பக்கங்கள்

செவ்வாய், ஜூலை 08, 2008

நெடுங்குருதி

1983-2008


நெடுங்குருதி


யூலை 1983: வெலிக்கடைப் படுகொலைகளும் தமிழின அழித்தொழிப்பும்



அந்த நாட்களில் எங்கள் தேசத்தின் தெருக்களிலெல்லாம் தமிழர்களின் குருதி வடிந்தது. எண்ணற்ற கொலைகளும் பாலியல் வல்லுறவுகளும் தாக்குதல்களும் கொள்ளையடிப்புக்களும் தமிழர்கள் மீது ஸ்ரீலங்கா அரசால் திட்டமிட்ட முறையில் கட்டவிழ்த்து விடப்பட்டன. சொந்த நாட்டில் சொந்த அரசினாலேயே பல்லாயிரக்கணக்கான மக்கள் அகதிகளாக்கப்பட்டார்கள். அனைத்துத் தார்மீகங்களையும் காற்றிலே பறக்கவிட்ட பேரினவாத அரசு அய்ம்பத்துமூன்று சிறைக்கைதிகளை வெலிக்கடைச் சிறையிலே திட்டமிட்ட முறையில் படுகொலை செய்தது. தேசம் முழுவதும் இனவாதத் தீ பற்றி எரிந்தது. அரசுத் தலைவர் ஜே.ஆர்.ஜயவர்த்தன „…போர் என்றால் போர் சமாதான்ம் என்றால் சமாதானம்…“ என்று சவால் செய்த போது சவாலை ஏற்க ஆயிரக்கணக்கான தமிழ் இளைஞர்களை யூலை 1983 உருவாக்கிக் காட்டிற்று.

இன்று சரியாக இருபதைந்து துயரமான வருடங்கள் கழிந்துவிட்டன. அன்று ஓடிய குருதி நெடுங்குருதியாய்ப் பெருகி எங்கள் தேசம் இரத்தத்தில் மூழ்கிய நிலமாய்க் கிடக்கிறது. யூலைப் படுகொலைகளை நாம் நினைவுகூரும் நாளிது! யூலைப் படுகொலைகளைத் தொடர்ந்து பெருவீச்சில் எழுந்த தமிழ்த் தேசியத்தைப் பற்றி நாம் விவாதிக்க வேண்டிய நாளும் இதுதான்.
எம்மிடம் இன்னும் நம்பிக்கை எஞ்சிக்கிடக்கின்றது.
அந்த நம்பிக்கை தருக்கங்களுக்கு அப்பலுமிருக்கலாம்.
ஆனால் அது அறம் சார்ந்த நம்பிக்கை அல்லது அறம் சார்ந்த கனவு!

அனைவரும் வருக! எதிர்வரும் யூலை 27ஆவது நாள் நாம் பேசியே ஆகவேண்டிய நாள்!


27.07.2008
ஞாயிறு காலை 10 மணி


Salle de Rencontre 


Rue Jean Francois


95140 Garges Les Gonesse


 


RER ‘D’ : Garges les Gonesse Bus 133 arrét: Hótel de Ville
நிகழ்வுகள்:
10:00 நினைவஞ்சலியுடன் ஆரம்பம்
10:05 தலைமையுரை
10:30 நினைவுப் பேருரைகள்
12:30 மதிய உணவு
13:30 நினைவுப் பேருரைகளின் தொடர்ச்சி
15:00 ஆற்றுகை
15:30 கலந்துரையாடல்:

தமிழ்த் தேசியம் எழுச்சியும் வீழ்ச்சியும்


18:00 நிறைவு

தொடர்புகட்கு: welikada53@yahoo.com
Tél. /கைத்தொலைபேசி: 0033-664034724 (குகன்)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக