இருளர் திருமணம்
முன்னுரை:-
நீலகிரி மாவட்டத்தில் குன்னூர் வட்டத்தில் 33 சிற்றூர்களில் சுமார் 4072 இருளர்கள் வாழ்கிறார்கள். இந்த சிற்றூர்கள் கடல் மட்டத்திற்கு 1000 அடிக்கு மேல் உள்ள மலைப்பகுதிகளிலும் பள்ளத்தாக்குகளிலும் உள்ளன. இவர்களிடம் பலவகையான பழக்கவழக்கங்கள் உள்ளன. சில பழக்கவழக்கங்கள்புதுமையானவை. இருளர்களின் திருமணம்பற்றிய சில செய்திகளை இங்கு விரித்து எழுதியுள்ளேன்.
ஹார்க்னெஸ் என்பவர் இருளர்கள் திருமணத்தைப் பற்றி பின்வருமாறு குறிப்பிடுகின்றார்.: ”இருளர்களிடையில் திருமண ஒப்பந்தம் என்று சொல்லத்தக்க சடங்கு எதுவும் காணப்படவில்லை. ஒரு ஆணுடன் சேர்ந்துவாழ்வதோ அவனிடமிருந்து பிரிந்து சென்றுவிடுவதோ பெண்ணின் விருப்பத்தைப் பொறுத்ததாகும். இருளர்களில் வசதி உள்ளசிலர் ஆணும், பெண்ணும் கணவன், மனைவியாக இணையும் பொழுது நண்பர்களுக்கும் அண்டை அயலாருக்கும் விருந்து ஒன்று நடத்துவார்கள். அவ் விருந்தின் போது குறும்பர்கள் தங்கள் இசைக்கருவிகளுடன் கலந்து கொண்டு அன்று இரவு முழுவதும் ஆடிக்களிப்பார்கள். ஆயினும் இது அரிதாகக் காணப்படும் நிகழ்ச்சியாகும்."
இருளர்களிடையே நடைபெறும் திருமணம் மிகவும் எளிமையான ஒரு நிகழ்ச்சி என்று தர்ஸ்டன் குறிப்பிடுகிறார்.: "திருமணத்தின்போது செம்மறி ஆடு கொல்லப்பட்டு விருந்துக்கு ஏற்பாடு செய்யப்படும். திருமணத்தில் கலந்துகொள்ளும் விருந்தினர்கள் மணமகனுக்குத் தம்மால் இயன்ற அளவு பரிசாகக் கொடுக்கிறார்கள். மணமகன் அப்பரிசுப்பணத்தை ஒருதுணியில் முடித்து கொண்டு மணமகள் வீட்டிற்குச் சென்று அவளைத் தன்னுடைய வீட்டிற்கு அழைத்துச் சென்றுவிடுவான். விதவைகள் மறுமணம் செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள், இருளர்களிடையில் பூங்கரு(Poongkaru)குடகர் (Kudagar), கல்கட்டி (Kalkatti),வெள்ளக(Vellaka),தெவாலா (Devala), கொப்பிலங்கம் (Koppilingam) என ஆறுஉட்பிரிவுகள் உண்டு.
இப்பிரிவுகளில் முதல்ஐந்து பிரிவுகளைச் சார்ந்தவர்கள் சகோதர உறவு உடையவர்களாகக் கருதப்படுகிறார்கள். எனவே இப்பிரிவுகளைச் சார்ந்தவர்களுக்குள் திருமணம் நடைபெற முடியாது. இப்பிரிகளைர் சார்ந்த அனைவரும் கொப்பிலங்கம்(Koppilingam) பிரிவைச் சார்ந்தவர்களோடு மட்டுமே மண உறவு கொள்ளலாம்.”
''பூ சா, கோ. கலைக் கல்லூரியின் சார்பில் 1962-ல் எடுக்கப்பட்ட சமூக, பொருளாதாரசர்வே பின்வருமாறு கூறுகிறது.: ”இருளர் இனத்தில் இரு அகமணக் குழுக்கள் இருக்கின்றன. அவற்றுள் உயர்ந்தது (Superior) என்றும் மற்றொன்று தாழ்ந்தது(Inferior) என்றும் கூறுகிறது. உயர்ந்த அகமணக்குழுவில் (Endogamous marriage group) உள்ள உட்பிரிவுகள் ஏழு.: 1. கொப்பிலிகெ, 2. குறுநடுக, 3. புங்கெ, 4. கொடுலெ, 5. கல்கட்டி, 6. சம்பெ, 7. தெவனெ என்பன.
தாழ்ந்த அகமணக் குழுவிலுள்ள உட்பிரிவுகள்: 1.சோலைகள், 2. உப்பிலிகர், 3. வெள்ளைகள், 4. கர்த்திகர், 5. வொரிகர் என்பன.
இருளர்கள் திருமணத்தைப் பொறுத்தவரை இரு மரபுகளைக் கொண்டுள்ளனர். ஒரு மரபுப் படி மணமகனின் பெற்றோர் ஆடவனுக்கு வயதுவந்தவுடன் பெண் வீட்டிற்குச் சென்று பெண்கேட்டு திருமணம் செய்து வைப்பது. பெண்வீட்டிற்குச் செல்லும் பொழுது மாப்பிள்ளையின் தாய், தந்தையர் இரு இரும்புத் தடிகளுடன் சென்று பெண் கேட்பார்கள். அவர்கள் பெண் கொடுப்பதாகச் சொல்லி விட்டால் தம்முடன் கொண்டு சென்ற இரண்டு இரும்புத் தடிகளையும் பெண் வீட்டில் வைத்துவிட்டு வந்துவிடுவார்கள். ஒரு மாதத்திற்குப் பின் மாப்பிள்ளையின் தாயும், தந்தையும், மற்றும் ஐந்து உறவினர்களும் பெண் வீட்டிற்கு ஏழு குச்சிகளுடன் செல்வார்கள். பெண்ணின் பெற்றோர்கள் பெண் கொடுக்கச் சம்மதித்தால் வந்தவர்களுக்கு ஒரு விருந்து கொடுப்பார்கள். பெண் கேட்கச் சென்றவர்கள் ஏழு குச்சிகளுடன் திரும்புவார்கள்.
மாப்பிள்ளை வீட்டிலிருந்து சில நாட்கள் கழித்து ஆண்கள் பெண்கள் கொண்ட குழுக்கள் இசைக்குழுவோடு சென்று சென்று பெண்ணின் தாய்,தந்தைக்கு அணிகலன்கள் இருபத்தைந்து ரூபாய் ஆகியவற்றைக் கொடுப்பார்கள்,பெண்ணைப் புதுத்துணிகளை உடுத்தச் செய்து இசைக்குழு புடை சூழ அவளை ஊர்வலமாக தாய்மாமன் வீட்டிற்கு அழைத்துச் செல்வார்கள். பெண்ணையும், மாப்பிள்ளையையும் நிறுத்தி அவர்களுக்கிடையே ஒரு திரையிடுவர். மாப்பிள்ளை தாலியை ஒரு முதியவரிடம் கொடுக்கிறான். முதியவர் அதைத் தன் மனைவியிடம் கொடுக்க அவள் பெண்ணுக்குத் தாலிகட்டுகிறாள்.
பண்டைக் காலத்தில் பாசியோ, மஞ்சள் கயிறோ தாலியாகப் பயன்படுத்தப்பட்டது. இப்போது உ.லோகத்தால் செய்யப்பட்ட தாலியை பயன் படுத்துகிறார்கள். திருமணம் ஆனவுடன் மணமகள் தன் கணவன் வீட்டில் அவனுடைய தாய், தந்தையருடன் சேர்ந்து வாழ்வாள். சில சமயங்களில் கணவனும் மனைவியும் சேர்ந்து தனியாக வாழ்வார்கள். இருளர்களிடையே காணப்படும் வேறு சில உட்பிரிவினரிடையே இன்னொரு திருமண முறையும் வழக்கில் காணப்படுகிறது. இம்முறைப்படி பூப்பெய்திய பெண் திருமணத்துக்கு முன் தன்னை மணக்கவிருப்பவன் வீட்டிற்குச் சென்று அவனுடன் ஓராண்டு வரைவாழ்க்கை நடத்துவாள். மாப்பிள்ளை வசதிக்கேற்ப பணம் சேர்த்தவுடன் திருமணம் நடைபெறுகிறது. இப்படி இருவரும் வாழும்பொழுது அவள் பிள்ளை பெறும் நிலை அடைந்துவிட்டால் உடனே திருமணம் நடைபெறும். பெரும்பாலும் தாய், தந்தையரே திருமண ஏற்பாடுகளைச் செய்கிறார்கள். ஒரு சிலரே தாங்களே பெண்பார்த்துத் திருமணம் செய்துகொள்கின்றனர். விதவைத் திருமணங்கள் நடைபெறுகின்றன. ஒரு சிலர் பூப்பெய்தாத பெண்களையும் திருமணம் செய்து கொள்கின்றனர். இருளமொழி பற்றிய கள ஆய்வின் போது(Field work) இருளர்களின் திருமணம் பற்றி நேரில் கண்டறிந்தவற்றையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாகும்.
மணவகைகள்:-
இருளர்களிடையே இரண்டு மூன்று மணவகைகள் உள்ளன. மாப்பிள்ளையின் தாய்தந்தையர் பெண்ணை நேரில் பார்த்து, பெண்வீட்டாரிடம் கேட்டு மணம் முடிப்பது ஒருமரபு. மற்றொரு மரபு மாப்பிள்ளை தனக்குப்பிடித்த பூப்பெய்திய பெண்ணோடு திருமணத்திற்கு முன்பு தொடர்பு கொண்டு அவளுடைய வீட்டில் தங்கி வாழ்க்கை நடத்திப்பின் அவளைத் திருமணம் செய்து கொள்வதாகும்.
பெண்வீட்டில் தங்கி வாழ்க்கை நடத்தும். ஆடவனை ''மென மாப்பிள்ளை'' என்று இவர்கள் மொழியில் கூறுகிறார்கள். ''மெனமாப்பிள்ளை" அவளோடு வாழ்க்கை நடத்தும் காலத்தில் தான் ஈட்டும் ஊதியத்தை அவள் வீட்டாருக்குத் தருகிறான். இதைப் பணிசெய்து திருமணம் செய்து கொள்ளும் முறை, என்று கொள்ளலாம். (marriage by service). சிலசமயங்களில் இவ்வாறு வாழ்க்கை நடத்தும் மென மாப்பிள்ளை பெண் பிடிக்கவில்லை என்ற காரணத்தால் அவளை விட்டுச் செல்வதும் உண்டு. பெண் பருவம் அடைவதற்கு முன்பே சிலர் திருமணம்செய்து கொள்ளுகிறார்கள். பருவம் அடைந்த பெண்ணைத் தன் வீட்டிற்கு அழைத்துச் சென்று வைத்திருந்து வாழ்க்கை நடத்தியபின் திருமணம் செய்து கொள்வது ஒரு வகை மரபு. ஒரு சிலர் தமக்குப் பிடித்த பெண்ணைக் கூட்டிக் கொண்டு ஓடி விடுவதும் உண்டு. இதை உடன்போக்குத் திருமணம்(marriage by elopement) என்று கொள்ளலாம். ஒருபெண் ஒருவனை மணக்கச் சம்மதிக்கா விட்டால் அவளுக்கு மருந்திட்டு வசியம் செய்து (black magic, witchcraft)திருமணம் செய்து கொள்வதுண்டு. விதவைத் திருமணங்கள் நடைபெறுகின்றன.
திருமணமுறை:-
இருளர் இனத்தில் இரு அகமணக்குழுவில் ஏழு உட்பிரிவுகள் உள்ளன.:
1. குப்பெ, 2. சம்பெ, 3, தெவனே, 4. கல்கட்டி, 5. குறுநகெ, 9. கொடுவெ, 7.புங்கெ என்பனவாகும். இன்னொரு அகமணக்குழுவில்
1.உப்பளிகெ, 2.வெள்ளிளகெ, 3.பேராத, 4.போரிகே, 5.வெட்டகெ, 6.பணிகெ, -ஆகிய ஆறு உட்பிரிவுகள் காணப்படுகின்றன.
முதலில் குறிப்பிட்ட ஏழு பிரிவுகளில் தான் பெரும்பாலான இருளர்கள் அடங்குவர். இரண்டாவதாகக் குறிப்பிடப்பட்டுள்ள பிரிவுகள் பற்றிக் கேள்வியுற்றுள்ளேன். ஆனால் அவர்களைப் பார்த்ததில்லை. ஒவ்வொரு ஊரிலும் 'கொத்துக்காரன்'என்றும் ’ஜாத்தி'என்றும் பெரியவர்கள் இருக்கிறார்கள். சோத்துக்காரன் ஊருக்குத் தலைவன். ஜாத்தி என்னும் பெரியவன் திருமணம், ஈமச்சடங்கு, பெண்பூப்படைந்ததை கொண்டாடும் விழா (நெர அப்ப), குழந்தைக்குப் பெயரிடும் விழா போன்றவற்றை நடத்திவைக்கிறான். ஒரு அகமணக் குழுவிலுள்ள உட்பிரிவுகள் அனைத்துக்கும் ஒருவனே ஜாத்தியாக இருக்க முடியாது. ஒரு பிரிவைச் சார்த்தவனுக்கு மாமன், மைத்துனன் அல்லது சம்பந்தம் செய்துகொள்ளத்தக்க பிரிவைச்சேர்ந்தவள் ஜாத்தியாக இருக்க இயலும். அகமணக் குழுவிலுள்ள உட்பிரிவுகளில் இன்ன பிரிவைச் சார்ந்தவன், இன்ன பிரிவில்தான் திருமணம் கொள்ள இயலும் என்பதையும் பின் வரும் பட்டியல் விளக்கும். குப்பெ என்ற பிரிவைச் சார்ந்த இருளர்கள் சம்பெ, கல்கட்டி, தெவனெ, கொடுஎவ, வகைப் பிரிவைச் சேர்ந்தவர்களை திருமணம்செய்து கொள்ளலாம்; ஜாத்தியாக நியமித்துகொள்ளலாம். இதுபோல சம்பெ என்றபிரிவினர் குப்பெ, தெவனே, குறுநகெ என்ற பிரிவினரை திருமணம் செய்து கொள்ளலாம்; ஜாத்தியாக நியமித்துக் கொள்ளலாம். கல்கட்டி என்ற பிரிவினர் (சம்பரைப்போன்று)குப்பெ, தெவனெ, குறுநகெ, என்ற மூன்றுபிரிவினரைத் திருமணம் செய்து கொள்ளலாம்; ஜாத்தியாக நியமித்துக் கொள்ளலாம். தெவனெ என்ற பிரிவினர் சம்பெ, குப்பெ.குறுநகெ என்ற மூன்று பிரிவினருடன் திருமணம் செய்துக் கொள்ளலாம்; ஜாத்தியாகநியமித்துக் கொள்ளலாம். குதுநகெ என்ற பிரிவினர் சம்பெ, கல்கட்டி, தெவனெ என்ற பிரிவினரை திருமணம் செய்து கொள்ளலாம். இந்த மூன்று பிரிவினரில் ஒரு பிரிவினரை ஜாத் தியாக நியமித்துக் கொள்ளலாம்.
