
தோழர் பரா16/12/2007
துயரத்தில் பங்கு கொள்ளுதல்
எங்களிடம் ஒவ்வொரு காலமும்
ஒரு வெற்றிடம் இருந்து கொண்டிருந்தது.
எப்படியும் யாராவது ஒருவரால்
பொத்திப் பிடிக்கப்பட்டபோதும்
எம்மை விட்டு மிக நளினமாக
வெளியேறி வெறுமையாய்
இருக்கவிட்டுப் போகிறது.
நித்திரையில்
நடுவீதியில்
ஒரு வெற்றிடம் எம்மை எப்போதும் துரத்துகிறது
„மற்றது“ அதீதா-கற்சுறா
+++++++++++++++++++++++++
எறிகணைகளின் அஞ்சலி:
கனத்த அஞ்சலிகள்
Berlin...Germany
இடது சாரிய சிந்தனையாளரும் மாற்றுக் கருத்தாடலாளர்களின் முன்னோடியுமான தோழர் பரராஜசிங்கம்
16/12/1935 ல் வருகை............
16/12/2007 ல் புறப்பாடு............
27/12/2007 ல் செங்கம்பள வழியனுப்பு
நாடே நாடே நாடே
நீ எனக்குத்தந்த குழந்தைப்பருவமும் மகிழ்ச்சியற்றது....
இளமைப்பருவமும் மகிழ்ச்சியற்றது....
அதற்க்கான தண்டனையை நீ பெறுகிறாய்.......
நாடே நாடே
உலகில் இலக்கின்றி நான் அலைகின்றேன்...
அன்பே காட்டாத நீ.....
என்னை உனது இரத்தமும் சதையும் சந்ததியும் என்று சொல்கிறாய்...
நீ எனது நாடு இல்லை என்கிற முடிவை எடுக்க என்னைத் தள்ளினாய்.......
நான் துயரத்துடன்தான் மரிப்பேன்.....
ஆனால் அப்போது கூட நான் உன் பெயரை உச்சரிக்கப் போவதில்லை.....
நீ என்னதான் செய்தாலும்... மீண்டும் என்னை நீ காணப்போவதுமில்லை
நீ இறக்கும் போது கூட உன் குற்றங்களையும் தவறுகளையும்
ஒரு முறை தன்னும் கேள்விக்கு உள்ளாக்காமலேயே...
இறப்பாய்....
நீ எனக்களித்த வலியினை நீயும் உன் வாழ்வில் அநுபவித்துக்கொண்டேயிருப்பாய்.......
ஆபிரிக்கக் கவிதை இது
பரா மாஸ்ரருக்கான எறிகணைகளின் சமர்ப்பணம்....
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக