மரண , இறுதி அஞ்சலி அறிவித்தல்
குமாரசாமி பரராஜசிங்கம்
பிறப்பு: 16.12.1935
இறப்பு:16.12.2007
இலங்கை, யாழ்ப்பாணம் நல்லூரைப் பிறப்பிடமாகக் கொண்ட 1984 இல் இருந்து ஜெர்மனியின் ஸ்ருட்கார்ட், பெர்லின் நகரங்களில் வாழ்ந்த திரு குமாரசாமி பரராஜசிங்கம் அவர்கள் 16.12.2007 அன்று பி.ப. 11:30 மணிக்கு அவரது இல்லத்தில் மாரடைப்பால் காலமானார். இவர் காலஞ்சென்ற குமாரசாமி , மனோன்மணி தம்பதிகளின் மகனும் மல்லிகாவின் அன்புக் கணவரும், காலஞ்சென்ற றொனால்ட் ஜோசேவ், எமிலி விஜயசேகர ஆகியோரின் மருமகனும் சந்தூஸ்குமார், உமா ஷாணிக்கா ஆகியோரின் பாசமிக்க தந்தையுமாவார். இவர் கனடாவில் ரொறொன்றோவில் வசிக்கும் இரத்தினேஸ்வரி மற்றும் ஜெயக்குமாரி (மாயா)ஆகியோரின் நேசம் மிகு சகோதரரும் ஜீவமுரளி, தினேஷா ஆகியோரின் அன்பு மாமனுமாவார். சிந்து,சே சக்தி குமார், அன்னம்-வெண்ணிலா ஆகியோர் இவரது செல்லம் கொஞ்சும் பேரப் பிள்ளைகள்.
இவர் கனடாவில் வசிக்கும் கணேஸ், இளங்கோ ஆகியோரின் திருமண வழி மச்சானும் ஷீலா, ஜீன் ஆகியோரின் மனைவி வழி மைத்துனனும் இலங்கை வாழ் ஜெயகலா(மிதிலா), கனடாவாழ் பிரபாகரன்(கண்ணன்), வசீகரன்(மோகன்), மேகலா(பாஞ்சாலி), வசீகலா மற்றும் அபிநெஷா, ஜெயநெஷா,கிருஷ்ணிஷா ஆகியோரின் தாய் மாமனுமாவார்.
இவர் இலங்கை வர்த்தக ஊழியர் சங்க செயற்பாட்டாளராக இருந்து தொழிலாளர் போராட்டங்களிலும், நீதிக்கும் சமத்துவத்துக்குமான இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினராக இருந்து பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுக் கொல்லப்பட்டவர்களின், காணாமற் போனோரின் குடும்பத்தினருக்கான பல திட்டங்களின் முன்னோடியாகவும் இருந்தவர். தன் வாழ் நாள் முழுவதும் சாதி ஒடுக்குமுறை, பெண்ணடக்குமுறை, யாழ்மையவாதம், இனவாதம், இன அடக்குமுறை, நிறவாதம், பாசிசம் போன்றவற்றிற்கு எதிராகத் தீவிரமாகச் செயற்பட்டதுடன் 1985 இல் இருந்து 1995 வரை சிந்தனை என்ற காலண்டிதழின் ஆசிரியராக இருந்தார். 1988 இல் இருந்து தன் இறப்புவரை இலக்கியச் சந்திப்பின் தொடர்ந்த ஏற்பாட்டாளராகவும் அதன் செல்வழிக்கான புலமைத்துவ கோட்பாட்டாளராகவும் இருந்தார். இலங்கையில் கணக்கியல், கணணி நிரலாக்கம் போன்றவற்றின் ஆசிரியராகவும் சில கூட்டுத்தாபனங்களில் கணக்காளராகவும் கடமையாற்றினார். இவரது இறுதி அஞ்சலி நிகழ்வுகள்
வியாழக்கிழமை, 27.12.2007 பி.ப 12:30 மணி தொடக்கம் 14:00 மணிவரை
Krematorium Ruhleben
Am Hain
13597 Berlin, Germany
(சுரங்க ரயில்: Ruhleben, பஸ் : 145)
என்ற முகவரியில் அமைந்த மயானத்தில் நடைபெறும்.
வீட்டுமுகவரி:
J.Sinnathamby & U. Pararajasingam
Lipschitzallee 32
12351 Berlin
தொலைபேசி: 0049-30-61627808
கைத் தொலைபேசி: 0049-15151516884
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக