகத்தைக் கோரியது. இதனை உடனே படித்தருள வேண்டும் எனச் சீசர் கையிற் கொடுத்தனன். நல்லது நண்ப சனங்களுடைய சுகத்தைக் கோரிய நிருபணங்களைப் படித்த பின்பு இதனைப் படிக்கிறேன் என்று கூறிவிட்டு சீசர் அத்தாணி மண்டபத்தை நோக்கி நடந்தனர். அங்குச் சிம்பர் என்பவன் முற்பட்டு வந்து முழந்தாற்படியிட்டு நின்று மகோதாரிய மகா பிரபுவே ஏழையேனது விண்ணப்பத்திற்கிரங்கி சகோதரனை மன்னித்தருள வேண்டும் என வேண்டி நின்றனன். சீசர் அவனை நோக்கித்,

“தாழ்ந்து மென்மொழியுரைத்திடேல் தரணியிற் பணிந்து
வீழ்ந்து நைபவர் பொய்யுரைக்கிரங்கிய வீணர்.
சூழ்ந்து செய்தன துடைத்துப் பின் சோர்வினையடைவார்
ஆழ்ந்து செய்வன செய்யும் யான் அவர்நெறி அணையேன்“

„அண்ணல் நீர்மையேன் பிழைசெயேன் அணுவளவேனும்
நானும் நீதியிற் பிரிந்திடேன் நானெனக் கதறிக்
கண்ணில் நீர் மிக நிலத்தினிற் புரள்வதாற் கருதும்
எண்ணம் முற்றுறும் என்னனீ எண்ணுவதிழிவே“

எனக் கூறச் சார்ந்து நின்ற மார்க்கஸ் புரூடஸ் சீசரை நோக்கி „ஐய, நான் இச்சகம் பேசுவேனல்லேன், தேவரீரது திருக்கரத்தை முத்தமிட்டேன் . சிம்பரரின் விண்ணப்பத்திற்கிரங்கி அவரது சகோதரனை விடுதலை செய்தல் வேண்டும்.“ என்றனன். சமீபத்தில் நின்ற காசீயஸ் சீசரை நோக்கி „மகிமை பொருந்திய சீசரே மன்னிக்க வேண்டும், உம்மிரு தாளினையும் பற்றினேன், சிம்பரின் சகோதரனை விடுவிக்க வேண்டும்“ என்றனன். சீசர் தம்மைச் சூழ்ந்து நின்று விண்னப்பித்தோரை நோக்கி
இரங்குதிர் என்ன இரக்கும் நீர்மையர்
தமைப்பிறர் இரக்கிற் றையக்காட்டுனரே
நும்போல் வேனெனின் நும்மொழிக்கு இசைவேன்
வானகம் மிளிரும் மீனினம் அனைத்தும்
தற் சூழ்ந் தசையத் தானசைவின்றி நிலைபெறுதுருவன்
நிலைமை கண்டிரரே?
வான் மீன் அனையர் மாநில மாந்தர்
துருவன் அனையன் ஒருவனிங்குளலால்
அவந்தன் யான் என அறிகுவீர் புகன்ற
மொழியிற் பிரியேன் பழியொடு படரேன்
மலை வீழ்வெய்தினும் மனம்வீழ்விலேனே
எனக் கூறினார். இதனைக் கேட்ட புரூட்ஸ் ஆதியோர் சீசரது பெருமிதயுரையை தர்பெருமையுரையெனவெண்ணி உடைவாளயுருவி அனைவரும் ஏகோபித்துச் சீசரை வெட்டினார்கள். நீயுமா புரூட்டஸ் என்னும் உரையோடு சீசர் வீழ்ந்து மரணித்தனர்.
(தொடரும்)

ஞாயிறு, மே 14, 2006

புது யுகம்


„…Von den neuen Antennen kamen die alten Dummheiten…“

புது யுகம்

புதுயுகம் ஒருமுறை மட்டும் தொடங்குவதில்லை
என் பாட்டன் வாழ்ந்து முடித்ததும் நவீன காலம் தான்
என் பேரன் வாழப்போவதும் இதே பழையதில் தான்

புதிய மாமிசம் பழைய முள்ளுக்கரண்டியால் சாப்பிடப்படும்.

தானியங்கி வாகனங்கள் இல்லை; தாங்கிகளும் இருக்கவில்லை
எங்கள் கூரைகளின் மேலான விமானங்கள் இல்லை; குண்டுகள் இருக்கவில்லை.

