புதன், நவம்பர் 07, 2007

கருணாவை போலிக்கடவுச் சீட்டொன்றுடன் லண்டனுக்குள் கடத்தியது இலங்கை அரசே!!


கருணாவை போலிக்கடவுச் சீட்டொன்றுடன் லண்டனுக்குள் கடத்தியது இலங்கை அரசே!!

1. கடவுச்சீட்டில் கருணாவின் பெயர்: கோகில குணவர்த்தன
2. வெளிவிவகார அமைச்சே பிரித்தானிய விசாவுக்கான மூன்றாம் நபர் சிபார்சினை வழங்கியுள்ளது.
3. கருணா கைது செய்யப்பட்டவுடனேயே அரசியல் தஞ்ச ம் கோரியுள்ளார்.
4. காலநிலை மற்றும் சூழல் மாற்றத்துக்கான சர்வதேச மகாநாடு ஒன்றில் கலந்து கொள்ளவதற்கென்றே பிரித்தானியாவுக்கான விசா விண்ணப்பிக்கப்பட்டுள்ளது.

கருணாவை அரச உயர் சேவையிலுள்ளோருக்கான போலிக்கடவுச் சீட்டொன்றுடன் லண்டனுக்குள் கடத்தியது இலங்கை அரசே என்று சில நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கையின் அதியுயர் அதிகாரியின் பணிப்பொன்றின் பேரில் இலங்கை குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் இந்த அரச உயர் சேவையிலுள்ளோருக்கான போலிக்கடவுச் சீட்டொன்றை 30ம் திகதி ஆகஸ்ட் மாதம் கருணாவுக்கு வழங்கியிருக்கின்றது. இந்தக் கடவுச் சீட்டில் பிரித்தானியாவுக்கான விசா அனுமதி இலங்கை வெளிவிவகார அமைச்சின் சிபார்சின் பேரில் கொழும்பில் உள்ள பிரித்தானிய உயர் ஸ்தானிகரம் வழங்கியிருக்கின்றது.
„ஜாதிக கெல உறுமய“ கட்சியைச் சேர்ந்த அமைச்சர் சம்பிக்க ரணவக்க அவர்கள் அமைச்சராகவிருக்கும் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள உள்ள ஒரு திணைக்களத்தின் பிரதிநிதியாக இந்தச் சர்வதேச மகாநாட்டில் கலந்து கொள்பவராகவே கருணாவிற்கான விசா அனுமதி விண்ணப்பிக்கப்பட்டிருந்தது.

இலங்கை விமான நிலையப் பிரதிப் பணிப்பாளர் சலிதா விஜயசுந்தர அவர்களே இலங்கை இரத்மலான விமான நிலயத்திலிருந்து லண்டன் செல்லும் விமானத்தில் கருணாவை உடன்சென்று ஏற்றிவிட்டுள்ளார். செப்டெம்பர் மாதம் 18 ஆம் திகதி கருணா லண்டன் ஹீத்றோ விமான நிலையத்தில் வந்தடைந்துள்ளார். பின்னர் கென்சிங்க்ரன் பகுதியில் இருந்த அவரது மனைவி பிள்ளைகளுடன் போய்ச் சேர்ந்துள்ளார். கைது செய்யப்பட்டவுடன் இவர் அரசியல் தஞ்சம் கோரியுள்ளார்.

தகவல்: Lasantha Wickrematunge ; ‘Morning Leader’