கொடுவே என்ற பிரிவினரை திருமணம்செய்து கொள்ளலாம். ஜாத்தியாக நியமித்துக்கொள்ளலாம். புங்கெ என்ற பிரிவினர் குப்பை என்ற பிரிவினரை திருமணம் செய்துகொள்ளலாம்; ஜாத்தியாக நியமித்துக் கொள்ளலாம்,மற்றொரு அகமணக்குழுவிலுள்ள உட்பிரிவினரைப் பற்றித் தெளிவாகத் தெரியவில்லை. எந்தப் பிரிவினர் எந்தப் பிரிவினரைத் திருமணம் செய்து கொள்ளலாம் என்று தெரியவில்லை அந்தப் பிரிவினரைப் பற்றிய பெயர்களைக் கேள்விப்படுகிறோம். ஆனால் அவர்கள் பற்றி ஒன்றும் தெரியவில்லை.
திருமணச்சடங்கு:-
மாப்பிள்ளை வீட்டுக்காரர் பெண் வீட்டிற்கு ஞாயிற்றுக் கிழமையாவது திங்கட்கிழமையாவது பெண்பார்க்கச் செல்வார்கள்.அவ்வாறு செல்லும் போதுகையில் ஒருஇரும்புத் தடியுடனும் மரத்தடியுடனும் செல்வார்கள், மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் ஏழுமுறை பெண் வீட்டிற்குச் சென்று முடிவுசெய்யவேண்டும் எங்று முதல் முறையாகஒரு நாள் மாலைப் பொழுதில் பெண்வீட்டிற்குச் செல்வர், சென்றதும் தாம் கொண்டுசென்ற இரும்புத்தடியையும் குடையையும்வைத்துவிட்டு, அன்று இரவு அவர்கள் விருந்தினராக அங்கு தங்கிவிடுகிறார்கள். காலையில்உணவு உண்டபின், ''நாங்கள் போய் வருஇறோம்'' என்று மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள்விடைபெற்றுக் கொள்வர். அப்போது நீங்கள்எப்பொழுதும் வராதவர்கள் வந்திருக்கிறீர்என்னகாரணம்?'' என்று பெண்வீட்டார் கேட்கிறார்கள். ''உங்களிடம் கொஞ்சம்நிலம், வாழைமரம் உள்ளதாம். இந்தநிலத்தை உங்களிடம் கேட்டு வேளாண்மைசெய்யலாம் என்று வந்திருக்கிறோம்'' என்றுமாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் கூறுகிறார் கள்." நீங்கள் அந்த முள்ளுக்காட்டைவெட்டமாட்டீர்கள்'' என்று பெண் வீட்டுக்காரர்கள்கூறுகிமூர் கள். வீட்டிலுள்ள அனைவரையும்கேட்டுவிட்டு நீங்கள் அடுத்த முறை வரும்பொழுது பதில் சொல்லுகிறோம்'' என்றுபெண் வீட்டுக்காரர்கள் கூறுகிறார்கள். இரண்டாவது முறை மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் பெண் வீட்டிற்குச் செல்லுகிறார்கள். முதல்முறை விருந்து கொடுத்து விருத்தோம்பியது போன்றே இம்முறையும்விருந்து கொடுக்கிறார்கள். பெண்வீட்டிலுள்ள எல்லோரிடமும் நிலம் வேண்டும்" என்றுகேட்கிறார்கள். எங்களிடம் சின்னக்காடுதான் இருக்கிறது: அதை நல்ல முறையில்வேளாண்மை செய்யவேண்டும்" என்று பெண்வீட்டுக்காரர்கள் சொல்லுகிறார்கள்.
"நாங்கள் நல்லமுறையில் நிலத்தை பயிர் செய்கிறோம்" என்று மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் கூறுகிறார்கள். பினனர் மாப்பிள்ளைவந்து பெண்ணைப் பார்த்துச் சம்மதிக்கவேண்டும். அடுத்தமுறை மாப்பிள்ளையைக் கூட்டிக்கொண்டு மாப்பிள்ளை வீட்டார்பெண்பார்க்க வருகிறார்கள். பெண்ணும்மாப்பிள்ளையும் ஒருவரையொருவர் Unitகின்றனர். பின்னர் இருவரும் அவர்கள் சம்மதத்தைத் தெரிவிக்கின்றனர்.
பின்பு மாப்பிள்ளை வீட்டுக்காரர் தங்களுடைய ஜாத்தியுடன் ஏழுபேரைக் கூட்டிக்கொண்டு போவார்கள். பெண் வீட்டாரும்தங்களுக்கு ஒரு ஜாத்தியை நியமனம் செய்திருப்பார்கள். இரு ஜாத்திகளும் மற்றவர்களும் எப்போதும் திருமணம் நடத்தலாம்,பெண்ணுக்கு மாப்பிள்ளை வீட்டார் எவ்வளவுபரியப்பணம் சட்ட வேண்டும் என்பனபோன்றவற்றைப் பேசி முடிப்பார்கள்.பழைய காலத்தில் மாப்பிள்ளை வீட்டார்பெண்ணுக்கு பரியப்பணமாக ஆறேகால்ரூபாய் அல்லது பத்தேகால் ரூபாய் கட்டினார்கள் என்று இவர்கள் கூறுகிறார்கள் . இப்பொழுது பெரும்பாலானோர் அறுபதேகால் ரூபாயை பெண்ணுக்குப் பரியப் பணமாகக்கட்டுகிறார்கள், பெண்ணுக்கு எவ்வளவுபணம் பரியமாகக் கொடுக்க வேண்டும்,என்று ஜாத்திகள் முடிவு செய்கிறார்கள்.இதனைக்"கடிகட்டுகாரு'' என்று இவர்கள்மொழியில் கூறுகிறார்கள், பரியப்பணம் இவ்வளவு என முடிவு செய்யும்போதே, திருமணத் தேதியையும் குறித்து விடுவார்கள்.மாப்பிள்ளை வீட்டு ஜாத்தி மாப்பிள்ளைக்கும்பெண் வீட்டு ஜாத்திப் பெண்ணுக்கும்பொறுப்பு ஏற்கிறார்கள். ''எருகிற திங்கட்கிழமை கடிகட்டியதற்குச் சரியாக எட்டாம்நாள் திருமணம்" என்று சொல்லி, மாப்பிள்ளைவீட்டுக்காரர் பெண்ணுக்குப் பரியப்பணமாகஅறுபதேகால் ரூபாய் கட்டவேண்டும் என்றுமுடிவு செய்கிறார்கள். ''வருகிற ஞாயிற்றுக்கிழமை வந்து திங்கட் கிழமை பெண்ணைஅழைத்து செல்கிறோம்'' என்று கூறிவிட்டுமாப்பிள்ளை வீட்டார் சென்றுவிடுகின்றனர்.
மாப்பிள்ளை வீட்டார் வீட்டுக்குச் சென்றுவீட்டைச் சுத்தம் செய்து வெள்ளை அடிக்கின்றனர். பின் தங்கள் உறவினர்களையும் மற்றஇருளர்களையும் வெற்றிலை பாக்குக் கொடுத்துதிருமணத்திற்கு வரும்படி அழைக்கின்றனர்.பெண் வீட்டில் ஆலி என்ற ஒருவகை மரத்திலிருந்து 12 தூண்கள் வெட்டிப் பந்தலுக்குக்கால்கள் நாட்டுகிறார்கள், பெண் வீட்டாரும்தம் உறவினரையும் மற்ற இருளர்களையும் திருமணத்திற்கு வெற்றிலை பாக்குக் கொடுத்துஅழைக்கின்றனர்.
ஜாத்திகளும் பெரியோர்களும் உறவினர்களும் குறித்த நாளன்று திருமணத்தை நடத்தும் நிமித்தம் மாப்பிள்ளை வீட்டில் கூடுகிறார்கள், மாப்பிள்ளை வீட்டு ஜாத்திக்கும் அவன்மனைவிக்கும் மாப்பிள்ளை வீட்டில் கோழிக்கறியுடன் சாப்பாடு போடுகிறார்கள். அவர்கள் சாப்பிட்டபின் மாப்பிள்ளையின் தாய்தந்தையர் பெண்ணுக்குக் கொடுக்க வேண்டிய அணிகலன் சளையும் பரியப் பணத்தையும்ஜாத்தியிடம் ஒப்புவிக்கிறார்கள். முதலில்மாப்பிள்ளை வீட்டு ஜாத்தியும் அவன் மனைவியும் அவர்களைப் பின்தொடாத்து மாப்பிள்ளையின் பெற்றோர்களும் மற்றவர்களும் மனமகனை அழைத்துக்கொண்டு இசைக்கருவிகளை இசைத்தவண்ணம் பெண் வீட்டை நோக்கிச்செல்கின்றனர்.
