
சர்வ ‚அதிகாரமும்’ கொண்ட அப்பா
இரா. றஜீன்குமார்
வாந்தி முதலாய்
வலியால் துடித்து
முனகி…
முக்கி…
மலமும் கழிந்து,
ஜோனி கிழிந்து
குருதி வழிந்து…
இவ்வளவு நிகழ்வும்
நடந்து முடிந்தது.
தாதி ஒருத்தி
சேதி சொன்னாள்
„சுகப் பிரசவம்“.
நானும் எனது பங்களிப்புக்காய்,
இனிப்புப் பெட்டியுடன்
நண்பனைத் தேடி….
கேட்டான்
சொன்னேன் „சுகப்பிரசவம்“
நண்பனும் சொன்னான்
„எனது ஐந்து குழந்தைகளும்
சுகப்பிரசவம் தான்“.
என்ன சுகம்! என்ன சுகம்!
ஆகா
அப்பன் ஆகுதல் என்ன சுகம்!
Photo by Damayanthi, Norway(ஈழத்துப் புறநானூறு, நூல்,பெர்லின் 1991)
//என்ன சுகம்! என்ன சுகம்!
பதிலளிநீக்குஆகா
அப்பன் ஆகுதல் என்ன சுகம்!
//
என்ன தான் இருந்தாலும், பெண்களுக்கு தான் இதில் அதிக கொடுப்பினை.
Wow it's GEIL!
பதிலளிநீக்குசீனு,anonym,yogi
பதிலளிநீக்குஉங்கள் இடுகைகளுக்கு மிக்க நன்றிகள்.
இந்த ஒரு கவிதை போதும் கவிஞனுக்கு அடையாளமாய்.
பதிலளிநீக்கு