ஞாயிறு, மே 27, 2007

34 ஆவது இலக்கியச் சந்திப்பு

34வது இலக்கியச்சந்திப்பு, பேர்லின், ஜேர்மனி.
ஜூன் 9-10, 2007.
புகலிடத்தமிழர்களின் இலக்கிய நிகழ்வான இலக்கியச்சந்திப்பு, பத்தொன்பதாவது ஆண்டில் காலடிபதிக்கின்றது. இதன் 34வது தொடர் ஜேர்மனி, பேர்லின் நகரில் 2007 ஜூன் மாதம் 9, 10 திகதிகளில் நடைபெறும்.

புகலிடச்சஞ்சிகைகள் விமர்சனம், நூல் விமர்சனம், புகலிடத்தில் இரண்டாவது தலைமுறையினரின் நிகழ்ச்சி, கவிதா நிகழ்வு ஆகியவையுடன் இலங்கையின் இனப்பிரச்சனைக்கான தீர்வு பற்றிய விசேஷ கலந்துரையாடலும் இடம் பெறும்.

இச்சந்திப்பில் கலந்து கொள்ள அனைவரையும் அன்புடன் அழைக்கின்றனர் ஏற்பாட்டாளர்கள்.

இடம்:
Werkstatt der Kulturen
Wissmannstrasse 32
12049 Berlin.


பங்குகொள்பவர்கள் செலுத்த வேண்டிய கட்டணம்: 15 யுரோ. .மாணவர்கள்: 10 யுரோ.