புதிய அன்ரனாக்களில் இருந்து அதே பழைய முட்டாள்தனங்கள் வெளிப்படுகின்றன
அறிவு வாய் மூலமாகவே வழிவழி காவப்படுகிறது.
- பெர்டோல்ட் பிறெஸ்ட்

******************
Die neuen Zeitalter

Die neuen Zeitalter beginnen nicht auf einmal.
Mein Großvater lebte schon in der neuen Zeit.
Mein Enkel wird wohl noch in der alten leben.

Das neue Fleisch wird mit den alten Gabeln gegessen.

Die selbst fahrenden Fahrzeuge waren es nicht
Noch die Tanks.
Die Flugzeuge über unseren Dächern waren es nicht.
Noch die Bomber.

Von den neuen Antennen kamen die alten Dummheiten.
Die Weisheit wurde von Mund zu Mund weitergegeben.
-Bertolt Brecht

பிரெஸ்டின் கவிதைகளில் எனக்கு இந்தக் கவிதையும் பிடிக்கும். அதிலும் இறுதி வரிகள் இன்றைய ஊடகங்களின் மீதான நோக்கில் இன்னும் பிடிக்கும்.

சில்லு மாற்றுதல்


சில்லு மாற்றுதல்

வீதியின் ஓரமாய்க் குந்தியிருக்கிறேன்
சாரதி சில்லு மாற்றுகிறார்.
எங்கிருந்து வந்தேனோ அங்கும் விருப்பமில்லை
எங்கு போகிறேனோ அங்கேயும் விருப்பமில்லை
பின் எதற்கு
இந்தச் சில்லுமாற்றலைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்
பொறுமையற்று?

- பெர்டோல்ட் பிறெஸ்ட்

DER RAD WECHSEL

Ich sitze am Straßenrand,
Der Fahrer wechselt das Rad,
Ich bin nicht gern, wo ich herkomme.
Ich bin nicht gern, wo ich hinfahre.
Warum sehe ich den Radwechsel
mit Ungeduld?

-Bertolt Brecht

எளிமையான ஒரு கவிதை. 1953 ம் ஆண்டளவில் எழுதப்பட்டது. வாகனம் பழுதடைந்து நெடுஞ்சாலையில் காத்திருக்கும் போதெல்லாம் இந்தக் கவிதை நினைவில் வந்து போகும். எமக்கு ஏற்படும் பொருட்டற்ற பொறுமையின்மையக் கேள்விக்குள்ளாக்குகின்றதா இக்கவிதை? அல்லது போகுமிடம் மேல் வருகின்ற முதன் மனோநிலை இப்படித்தான் எல்லோருக்கும் இருக்கும் என்பதைச் சொல்கிறதா? எப்படியாயினும் மனம் கேள்விகளை எழுப்பிக்கொண்டே இருக்கிறது. சில்லு மாற்றுதல் வாகனத்திற்கா அல்லது மனதிற்கும் அவசியமா? சில்லு மாற்றுதல் ஒரு முடிவற்ற நிகழ்வின் இடையமைவா?

சனி, மே 13, 2006

ஆராய்ச்சி

பேராசிரியர் நா.வானமாமலை அவர்களை ஆசிரியராகக் கொண்டு வெளிவந்த "ஆராய்ச்சி" இதழ்களின் முன் அட்டைகள் சில.


Prof. K.Kailasapathy


(முன்னட்டைப்படம்: "குமரன்"-58; 15.டிசம்பர் 1982)
Prof. K.Kailasapathy - பேராசிரியர் க.கைலாசபதி

சனி, மே 06, 2006

றஞ்சினி கவிதைகள்

நூல்: றஞ்சினி கவிதைகள்
வெளியீடு: இமேஜ் & இம்ப்ரெஷன் வெளியீடு, டிசம்பர் 2005
11/29 சுப்ரமணியம் தெரு, அபிராமபுரம், சென்னை 600 018
+91-44-24993448
uyirmai@yahoo.co.in
விலை: ரூ 40,-


புகைப்படம்: தமயந்தி,நோர்வே

"உன் முத்தங்களுக்காக என் உதடுகள் தவிக்கின்றன"


றஞ்சினியின் கவிதைகள் மிகத் துலக்கமானவை. உணர்வின் நேர்மையை மிக நிர்வாணமாகச் சொல்பவை. தமிழில் இவ்வாறான துணிச்சலான காதல் கவிதைகளின் வரவு மிக அரிதாகவே இருக்கின்றது. அறிவுரிமையின் பாசாங்குத்தனம் இல்லை. விடுதலை என்கிற கோசத்தனம் இல்லை. கவிதைகளும் அவை பிறந்த தூண்டல்களும்
விடுதலையேயாகி நிற்கின்றன. சில கவிதைகள் உணர்வின் அதியுச்ச வீச்சை வெளிப்படுத்துகின்ற அதேவேளை சில, வெறுமனே வசனத்தின் இடம்மாறிய சொற்களின் கூட்டாமாகவே இருக்கின்றன. „ இனிய நண்பனுக்கு“ என்ற கவிதை தொடக்கம் „ஓவியனுக்கு…“ என்ற கவிதை வரை இவரது இந்த முதலாவது தொகுப்பில் ஐம்பத்தியொரு கவிதைகள் இருக்கின்றன. புத்தி, அழகு, அறிவு அவற்றின் மீதான ஒரு ஆணின் அங்கீகாரம் என்பன எவ்வளவு அபத்தமானவை, பொய்யானவை, கோணலானவை என்று எடுத்த எடுப்பிலேயே சொல்லிவிடுகிறது இத் தொகுப்பு. மிகச் சாதாரணமான ; பேச்சு வழக்கின் பூரண சொற்களாக இருக்கும் இது போன்ற கவிதைகள் சில பல வேளைகளில் ஒரு திடீர் வெட்டில் நுண்தளப் புரிதலை வேண்டி நிற்கின்றன.


என் இனிய நண்பனே
நீ என்னை அறிந்ததாகக் கூறினாய்
எப்படி என்றேன்; ஆத்திரப்பட்டாய்
உன்னிடத்தில் – என்னைச் சமப்படுத்திப்
பார்த்தாய்
பின் பரவாயில்லை புத்திசாலி என்றாய்
அறிவென்றாய் – கூடவே அழகென்றாய்
எதை எதற்காகச் சொன்னாய்?
இல்லை
உன்னால் என்னை அறியமுடியவில்லை
பெண் என்பதைத் தவிர


சில இனிப்பான கவிதைகள்.

„…ஆடை களைந்து அரவம் போல பின்னிப் பிணைந்து
திரண்டு புரண்டு கலவியில் கலந்து இமயம் சென்று
கரைகிறது காலை…“

„என் ஜமேக்க காதலனுக்கு“ என்ற கவிதையில் கறுப்புக் காதலனிடம் அவள் சொக்கிக் கிடப்பது அழகிய கவிதையாகிக் கிடக்கிறது. ஜமேக்கப் பாடகர் பொப் மார்லியின் புகழ் பெற்ற பாடல்களில் தெரிகின்ற பிரபஞ்ச நோக்கினைத் தன் காதலனிடமும் கண்டு லயிப்பது அது பொப் மார்லியின் நிழல் உருவே என்றாகிறது.
"...முத்தமிடத் தூண்டும் உன் உதடுகள்
எனை வருடும் உன் திரண்ட தலைமுடி
என் தூக்கத்தைப் பறித்து விட்டது
...
உன் பாடல்கள் புரட்சியானது
...நான் கொண்ட காதல் வார்த்தைகளை மீறியது..."

உடனடிப் பார்வையில் இவை கவிதைகள் தானா என்று கேட்கத் தோன்றும் போல் இருந்தாலும் அவை சொல்கின்ற விடயங்கள் தமிழுக்குப் புதியவை. கவிஞனை; கலைஞனை; ஓவியனை; பாடகனை; நண்பனை; புரட்சியாளனை; விடுதலையை நேசிப்பவனை கனிவிதயம் கொண்டு விரும்பி நிற்கும் கலைமனக் கவிதைகள் இத் தொகுப்பில் பல உண்டு. இவர்களிடமிருந்து "...அன்பை எடுக்கவும் அன்பைக் கொடுக்கவும் எமக்கிருக்கும் உரிமை பறிபோகாதவரை நாம் காதல் செய்வோம்." என்று அன்புமனம் காட்டி அனணத்து நிற்கின்றன. அன்பும் காதலும் கூடலும் வருடலும் இனிமையானவை தான். அதனால் பல பிரிதலின் துயிர் வாட்டி எடுப்பினும் அதன் யதார்த்த நிலையினைப் பல கவிதைகள் பேசுகின்றன. "...உனது நெருக்கம் எனக்குத் தேவையாக உள்ளது ஆனாலும் என் அறிவு எம்மைப் பிரிக்கிறது." பண்பட்ட நவீனத்தின் பெண்மனப் படிமங்கள் இப்படி வெளிப்படுவது தமிழுலகுக்கு முற்றுலும் புதியது.
இவை எல்லாமே ஆசிய மனங்களின் போலி வாழ்வின் பாவ்லாக்களை சாய்த்துவிடக்கூடியவை.