மணப்பெண் வீட்டில் திருமண நிகழ்ச்சிகள்:
மணப்பெண் திருமண நாளுக்கு முந்தியநாள் காலையில் குளித்து வனப்புடன் காணப்படுவாள். (பெரும்பாலும் இருளர்கள் தினமும் குளிப்பதில்லை; ஞாயிற்றுக் கிழமைகளில்தான் குளிப்பார்கள்.) மணப்பெண் வீட்டில்ஏழு செம்புகளில் ஜினிபெரங்கி என்ற ஒருவகை சிறு மிளகாயைத் தண்ணீரில் கலந்துநிரப்பியிருப்பார்கள், அந்தத் தண்ணீர் நிரம்பிய ஏழு செம்புகளையும் பாய் விரித்து அதன்மீது வைத்திருப்பார்கள். இது ஏழு உலகங்களிலும் உள்ள நீரை ஏழு செம்புகளில் வைத்திருப்பதைக் குறிக்கும். மாப்பிள்ளை வீட்டார் வந்தவுடன் வீட்டிற்குள்ளே சென்றுஏழு செம்புகளிலும் வைக்கப்பட்டிருக்கும்'கரெநீரை' ஒவ்வொரு செம்பிலிருந்தும்கொஞ்சம் கொஞ்சம் -ஆக எடுத்துக் குடிப்பார்கள். குடித்துவிட்டு அதன் பக்கத்தில்வைக்கப்பட்டிருக்கும் வெற்றிலை பாக்கைபோட்டுக் கொள்வார்கள். வெளியே வந்து,மணப்பெண்ணுக்குப் பக்கத்தில் பெண்வீட்டுஜாத்தியும்,மாப்பிள்ளைக்குப் பக்கத்தில்மாப்பிள்ளை வீட்டு ஜாத்தியும் நின்றுகொண்டுபின் வருமாறு கூறுவார்கள்
இதி கூடியிருக்க சுசபெக்கு ஒரு சரண
ஏழு லோ கக்கு ஒரு சரண
தந்தைலாகக்கு ஒரு சரண
தாய் லோகக்கு ஒரு சரண
இவ்வாறு சொல்லி முடித்த பின் மாப்பிள்ளை வீட்டிலிருந்து வந்தவர்களைப் பெண்வீட்டார் பாய்விரித்து அதில் உட்காரச் சொல்வார்கள்.மாப்பிள்ளை வீட்டுப் பாயில்மாப்பிள்ளை ஜாத்தியும், உறவினர்களும் அமர்வர்; பெண் வீட்டுப் பாயில் பெண்வீட்டுஜாத்தியும் மற்றவர் களும் உட்காருவார்கள்.ஆண்கள் தனிப்பாயிலும் பெண்கள் தனிப்பாயிலும் உட்காருவார்கள். பெண் வீட்டார்கள்எல்லோருக்கும் காபி கொடுப்பார்கள். இந்தசமயத்தில் சாப்பாடு ஆகிக்கொண்டிருக்கும்.
பெண் வீட்டில் கோழி அடித்துச் சமையல் செய்வார்கள். சமையல் முடிந்ததுமாப்பிள்ளை வீட்டு ஜாத்தியும் அவன் மனையும் பெண் வீட்டு ஜாத்தியும் அவன் மனைவியும் சாப்பிடுவார்கள். மாப்பிள்ளை வீட்டு ஜா-திக்குப் போடப்பட்டிருக்கும் சாப்பாட்டி-கோழித் தொடையை குத்தி வைத்திருப்பா-கள், பெண்வீட்டு ஜாத்திக்குப் போட்டபட்டிருக்கும் சாப்பாட்டில் கோழித் தலைமைகுத்தி வைத்திருப்பார்கள். இவர்கள் நாடுபேரும் சாப்பிட்ட பின் மற்றவர் களுக்கென்லாம் சாப்பாடு போடுவார்கள், மற்றவர்களுக்கெல்லாம் கோழிக்கறி கிடையாது.
