
இன்று நெல்சன் மண்டெலாவின் 90 ஆவது பிறந்த நாள். தென்னாபிரிக்கத் தலைவர் நெல்சன் மண்டெலா அவர்கள் விடுதலையின் அழியாத குறியீடு. லண்டன் ஹைட்பார்கில் இடம்பெறும் சர்வதேச எயிட்ஸ் விழிப்புணர்வுக்கு ஆதரவு திரட்டும் இசை நிகழ்வில் இவரது 90 ஆவது பிறந்த நாள் கொண்டாடப்படுகின்றது.
1960 களில் ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் (ANC) தென்னாபிரிக்க அப்பாத்தைட் (ARPATHEID) அரசினால் தடைசெய்யப்பட்டது.ANC யின் தலைவர்கள் கைது செய்யப்பட்டு சிறையிடப்பட்டனர். பலர் அந் நாட்டை விட்டு ஓடிவிட நேர்ந்தது. நெல்சன் மண்டேலா அவர்கள் 27 வருடங்கள் சிறைவைக்கப்பட்டிருந்தார். சுமார் 30 வருடங்கள் அவர்களது போராட்டம் தொடர்ந்தது. ANC யும் நெல்சன் மண்டேலாவின் பெயரும் அவர்கள் கம்யூனிசப் பயங்கரவாதிகள் என்று முத்திரையிடப்பட்டு அய்க்கிய அமெரிக்காவின் பயங்கரவாதிகள் கண்காணிப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டனர். சுதந்திர தென்னாபிரிக்காவின் முதல் தலைவராக 1994 ஆம் ஆண்டு மண்டெலா அவர்கள் தெரிவு செய்யப்பட்டார். இன்றைய தென்னாபிரிக்க அரசின் அய்க்கிய அமெரிக்காவிற்கான தூதுவர் வெலிலே இன்லாப்போ அவர்களின் விண்ணப்பத்தினை அடுத்து அய்க்கிய அமெரிக்க காங்கிரசில் இப் பெயர் நீக்க விண்ணப்பம் அங்கீகரிக்கப்பட்டு பயங்கரவாதிகள் கண்காணிப்புப் பட்டியலில் இருந்து நெல்சன் மண்டேலா அவர்களின் பெயர் கடந்த மாத இறுதியில் நீக்கப்பட்டிருக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக