பக்கங்கள்

சனி, டிசம்பர் 09, 2006

கவிஞர் சு.வில்வரத்தினம்(1950-2006)

கவிஞர் சு.வில்வரத்தினம் அவர்கள் காலமானார்

செங்கள்ளுச் சித்தன்



உயிர்த்தெழும் காலத்திற்காக என்னைத் தருவதெனினும் இசைவேன் என்று எழுதி அந்தக் காலமொன்றைக் கனவுகண்ட கவிஞர் சு. வில்வரத்தினம்(பிறப்பு: 07.08.1950) அவர்கள் இன்று(09.12.06)கொழும்பில் மரணமாகிவிட்டார். ஈழத்தின் காலத்துயரைப் பாடியபடியே மறைந்தனன் அவன். நீண்ட கால இடைவெளிக்குப் பின் , ஜெர்மனியின் பெர்லின் நகரத்தில் இருந்து ஐரோப்பாவின் சில நாடுகளை ஊடறுத்து நோர்வேயின் ஒஸ்லோ ஊடாக பெர்கன் என்ற மலைகளைக் கடல் கவ்வும் நகரம் வரை அவரோடு பயணித்த இனிய நினைவை இன்று சோகம் பரவ எண்ணிப் பார்க்கிறேன். எமது கவிஞர்களின் கவிதைகளில் அவருக்கிருந்த ஈடுபாடு அபாரமானது. பாரதியின், நீலாவணனின், மு. பொன்னம்பலத்தின், சி. சிவசேகரத்தின், பிரமிளின் மற்றும் பல தமிழ் கவிஞர்களின் கவிதைகளைப் பயணம் முழுவதும் பாடியபடியே, நகைச் சுவையில் கழிந்த அந்த நாட்களைக் எண்ணத் துக்கம் கனக்கிறது. காற்றுக்கு வந்த சோகம்; வேரோடி விழுதூன்றிய வாழ்வு தொலைத்து விறைத்த கட்டையெனக் கிடக்கின்ற கிராமங்கள், பொருக்குலர்ந்த மக்களின் போக்கறியா வாழ்வின் பொறிதளங்கள்; அவர்கள் உள்ளப் பொருமல்கள் என்று பாழும் மனிதப் பிறவிபடும் பாடெல்லாம் பாடிவைத்துள்ளான்.அந்த முழுத்தொகுப்பின் தலைப்பு: உயிர்த்தெழும் காலத்திற்காக!!

2 கருத்துகள்:

  1. சுதந்திர விரும்பிகள் சுதந்திரம் காணமுன் இறப்பது மிகக் கொடுமை.ஏஜேயின் பிரிவு முழுதாக மறக்கப்படமுன்னர் இப்போது வில்வரத்தினம்.. பதிவிற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  2. பெயரில்லா12 டிசம்பர், 2006 07:40

    வில்வரத்தினத்தின் வரியைப் போலவே

    "ஒற்றை மனுவறியா" சூரியனைப் போலவே திகைத்து
    பகிர்கிறேன் சூனியத்தை/சோகத்தை.....

    மணிகண்டன்

    பதிலளிநீக்கு