பெண் வீட்டிற்கு முன் உள்ள நடு இடத்தில் பாய்கள் விரிக்கப்பட்டிருக்கும்.மாப்பிள்ளை வீட்டு ஜாத்தி ஒரு பாயிலும், பெண்வீட்டு ஜாத்தி ஒரு பாயிலும் உட்கார்ந்துஎல்லோர் முன்னிலையிலும் துணிகளையும் அணிகலன்களையும் மாப்பிள்ளை வீட்டுஜாத்தி பெண்வீட்டு ஜாத்தியிடம் கொடுப்பான். பெண்வீட்டு ஜாத்தி அதை ஒப்புக்கொண்டு அவைஎல்லாவற்றையும் பெற்றுக்கொள்வான் பின்புவெண்கலக்கிண்ணம் எடுத்து நடுவில் வைத்து,பெண்வெற்றிலை மாப்பிள்ளை வெற்றிலை என்றுவாங்கி அதை ஏழு பாகமாகப் பிரிந்து கிண்ணத்தைச் சுற்றிலும் வைப்பார்கள்.இதன்நடுவில் கல்லை வைப்பார்கள். மாப்பிள்ளைவீட்டு ஜாத்தி அறுபதேகால் ரூபாய் பரியப்பணத்தை ஒரு ரூபாய் நாயணங்களாக கல்லில் போட்டு மூன்று தடவை எண்ணிக் கிண்ணத்தில் போட்டுக் கொடுக்க வேண்டும். அப்படி எண்ணி முடிக்கும் பொழுதுபின் வரும்பாட்டை பாடி மாப்பிள்ளை வீட்டு ஜாத்தி,பெண் வீட்டு ஜாத்தியிடம் கொடுப்பான்.
மும்போனே பிம் போனே
ஒஜிஆயி ஓதுகிவந்தெ
தவளை ஆயி தவந்து வந்தெ
காடிலதென மாவெ தனத்து வந்தேபெணிலாவனே
நெல்லு கரிக்கெ புல்லை வெட்டிபெணிலாவனெ
கோட்ட சீங்கெமுள்ளெ வெட்டிபெணிலா வனே
உரி ஓங்கெமுள்ளே வெட்டிபெணிவாவனே
அங்கயி அகல பூமியை தந்து முங்கயி
பாட்டி பெண்ணை தந்து பெணிலாவனெ
தரந்த கூரை தரந்த சன்னெ
சுத்தின தீபகத்தின சன்னெ
அட்ட சோறு பேரின சன்னெ
ஆசின பாய் ஆசின சன்னெ
வெட்டின கத்தின வெட்டின சன்னே
நின சம்பல நனசம்பல ஒண்டோ,சண்டதோ
சண்டலெ, சண்டலெ, சண்டலே,சண்டுட்டது.
மாப்பிள்ளை வீட்டு ஜாத்தி இந்தப் பாடலைக்கூறிமுடிக்குத் தருவாயில் பெண்வீட்டு ஜாத்திசண்டலெ, சண்டலெ, சண்டலெ (என மும்முறை) கூறிவிட்டு நாலாவது தடவையாகசண்டுட்டது (சேர்ந்து விட்டோம்) என்றுகூறுவான். அந்த வெண்கலக் கிண்ணமும்பொருள்களும் குடத்தின் மீது வைக்கப்படும்.மறுநாள் காலை வரை அந்தப் பொருள்கள்குடத்தின் மீதே இருக்கும். மறுநாள் பெண்ஜாத்தி பெற்றுக்கொண்ட துணிமணிகளையும்அணிகலன்களையும் கொண்டு பெண்ணை அலங்கரிப்பார்கள். மாப்பிள்ளை விட்டு ஜாத்திபெண் வீட்டு ஜாத்தியிடம் பெரியோர் முன்னிலையில் இரண்டே கால் ரூபாயை 'மெலையடி பணம்' என்று தருவான். மணப்பெண்ணின் தாய் தன் மகளுக்குப் பால் கொடுத்தற்காக கொடுக்கப்படும் பணம் மெலையடிப்பணம் எனப்படும், பெண்ணையும் மாப்பிள்ளையையும் இணையாக உட்கார வைப்பார்கள்.
சாம்பிராணி வைத்துப் பெண்ணின் தாய்மாமன் ஒரு சீர் செய்கிறான், மாப்பிள்ளைவீட்டு ஜாத்தி தாலியைத் தன் மனைவியிடம்கொடுக்கிறாள். மாப்பிள்ளைஜாத்தியின்மனைவி பெண்ணுக்குத் தாலி கட்டுகிறாள்.தாலியை இவர்கள் 'முண்டகள்ளி'' என்று கூறுகிறார்கள். மணமக்கள் கூடியிருக்கும் எல்லா இருளர்கள் கால்களிலும் விழுந்துவணங்குகிறார்கள். இவ்வாறு காலில் விழுந்து வணங்குவதை "அடவிந்துட்டாரு'' என்று கூறுகிறார்கள். ஜாத்திக்காரன் ஆணுக்கு ஒருகுடையும் பெண்ணுக்கு ஒரு குடையும் தருகிறான். பெண்ணையும் மாப்பிள்ளையையும்பெண்ணின் தாய் மாமன் வாழ்த்துவான்.இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் பெண்ணும் மாப்பிளையும் புதுத்துணி விரித்து தாய் தந்தையார் காலில் விழுந்து வணங்கி வாழ்த்தைப் பெறுவார்கள்.
