எம்.டி.வாசுதேவன்நாயர் அவர்களின் ’ரன்டமூழம்’ என்ற மலையாள நாவல் “இரண்டாம் இடம்” என்கிற பெயரில் சாகித்திய அக்காதெமியால் 2000 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டிருக்கின்றது.
மகாபாரதக் கதையினைப் புரடிப்போட்டு, கொஞ்சம் இன்றைய காலச் சிந்தனைப் போகில் இன்னொரு புனைவாக, வீமனைக் கதைசொல்லியாக வைத்து மகாபாரத்தினை மீள அழகுற எழுதிய சித்திரம் அது. அதனைத் தமிழில் திறம்பட ஆக்கியிருகின்றார் குறிஞ்சிவேலன்.
தமிழில் இந்த நூல்வெளிவந்து இருபது ஆண்டுகளுக்கு மேலாவதால் இந் நூல் பற்றிய அறிமுகங்கள், விமர்சனங்கள், இது ஏற்படுத்திய தாக்கங்கள், ஒப்பீடுகள் போன்றவை நிறையவே எழுதப்பட்டிருக்கின்றன. எனது நண்பர்கள் அனேகர் இந் நாவலை படித்திருக்கின்றனர். உப பாண்டவம், கிருஷ்ணன் என்றொரு மானுடன், திரௌபதி போன்ற நூல்களை மேலும் படிக்கும்படி ஆலோசனை கூறுகின்றனர்.
ஆனாலும் ஜெய் பீம் என்ற திரைப்படம் வெளியாகிய வேளையில் இந் நாவலைப் படித்துமுடித்தபோது ஆதிக்கத்தில் இருப்பவர்கள் பல்லாயிரம் ஆண்டுகளாக அறங்களைத் தமக்கு ஏற்றபடி இயற்றியும் இயக்கியும் எவ்வாறு இந்தப் பூமியின் உன்னதங்களை அழித்து வருகின்றனர் என்பதுவும் அந்த இதிகாசக் கால மனிதர்களும் மனோநிலையும் அப்படியே இருப்பதாகவுமே இக்கால நிகழ்வுகளையும் வைத்து எண்ணிப் பார்த்தபோது தோன்றியது.
இந்திய உபகண்டமே அகண்ட நடுவாயிருக்கும் தெற்கு ஆசிய சமூகங்களில் மகாபாரதம், இராமாயணம் போன்ற இதிகாசங்களும் அவைகூறும் நம்பிக்கைகளும், அறங்களும், பண்பாடுகளும் வாழ்வின் சகல தளங்களிலும் ஆயிரமாயிரம் வருஷங்களாக ஆழப்பதிந்து கிடக்கின்றன. அதனால் காடும் மலையும் மரங்களும் கொடிகளும் மிருகங்களும் பறவைகளும் நதிகளும் பொய்கைகளும் மனிதர்களும் பாத்திரங்களும் போரும் சமாதானமும் போர்க்கருவிகளும் மரணங்களும் எல்லாமே புனிதப்பட்டு நிற்கின்றன. அதியுச்சமாக இவற்றிற் பல கடவுள்களாகியும் நிற்கின்றன.
அதனாலும் இன்னும்பலப்பல காரணங்களாலும் எங்கிருந்து வந்த ஆதிக்கமும் பண்பாடு என்று சொல்லப்படுபவற்றின் மீதான படையெடுப்புக்களும் எதுவித துரும்பாட்டத்தைத் தன்னும் ஏற்படுத்தவில்லை என்பதுவும் இச் சிந்தனைப்போக்கு மேலும் மேலும் கெட்டியாகி வருவதாகவுமே அண்மைக்கால நிகழ்வுகள் வரை எமக்குச் சொல்லும் சேதிகளாக இருக்கின்றன. எல்லாவற்றையும் பக்தி சிரத்தையில், வழிபாட்டு மனோநிலையில் அணுகுமாறுதான் நாம் வளர்க்கப்பட்டிருகின்றோம், பயிற்றப்பட்டிருக்கின்றோம். அப்படியில்லாமல் கொஞ்சம் பகுத்து அறியும் போக்கோடு அணுகும்போது நாமும் அறிவு கைவரப் பெற்றவர்களாகின்றோம். நாமும் கூடத் தவம் இயற்றிப்பிறந்தவர்களா கின்றோம்.
நாவலைப் படித்துக்கொண்டிக்கும் போது நான் வாழ்ந்துகொண்டிருக்கும் கால நிகழ்வுகள் தான் எனது மனக் காட்சிகளாக ஓடிக்கொண்டிருந்தன. கௌரவ, பாண்டவ மைந்தர்களும் பாஞ்சாலியும்,ஆச்சரியர்களும், சாமியார்களும் இக்கால மனித உருவங்களாகத்தான் எனக்குள் உயிர்பெற்றெழுந்தார்கள்.ஜெய் பீம் என்ற திரைப்பத்தினைப் பார்த்தபோது அந்தக் காட்சிகள் எல்லாம் இரண்டாம் இடம் நாவலைப் படித்தபோது வந்த மனப் படிமங்களோடு ஒன்றிப் போயின.
காட்டுவாசிகள், நாகர்கள், அசுர்கள் என்கிற மக்கள் மற்றும் அதிகாரத்தினையே போற்றி பாடப் பணிக்கப்பட்ட சூதர்கள் என்று எல்லோரையும் அவர்களிடத்தில் பிறந்த தமது பிள்ளைகளயாயினும் தம் நலத்திற்குக் கொல்லவும் பலிகொடுக்கவும் தயங்கா மனநிலை கொண்ட பரம்பரை அப்படியே தொடர்கிறது என்பதை மட்டும் சொல்லிவிடுகிறேன்.
லண்டன்வாழ் நாடக இயக்குனர் க.பாலேந்திராவின் இயக்கத்தில் பாண்டவர்கள் வாழ்ந்த அரக்கு மாளிகையில் தீமூட்டிக் கொல்லப்பட்ட தாயினதும் ஐந்து பிள்ளைகளினதும் ஆவிகள் குந்தி தேவியையும் பாண்டவர்களையும் குற்றஞ் சுமத்தும் நல்ல, சமூக விமர்சன நாடகமொன்றை 90களில் பார்த்திருகின்றேன்.
நடந்துகொண்டிருப்பது ஒரு அவசரம் மிகுந்த உலகின் ஆரவாரக் காலம். அந்த உலகத்திற்குள் கருந்துளை விழுங்கியதுபோல் நாமும் பாதிப் பிரக்ஞையோடும் சிலவேளைகளில் அது இல்லாமலும் விழுங்கப்பட்டிருக்கின்றோம். எமது எதிர்வினைகளும் மற்றெல்லா வினைகளும் அதற்குள் அடக்கப்பட்டுவிடுகிறதோ?

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக