பக்கங்கள்

செவ்வாய், நவம்பர் 24, 2020

அமித் ஷா அயோத்யா

’அமித் ஷா அயோத்யா’ என்ற எஸ்.வி.ராஜதுரை அவர்கள் எழுதிய
சிறிய நூலை நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் வெளியிட்டுள்ளது. இந்துத்துவத்தின் பிதாமகர் வி.டி.சவர்க்காரை முன்னிறுத்தி, இந்திய வரலாறு இனி இந்தியனின் நோக்கு நிலையில் இருந்து எழுதப்படவேண்டும் என்றும், அதில் இஸ்லாமியர்கள் ஆட்சிகள் அனைத்துமே பிற்போக்கானவை என்றும் நிறுவுகின்ற வரலாற்று நூல்களை எழுதும் முயற்சி வாஜ்பாயி ஆட்சிக் காலத்திலேயே தொடங்கப்பட்டு விட்டது என்றும், அம்பேத்கார், டி.டி. கோசாம்பி போன்றோர் எழுதியவை இந்தியனின் நோக்கு நிலை இல்லாதது போன்று மறைக்கப்பட்டு வரும் ஆபத்தினையும் எஸ்.வி.ஆர் எழுதிச் செல்கின்றார்.

உதாரணமாக கர்நாடக மாநில பாஜக அரசாங்கம், திப்புவுக்கு அரசாங்க விழா எடுப்பதைத் தடைசெய்த ஆணையினை சுட்டிக் காட்டுகின்றார். காலனித்துவ ஆட்சியாளர்கள் ’சிப்பாய்க் கலகம்’ என்ற எழுதியதற்கு மாறாக இந்தியக் கிளர்ச்சி', 'இந்தியாவில் கிளர்ச்சி', 'இந்திய எழுச்சி' (Indian Revolt, Revolt in India, Indian Rebellion) என்றே கார்ல் மார்க்ஸ்-ஏங்கல்ஸ் எழுதினார்கள் என்பதையும் பதிவு செய்கின்றார். ஏழு சிறிய ஆனால் செறிவான கீழ்வரும் கட்டுரைகள் நூலில் இருக்கின்றன.


1. அமித் ஷாவின் வரலாறு எழுது நெறி

2. 'இந்தியாவின் முதல் சுதந்திரப் போர், 1857

3. 'வீர்' சாவர்க்கர்

4. 'இந்துத்துவா'

5. 'அக்டோபர் 31'

6. 'நம்பிக்கை'யும் சட்டத் தகுதியும்

7. வரலாறும் வக்கிரங்களும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக