எனது தத்துத் தாயாரின் கழுத்தில் பருத்த சங்கிலியொன்றில் மாட்டிய, சிறிய கல்லாப் பெட்டியின் சாவி ஒன்று தொங்கிக் கொண்டிருக்கும். ஒவ்வொரு மாதத் தொடக்கதில் 800 ஜெர்மன் மார்க்குகளை வங்கியில் இருந்து எடுத்துவந்து அந்தக் கல்லாப்பெட்டிக்குள் பூட்டி வைத்திருப்பாள். அதில் இருந்து, காலை 5 மணிக்கு வேலைக்குப் புறப்படும் எனது தத்துத் தந்தைக்கு ஒவ்வொரு நாளும் கண்டிப்பாக 5 மார்க் மட்டும் அன்றையநாட் செலவிற்க்காகப் படியளந்து விடுவாள். சிகரட், பீர், சிறு கடைகளில் தொங்கும் அதிஸ்டலாபச் சூது மெசின் என்ற யானைப் பசிக்கு எள்ளுப்பொரி போட்டது போலத்தான் அந்த 5 மார்க் அவருக்கு. அவரது இமாலய அதிருப்பியை ஒரு சில பொருமல், புறுபுறுப்புக்களுடன் அவரிடமிருந்து வெளிப்படும்போதெல்லாம் “றூஹிஸ்” (அமைதி) என்ற ஒற்றைச் சொல்லில் பெட்டிக்குள் சுருளும் பாம்பு.
70கள் 80களில் எல்லாம் ஜெர்மனியின் குளிர்காலம் மிக மோசமாக இருக்கும், தொடர் உறைபனி வீழ்ச்சி, காலநிலை பூஜ்ஜியதிற்குக் கீழே மைனஸ் முப்பது பாகை வரை சென்றுவிடும். அறைகளில் கட்டப்பட்டிருக்கும் வெப்ப உலைகளில் நிலக்கரி போட்டு, ஒரு நாளில் அறையொன்றுக்கு ஆறு கட்டிகள் நிலக்கரிகளை இரண்டாக உடைத்து விறகும் சேர்த்துச் சூடாக்கினால் நாள் முழுவதும் அரை சூடாக இருக்கும். கடும் வின்ரர் காலங்களில் எல்லா அறைகளும் சூடாக்கப்படுவதில்லை. வரவேற்பறை என்று சொல்லப்படுகின்ற அறையினை மட்டும் சூடாக்கி நாள் முழுவதும் அதற்குள் முடங்கிக் கிடப்போம். இப்படியாக குளிகார்காலம் வரும் முன்பே அவ்வாண்டுக்குத் தேவையான நிலக்கரி எல்லாம் ஆடர் செய்து நிலக்கீழ் அறைகளில் தயாராக வைக்கப்பட்டிருக்கும்.
எனது தத்துத் தாயாரும் தந்தையும் 1967 ம் ஆண்டளவில் மேற்கு பெர்லின் வந்து சேர்ந்தார்கள். தந்தை அவளுக்கு மூன்றாவது தாரம். உலகில் மனிதர்களுக்கு வழங்கப்படும் இனிய நாட்களில் சில நாட்களைத் தானும் சந்தோஷமாக அவள் அனுபவித்திருக்கக் கூடும் என்பதும் என் வெறும் ஊகமே.
எழுபதுகளில் ஒரு நாள் அவள் நிலக்கரிக்கு ஆடர் செய்து, அவை வீட்டுக்கு வந்து நிலக்கீழ் அறையில் இறக்கியாயிற்று. கட்டணம் செலுத்தக் கல்லாப் பெட்டியைத் திறந்தபோது அங்கே பணம் இருக்கவில்லை. வால்டர் என்ற மானுடன் அனைத்துப் பணத்தையும் சிறு கடைகளில் தொங்கும் அதிஸ்டலாபச் சூது மெசின்களில் யாருக்கும் தெரியாமல் இழந்திருந்தான். அன்றுதான் அவள் தன் கழுத்தில் பருத்த சங்கிலியொன்றில் மாட்டிய, சிறிய கல்லாப் பெட்டியின் சாவி ஒன்றைத் தன் மங்கல நாணாக மாலை சூடினாள். இறக்கும் வரை அது ஒருபோதும் அவள் கழுத்தில் இருந்து இறங்கியதில்லை. எழுபதுகளின் நடுப்பகுதி அது. போக்கிடமற்று அலைந்த பொழுதுகள் என்னுடையவை. யாழ்ப்பாணக் கடற்கரையோரம் - கொய்யத்தோட்டம் என்றவொரு ஊரில் எனக்கு என் ஞானி மச்சாள் வீட்டில் புகலிடம் கிடைத்தது.
ஞானம்மா என்பது அவளது பெயராகலாம். காலம் தாழ்த்திக் கல்யாணமாகியிருக்கலாம். அவள் கணவர் எனக்கு வாய்த்த தத்துத் தந்தைபோல் ஊதாரியாக இருந்திருக்கலாம். ஊகங்கள் தான். குடும்பமாக அவர்கள் வெளியூர் சென்றார்கள். ஒரு நூறு ரூபாவை என்மீதுகொண்ட அதீத நம்பிக்கையினால் என்னை ஒரு iron safe ஆகக் கருதிக்கொண்டு ஒரு 100 ரூபாயை பாதுகாப்பாக வைத்திருக்கும் படி என்னிடம் திணித்தாள் ஞானி மச்சாள்.
வீடு தனித்திருந்தது. தனிமையில் இளமையைக் கழிகாவா நமக்கு மனித்தப் பிறவி. பார்ட்டிக்கான ஏற்பாடுகள் அனைத்தும் செய்துவிட்டேன். நண்பர்கள் வந்தாயிற்று. ஆக்கிய சோறு மட்டும் கொஞ்சம் கரைந்து பொங்கலாயிற்று. என்னிடம் பாடம் கேட்கும் முன்வீட்டுப் பவானியின் அம்மா கரைந்த சோற்றினை ஒரு சுளகில் கொட்டிப் பரப்பி ஆற வைத்தபோது, இறைச்சிக் கறிக்கும் ஈரல் பொரியலுக்கும் துணை அமிர்தம் ஆகியது. பொந்தில் வைத்த தீயாக மகிழ்சி பரவியது. வெந்து தணிந்தது வீடு.
விடிந்தால் ஞானி மச்சாள் குடும்பம் வீடு திரும்பி விடுவார்கள். நானாகிய கல்லாப்பெட்டியினைத் திறக்க அவள் சாவியினைப் போட்டுத் திருப்புவாள். அது ஆயிரம் பொய்களால் நிரப்பி மூடிய மௌனமாய், வெறுமையாய்த் திறந்து கிடப்பது தெரியவந்துவிடும். நான் தலைமறைவானேன். ஆள் விட்டுத் தேடி ஞானி மச்சாள் நான் இப்போது யார் வீட்டுச் சிறப்பு விருந்தினனாக இருக்கிறேன் என்று கண்டறிந்து வரும்படி ஆள் அனுப்பிவிட்டாள். நான் கொடுத்த பார்ட்டியில் கலந்துகொண்டவர்களில் மட்டக்களப்பு கல்முனையைச் சேர்ந்த நண்பன் கையில் ”உருளோஸ்” என்று சொல்லப்படும் கைக் கடிகாரம், அதுதான் மணிக்கூடு கட்டியிருந்தது என் மனக் கண்ணில் ஜொலித்தது. அவனிடம் சென்று நின்னைச் சரணடைந்தேன் என்று நயமாகப் பாடி, அந்த மணிக்கூட்டை அடைவு வைப்பதற்கென்று பெற்றுக்கொண்டேன். பார்ட்டியிற் கலந்துகொண்ட குற்றத்திற்குத் தண்டனை இது வென்று அவன் நினைத்திருப்பான். மணிக்கூட்டை 150 ரூபாவிற்கு அடைவு வைத்து, எதுவும் நடந்துவிடவில்லை என்பதாக அவளது பணத்தை எடுத்துக் கொடுத்தேன். கிழக்கிலங்கையில் இருந்து வடக்கிலங்கை வந்து படித்துக்கொண்டிருக்கும் நண்பன் மீண்டும் கல்முனைக்கு வீடு திரும்ப இன்னும் மூன்று மாதங்கள் இருக்கிறதல்லவா! அதற்குள் அந்த அடைவுப் பொருளை எப்படியும் மீட்டுவிடலாம். நம்பிக்கையில் வாழும் உலகு.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக