அங்கலாய்ப்பவர்களுக்கு (An den Schwankenden)
நீ சொல்கிறாய்:
நாங்கள் செய்வதெல்லாம் பிரயோசனமற்றது.
எந்த விடிவும் இல்லை. எங்கள் பலங்கள் குறைகின்றன.
நாங்கள் இத்தனை வருடங்கள் பாடுபட்டுங்கூட, தொடங்கியபோதினை விட நிலைமை இப்பொழுது இன்னும் மோசமாகிவிட்டது.
எதிரி முன்னெப்பொழுதையும் விடப் பலத்துடனிருக்கிறான்.
அவனது வலு பல்கிப்பெருகியிருக்கிறதாகவே தெரிகிறது.
வெல்லப்படமுடியாதது என்ற தோற்றத்தினைத் பெற்றுவிட்டான் அவன்.
நாங்கள் பிழை செய்துவிட்டோம் என்பதை இனி மூடி மறைக்கவும் முடியாது.
எமது தொகை குறைந்துகொண்டே போகிறது.
எமது கோசங்கள் ஒழுங்கற்றவை.
நாங்கள் சொன்னவைகளின் ஒரு பகுதியைத் தெரியாதபடி திரித்துவிட்டான் எதிரி.
நாங்கள் சொன்னதெல்லாமே தவறா அல்லது ஒருசிலதான் பிழையானதா?
இன்னும் யார் வந்து சேருவார் எம்மோடு?
ஓடும் ஆற்றில் கரையொதுங்கியவர்களில் நாம்மட்டும் தான் மீதமா?
மற்றவர்களை விளங்காமலும், அவர்களால் விளங்கிக் கொள்ளப்படாமலும் மிஞ்சிக் கிடப்போமா?
எதேனும் யோகமின்னும் சாத்தியமா?
இப்படித்தானே நீ கேட்கிறாய்.
வேறெந்தப் பதிலுக்கும் காத்திருக்காதே
உன் பதிலே பதில்.
-Bertold Brecht
rpj;jh mbAk; tpsq;ftpy;iy EdpAk; tps;qtpy;iy. mtiy epidj;J cuiy ,bf;fNtz;lhk;. rw;Nw tpsf;fkhfr;nrhy;.
பதிலளிநீக்குமேலே பாமினி எழுத்துருவில் எழுதப்பட்டது பின்வருமாறு:
பதிலளிநீக்குசித்தா, அடியும் விளங்கவில்லை நுனியும் விளங்கவில்லை. அவலை நினைத்து உரலை இடிக்கவேண்டாம். சற்றே விளக்கமாகச்சொல்.
அன்பு அமுகா,
பதிலளிநீக்குநான் அவலை நினைக்கவுமில்லை, வெறும் உரலை அறிந்து இடிக்கவுமில்லை.தளம்பல் எனபது எல்லோருக்கும் எப்போதாவது வருவது தான். இக்கவிதை 1935 வாக்கில் Brecht நாட்டைவிட்டு அலைந்துழன்ற போது எழுதியது.இதில் இறுதி வரிகள் தான் முக்கியமானவை. பதில் உன்னிடமே இருக்கின்றது. அப்படியே விளங்கிக் கொள்வது உன் சால்பு அமுகா!