பக்கங்கள்

ஞாயிறு, ஏப்ரல் 08, 2007

சிதைந்து உக்கி மண்ணாகும் சித்திரத் தேர் ஒன்று

குடுமியன் மலையில் சிதைவடைந்து கிடக்கும் தேர்



மூவர் கோவில் இருக்கும் கொடும்பாளூரில் இருந்து சித்தண்ணவாசல் செல்லும் வழியில் இருக்கின்றது குடுமியன் மலை என்ற சிறுகிராமம். அந்த வீதியின் ஒருமருங்கில் சிறு ஆலயம். என்றோ வசதிகள் இருந்து பாரிய திட்டங்களையெல்லாம் போட்டுப் பின்னர் திடுமென எல்லாமே கைவிடப்பட்டு அனைத்தும் பாழடைந்து போக விட்டது போன்றே அங்குள்ள குளம், பரவிக்கிடக்கும் சிற்பக் கற்கள், சில வீடுகளின் அமைப்புக்கள், கோவில் கட்டக் கொண்டுவரப்பட்ட கற்கள் போன்றன தோன்றுகின்றன. ஆலயத்தின் எதிரே, வீதியின் மறு மருங்கில் உள்ள குளத்தின் கரையில் கைவிடப்பட்டு மழையும் வெயிலும் கறையானும் சிறு பூச்சிகளும் மற்றும் மனிதரும் மாறிமாறித் தாக்கியபோதும் தன் எச்சங்களுடன் வைரம்பாய்ந்த மரத்தில் செதுக்கிய இன்னமும் பூரணமாக உருக்குலைந்து விடாத சிற்பங்களுடனுன் இன்னமும் விஞ்சிக்கிடகின்றது ஒரு கலைஞன் அமைத்த தேர்.

அதன் மீது இன்னமும் எந்தக் கொடியும் படரவில்லையாதலால் அது முல்லை படரப் பாரிமன்னன் விட்ட தேராக இருப்பதற்கு நியாயமில்லை. இதனை அப்படி எடுத்துச் சென்று ஒரு நூதன சாலையில் வைத்துவிடலாம் அல்லது அந்த இடத்திலேயே அது மேலும் சிதைந்துவிடாமல் ஆவனசெய்து பாதுகாக்கலாம் என்று தோன்றியது. இன்றைய யதார்த்த உலகில் மனிதன் எதுவெதுகெல்லாமோ அழவேண்டியிருக்கின்றது, இது வேறா என்று எள்ளி விடுவார்கள் என்று பேசாமல் இருக்கின்றேன்.

4 கருத்துகள்:

  1. பெயரில்லா08 ஏப்ரல், 2007 15:37

    pictures are cute - athai sethukiyavargal parthaarkalk ental rathha kanneer sinthuvaarkal- athu sithil adaiyunm munnarea village people care eduthirukkavendum - ithellaam palankalathu pokkisangal - paathukaakapada vendiyavaigal - parkkumpothu migavum vethanaiyaka irrukirathu - appart from religion, oru thamilanin thiramaikku santaaka nirkkum monuments enta alavilaavathu nokka vendum - ithaipo ethanai ethanai pikkisankalai kavanikkathu vidukiromo - i apreciate you for having brought it to light - let us hope something will happen - arun

    பதிலளிநீக்கு
  2. அருண் எழுதியது:
    pictures are cute – அதைச் செதுக்கியவர்கள் பார்த்தார்கள் என்றால் இரத்தக் கண்ணீர் சிந்துவார்கள். அது சிதிலமடையுமுன்னரே கிராமத்து மக்கள் கவனமெடுத்திருக்க வேண்டும். இவையெல்லாம் பழங்காலத்துப் பொக்கிஷங்கள்; பாதுகாக்கப்படவேண்டியவைகள். பார்க்கும் போது மிகவும் வேதனையாக இருக்கிறது. மதத்திற்கு அப்பால், ஒரு தமிழனின் திறமைக்கு சான்றாக நிற்கும் கலைபொருள் என்ற அளவிலாவது நோக்கவேண்டும். இதைப்போல் எத்தனை எத்தனை பொக்கிஷங்களைக் கவனிக்காது விடுகிறோமோ….! i apreciate you for having brought it to light - let us hope something will happen - arun

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா08 ஏப்ரல், 2007 23:43

    மதமென்பதை விட்டு ; தமிழனின் மேன்மையான கலையெனவாவது போற்ற வேண்டிய பொக்கிசங்கள்.
    வேதனையாக உள்ளது.

    பதிலளிநீக்கு
  4. unkalathu pakutharivu sinthanaiku enathu manapoorvamana valthukkal...ennum thamiln uuirudan erukirar enpathrkuu ninkal oru mun utharanam...ennum yethirpakirom .......sinthanai sirpamai

    பதிலளிநீக்கு