"எங்கள் பெண்ணுக்குத் தண்ணீர் எடுக்கத் தெரியாமல் இருக்கலாம், விறகு எடுத்துவர மலையில் வழி தெரியாமல் இருக்கலாம்,இதெல்லாம் சொல்லிக் கொடுத்து நீங்கள்வழிகாட்டியாக இருக்கவேண்டும். இதெல்லாம் தெரியவில்லை என்ற காரணத்திற்காகவிரட்டிஅடிக்கக்கூடாது'' என்று பெண்வீட்டு ஜாத்தி கூறுவாள்.
"இதற்கெல்லாம்நீங்கள் பயப்படவேண்டாம்.உங்கள்பெண்ணை நல்ல முறையில் வைத்து வாழ்க்கைநடத்தச்செய்வது என் பொறுப்பு'' என்றுமாப்பிள்ளை வீட்டு ஜாத்தி பெண்வீட்டு ஜாத்தியிடம் உறுதி கொடுப்பாள். பெண் வீட்டுஜாத்தி மீண்டும் ஒருமுறை பெண்ணையும் மாப்பிள்ளையையும் மாப்பிள்ளை ஊருக்கு அனுப்புவதற்கு முன் 'சண்டதோ என்று கேட்பான். மாப்பிள்ளை வீட்டு ஜாத்தி ''சண்டலெ, சண்டலெ,சண்டலெ" என்று மும்முறைகூறிவிட்டுநாலாவது முறை ''சண்டுட்டது'' என்று கூறுமணப்பெண்ணுக்குப் பக்கத்தில் ஓர்பெண் துணையா கவும், மாப்பிள்ளைக்குப்பக்கத்தில் ஓர் ஆண் துணையாகவும் வருவார்கள்.இவர்களுடன் உறவினர்களும் ஜாத்திகளும்வருவார்கள். ஊருக்கு வரும் வழியில் ஆற்றைக்கடக்க வேண்டியதிருந்தால் மணமக்களை ஆற்றைக் கடக்கும் வரை தூக்கிச் செல்வார்கள்.
மாப்பிள்ளை வீடு
மாப்பிள்ளை வீட்டிற்கு எல்லோரும் வந்துசேருவார்கள். சேர்ந்தவுடன் பெண் தனதுவலது காலை முன்னால் எடுத்து வைத்து மாப்பிள்ளை வீட்டிற்குள் நுழையவேண்டும். மாப்பிள்ளை வீட்டை அடைந்தவுடன் அங்கு சாம்பிராணி போடுவார்கள். மாப்பிள்ளையின்தாய் மாமன், தாய், தந்தை, அண்ணன்,அக்கா அண்ணி, மற்ற உறவினர்கள், ஊர்பெரியவர்கள் மணமக்களை வாழ்த்துவார்கள்.வாழ்த்தி முடிந்தவுடன் எல்லோரும் சாப்பிடுவார்கள். பெண் தன் வீட்டிலிருந்து மடியில்எடுத்து வந்த அரிசியை ஆண் ஜாத்தியின்மனைவியினுடன் சேர்த்து சமையல் செய்வான்.
பெண் சமைத்த சோற்றை ஒரே இலையில்மாப்பிள்ளையும் பெண்ணும் எதிர் எதிரே உட்கார்ந்து சாப்பிடுவார்கள். பெண் ஒரு பிடி,சாதத்தை மாப்பிளைக்கும், மாப்பிள்ளை ஒருபிடி சாதத்தைப் பெண்ணுக்கும் ஊட்டுவார்கள். இதைப்போன்று மாறிமாறிக் கொடுத்துசாப்பிடுவார்கள். அன்று மற்ற இருள ஆடவரும் பெண்டிரும் ஆட்டங்கள் ஆடியும், பாட்டுக்களைப் பாடியும், இசைக்கருவிகளை இசைத்தும் இரவு வெகு நேரம் வரை மணமக்களைமகிழ்ச்சி வெள்ளத்தில் திளைக்கச் செய்வார்கள். இந்த இசை நிகழ்ச்சியுடன் திருமணவிழா நிறைவுறுகிறது.
ஆர். பெரியாழ்வார்
[இக்கட்டுரை பேராசிரியர் நா. வானமாமலை அவர்களை ஆசிரியராகக்கொண்டு வெளிவந்த ’ஆராய்ச்சி’ இதழில்(டிசம்பர் 1971) இருந்து எடுக்கப்பட்டது. இணைக்கப்பட்ட புகைப்படங்கள் தினமணி, தினத்தந்தி ஆகிய பத்திரிகைகளின் செய்திகளில் இருந்து எடுக்கப்பட்டன. அவற்றுக்கும் இவற்றை எடுத்த புகைப்படக் கலைஞர்களுக்கும் மிக்க நன்றியுடையோம்.]முன்னுரை:-

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக