நீலகிரி இருளப் பழங்குடி மக்கள்
(இக் கட்டுரை பேராசிரியர் நா.வானமாமலை அவர்கள் ஆசிரியராக இருந்து நடாத்திய ‘ஆராய்ச்சி’ இதழில் (டிசம்பர் 1971) வெளியான கட்டுரை.)
இருளப் பழங்குடி மக்கள் நீலகிரி மாவட்டத்திலும் தென் ஆற்காடு, வட ஆற்காடு, செங்கல்பட்டு மாவட்டங்களிலும் வாழ்கின்றனர். இவர்கள் நீலகிரி மாவட்டத்திலுள்ள பால்பனை, செம்பனாரை, கோழிக்கரை, மெட்டுக்கல், கோத்திமுக்கே, கண்டிபட்டி அரக்கோடு, சொக்கோடு, குஞ்சம்பனை, கள்ளம்பள்ளி, குடகூர், அல்லிமாயாறு போன்ற இடங்களில் வாழ்கின்றனர். இவர்கள் கறுத்த மேனியை யுடையவராய் இருப்பதால் "இருளர்" என்ற பெயர் வந்ததாகக் கூறுகின்ற னர். அகன்ற மூக்கும் பரந்த முகமும் சுருட்டை மயிரும் பருத்த உதடும் கறுத்த நிறமும் உடையவர்கள். ஆண்கள் பெரும்பாலும் துண்டு அணிகிறார்கள், இருளப் பெண்கள் ஒருகாலத்தில் மலையாளப் பெண்களைப் போன்று ஆடை அணிந்தனர். தற்போது புடவைகளை அணிகிறார்கள். வெள்ளிக் கம்மலும், மோதிரமும், பித்தளைக் காப்பும் அணிந்துள்ளனர். ஆண்களும் காப்பு அணிவதுண்டு. பெண்கள் சிகை அலங்காரம் செய்தாலும் பெரும்பாலும் பூ வைப்பதில்லை. இப்பழங்குடி மக்கள் குறும்பர், காட்டுநாயக்கர், பணியர்களைத் தாழ்வாகக் கருதுகின்றனர். 1961- ஆம் ஆண்டு கணக்குப்படி 4,072 இருளர்கள் இம் மாவட்டத்தில் வாழ்கிறார்கள்.
இப்பழங்குடி மக்கள் உருவ அமைப்பில் ஆந்திர மாநிலத்திலுள்ள ஏனாதியரை ஒத்துள்ளனர். ஏனாதிப் பழங்குடி மக்கள் சித்தூர், தெல் லூர், குண்டூர் மாவட்டங்களில் வாழ்கின்றனர். எயினர் தான் எனாதி என்று கூறுகின்றனர். சங்க இலக்கியமான பெரும்பாணம் றுப்படையில் எயினரைப் பற்றிய குறிப்புக்களைக் காண்கிறோம். எனாதியர்கள் ஆபிரிக்காவினின்றோ அல்லது ஆஸ்திரேலியாவினின்றோ வந்தவர்கள் என்ற கூற்றை ஏற்றுக் கொள்வதற்கில்லை. ஏனாதிப் பழங்குடியைப் போலவே இருளனுக்கும் எலி மீது பிரியம் உண்டு.
மனித உடலளவுகள் (Anthropometric measurement) இரத்த அமைப்பு முதலி யவற்றை நோக்குமிடத்து சோளகா, நீலகிரி, இருளர், வராளி, ஏனாதி ஆகியோரிடையே ஒரு பொதுத்தன்மை காணப்படுவதாகப் பௌதீக மானிடவியிலார் (Physical Anthropologist) கூறுகின்றனர்.(1) காட்டுப் பொருட்களைச் சேகரித்தும் வேட்டையாடியும் பிழைக்கின்ற ஆந்திராவிலுள்ள செஞ்சு பழங்குடி மக்களுடனும் இவர்கள் உருவத்தில் ஒத்துள்ளனர்.
செஞ்சுக்கள் உருவ அமைப்பில் ஆஸ்திரேலியா இனத்தைச் சார்ந்தவர்கள். ஏனாதிப் பழங்குடி மக்களோடு ஒப்பிடுமிடத்து இருளர்களது திருமணமுறை மிகவும் எளிமையானதாகும். ஏனாதி குறி சொல்லுவார்கள். ஒரு ஆண் பல பெண்களை மணக்கின்ற வழக்கம் (Polygamy) அவர்களிடையே இருந்தது. விவாக ரத்தும் அடிக்கடி நிகழ்ந்தது. மலையாளி பழங்குடி மக்கள் தான் கொல்லிமலையிருந்து இருளர்களை நீலகிரிக்குத் துரத்தியிருக்க வேண்டுமென எண்ண வேண்டியுள்ளது. இருளர்கள் நீலகிரிக்குப் பின்னால் வந்த பழங்குடி மக்கள் எனக் கோத்தர்கள் இன்று கூறுகிறார்கள். கோத்தர்களே கொல்லி மலை தான் எங்களது பூர்வீக வாசஸ்தலம் என்று கூறுகின்றனர். சோளகருடன் தொடர் கொள்ளும் ஊராளிகள் தங்களை இருளர் என்று கூறிக் கொள்வதுண்டு. கூடலூர் பகுதியில் வாழும் கசவர்களும் தங்களை இருளப் பழங்குடி மக்கள் என்று கூறுவதாக எனது நண்பர் சிதம்பரநாதன் தனது கட்டுரையொன்றில் குறிப்பிட்டுள்ளார். (2)
கோயம்புத்தூர் என்ற பெயரே ‘கோயன்’ எனும் இருளனின் பெயரால் அமைந்ததாகும்.(3) சத்தியமங்கல பகுதியை ஆண்ட இவன் ஒரு காலத்தில் பலம் வாய்ந்தவனாகயிருந்திருக்கிறான். இன்றும் சத்தியமங்கலப் பகுதிகளில் இருளர்கள் இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும். இவர்கள் ''இருள்'' என்ற மொழியை பேசுகின்றனர். இம்மொழி பழத்தமிழருடன் மிகவும் நெருங்கிய தொடர்புடையதாகும். சங்க இலக்கியச் சொற்களையும் அமைப்பினையும் இம்மொழியில் காணலாம்.
இவர்கள் பேசும் மொழியை ஆராய்ந்த டிப்ளாத் (Diffloth) அவர்கள், இருளமொழி தமிழுடன் மிகவும் நெருங்கிய தொடர்புடைதாகும் எனக் கூறியுள்ளார்கள்.(4) மானிடவியல் பேரறிஞர் லூயிஸ் (Luiz A.A.D.) அவர்களும் "இருளர்கள் பேசுவது கன்னடச் சொற்கள் நிறைந்த தமிழின் கிளைமொழியாகும்'' (5), எனத் தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். கமில் ஷ்வலபில் (Kamil Zvelebil)அவர்கள் அண்மையில் வெளியிட்டுள்ள ''ஒப்பியல் திராவிட ஒலியமைப்பியல்" (Comparative Dravidian Phonology) எனும் நூலில், இருளர்கள் பேசுவது இருள எனும் மொழியே; அஃது கிளை மொழியல்ல (Dialect) எனக் கூறியுள்ளார்கள். இம்மொழியைத் தற்பொழுது ஆராய்ந்துவரும் பெரியாழ்வார் அவர்களும் இருளர் பேசுகின்ற மொழியைக் கிளை மொழி என்பதைவிட மொழி (Lauguage) என்றே கூறலாம் என்கிறார். இம்மொழிக்கும் தமிழுக்கும் நெருங்கிய தொடர்புள்ளது என்பதை அனைவரும் ஒப்புக் கொள்கின்றனர். இம்மொழியை டான்லார் கின் (Don Larkin) என்பவரும் ஆராய்ந்துள்ளார். இருளர்கள் பளியர்களைப்போன்று உச்சரிக்கின்றனர். பளியர்கள் பேசுவது தமிழின் கிளை மொழி (Dialect of Tamil) என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.(6)
இருளர்களிடையே இரண்டு அகமணைப் பகுப்புக்கள் (endogamous groups) உண்டு. கொப்பளிகை, குருன்கை, புங்கை, கொடுவன், கல்கட்டி, சாம்பன், தேவனன் போன்ற வகைகள் உயர்ந்த பிரிவையும் சோலைகர், வெள்ளைகர், உப்பிலிகர், கரித்திகர் லோரிகர் போன்ற வகைகள் தாழ்ந்த பிரிவைச் சார்ந்ததாகும்.(7) இதைப்போன்றே தோடாப் பழங்குடி மக்களிடையேயும் தேர்த்தாள், தெவிளியான் என்ற இரு பிரிவுண்டு, தேர்த்தாள் பிரிவினர் தங்களை உயர்வாகக் கருதிக் கொள்கின்றனர்.(8)
கோரைப் புற்களைக் கொண்டு குடிசை வேய்ந்துள்ளனர். குடிசைக்கு உள்ளும் வெளியேயும் திண்ணை உண்டு. மேலும் குடிசைகளைக் ”கூரே'' என்கின்றனர், சிலர் பயிர்த் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். காப்பி, தேயிலைத் தோட்டங்களிலும் பணியாற்றுகிறார்கள். தேன் சேகரிக்கின்றனர். காட்டுப் பொருட்களைச் சேரித்து விற்பதுமுண்டு. சாமை, ராகி, தினை முதலியவற்றைப் பயிரிடுகின்றனர். மற்றப் பழங்குடி மக்களுடன் ஒப்பிடுமிடத்து இவர்களது வாழ்க்கைத்தரம் உயரவே இல்லையெனலாம். இருளப் பழங்குடி மக்கள் சமூக, பொருளாதாரத் துறையில் முன்னேறுவதற்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் டாக்டர் நாசிம்மன் அவர்கள் செய்துதருகிறார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
இவர்களிடையே நடைபெறும் வழக்குகள் பஞ்சாயத்தில் தீர்த்து வைக்கப்படுகின்றன. குற்றம் செய்தவர்கட்கு அபராதமும் விதிக்கப்படுகிறது. ஒவ்வொரு பாடிக்கும் ஒவ்வொரு தலைவன் உண்டு. அவனை ''மூப்பன்'' என்றும் ''மணியக்காரன்'' என்றும் அழைக்கிறார்கள். திருமணங்களிலும் ஈமச் சடங்குகளிலும் இவரது பங்கு குறிப்பிடத் தக்கதாகும். ஊர்க் காரியங்களைக் கவனிக்க ஐவர் கொண்ட குழு ஒன்று உள்ளது. இஃது நமக்கு உத்தரமேரூர்க் கல்வெட்டினை நினைப் பூட்டுகின்றது. எல்லாவற்றிற்கும் முதன்மையாக விருப்பவளை "மூப்பன்'' என்றும் வேளாண்மை, நிர்வாகம் முதலியவற்றைக் கவனிப்பவணைக் ''கீழ்த்தரப்பட்டதாரி'' என்றும் வேட்டை முதலியவற்றைக் கவனிப்ப வனை "பண்டாரி'' என்றும் மூப்பனுக்குப் பதிலாகக் காரியங்களைக் கவனிப்பவனைக் 'குறுதலை” என்றும் கூறுவர். இக்குழுவிற்கு ஆலோசனை கூறுபவனைக் கொண்டிகே' என்று கூறுவர்.
இவர்களிடையே வைஷ்ணவத்தைத் தழுபுவர்களும் சைவத்தைத் தழுபுவர்களும் உளர். குன்னூர் வட்டாரத்திலுள்ள ரெங்கசாமி கோயிலுக்கு நாமம் போட்ட இருளர் தாள் பூசாரியாக உள்ளார். தேங்காய், பழம் முதலியவற்றை வைத்துப் படைக்கின்றனர். படகர்களும் அங்கே வந்து வழிபடுகின்றனர். காரமடையில் நடைபெறும் திருவிழாக்களிலும் கலந்து கொள்கிறார்கள். மாரி, பத்திர காளி முதலிய தெய்வங்கட்குப் பலியிடுவதும் உண்டு. பொங்கல் விழாவைச் சிறப்பாகக் கொண்டாடுகின்றனர். இவர்கட்குப் பேய், பிசாசுகளில் நம்பிக்கை உண்டு. ''ஏழு கன்னிமார்'' என்ற தெய்வத்தை வணங்குகிறார் கள். மைசூரினின்றும் தமிழகத்திற்கு வந்து குடியேறிய பெரும்பாலோரிடையே தெய்வ வணக்கத்தைக் காணலாம். பருவமடைந்த பெண்ணைத் தனிக்குடிசையில் ஏழு நாட்கள் வைத்திருக்கிறார்கள். அவளுக்குத் துணையாகப் பெண்ணொருத்தியும் இருப்பாள். ஏழாவது நாளன்று தாய்மாமன் அக்குடிசையை எரிப்பான். அப்பெண் ஆற்றில் குளித்து புத்தாடை அணிவாள். உறவினர்கள் நெற்றியில் திருநீறு இட்டு வாழ்த்துவர். அவளை இரண்டு உலக்கைக்கு நடுவில் உட்கார வைப்பார்கள். அவள் மீது தீர்த்த நீரைத் தெளிப்பார்கள். இச்சடங்கு முடிந்த பின்பு அப்பெண்ணை வீட்டிற்கு அழைத்துச் செல்வர். அன்று வந்த உறவினர் அனைவருக்கும் விருந்து நடைபெறும்.
இவர்கள் புறமணப் பகுப்புடையவர்கள் (exogamous groups). இவர்களிடையே கடத்தல் மணமும் (marriage by capture ) உடன்போக்குத் திருமணமும் (marriage by elopement) வழக்கிலிருந்ததை அவர்களது நாடோடிப் பாடல் மூலம் அறிகிறோம். மேலும் பணிசெய்து திருமணம் செய்வதும் (marriage by service) இவர்களிடையே உண்டு. இத்தகைய வழக்கம் அஸ்ஸாம் பழங்குடி மக்களிடையேயும் உண்டு. தோடர்களைப் போன்று ஒருபெண் பல ஆண்களை மணக்கின்ற வழக்கம் இவர்களிடையே கிடையாது.
இருளர்கள் தமது எட்டு உட்பிரிவுகளிலும் (clans) திருமணம் செய்து கொள்ளலாம். திங்கள் அல்லது புதன்கிழமையன்றுதான் திருமணவிழா நடத்துவார்கள். பெண்கள் பருவமடைந்த பின்பு திருமணம் செய் விக்கிறார்கள்- பெற்றோர் பார்த்து மணம் செய்விப்பதும் காதல் திருமணமும் நடைபெறுகிறது. அதாவது கற்பு மணமும், களவு மணமும் இவர்களிடையே வழக்கத்தில் உள்ளன. மணப்பெண்ணை அழைத்துவர மணமகனின் உறவினர் பன்னிரண்டுபேர் செல்வர். ஆறு பேர் சுமங்கலியாக இருக்க வேண்டும். பன்னிரண்டுகால் நட்டு மணப்பந்தல் அமைக்கிறார் கள். காசு மாலையைத் தற்பொழுது தாலியை மணமகன் மணமகள் கழுத்தில் கட்டுகிறான். உறவினர்கள் வாழ்த்துகின்றனர். வாழ்த்துவதே திருமணத்தின் முக்கிய பங்காகும். ஒரு பாடியிலிருந்து மற்றொரு பாடியில் திருமணம் நடைபெறுவது மிகவும் அரிதாகும். மணப்பந்தலில் மணமக்களுக்கெதிராகத் தாம்பூலம் வைக்கப்பட்டிருக்கும். 12 முறை சுற்றி வந்து தேங்காய் உடைத்து மணையில் உட்கார வேண்டும். மணமகள் மாமனாருக்குப் பணம் கொடுக்கவேண்டும். அன்றே மணமக்களது புணர்ச்சி நடைபெறும். திருமணமான பெண்களும் கணவன்மார் களை ரத்து செய்து காதல் திருமணம் செய்வதுண்டு. விதவைகளும் மறுமணம் செய்வதுண்டு. தம்பி மனைவியை அண்ணன் மணப்பதும் வழக்கம். ஆனால், மதனி மணம் (Levi-rate) இவர்களிடையே கிடையாது. பிள்ளைப்பேறு இல்லையெனின் இரன்டாவது திருமணம் செய்து கொள்ளலாம். பெண் விவாகரத்துக் கோரினால் பரிசப்பணம் திருப்பித்தர வேண்டும். பருவமடைந்தவுடன் பெண்ணும் ஆணும் காதல் வாழ்க்கையில் ஈடுபடுவர். வசதிக்கேற்றாற்போல திருமணத்தை நடத்து வர். இதற்கிடையில் பெண் கர்ப்பமுற்றால், உடனே திருமணத்தை நடத்தியாக வேண்டும். குழத்தைத் திருமணமும் இவர்களிடையே நடைபெறுவதுண்டு. குழந்தை பிறந்ததும் இலையிலும் வாழை மட்டையிலும் தாயின் துணிமீதும் படுக்க வைக்கிறார்கள். ஆண் குழந்தைக்கு ஆறாவது நாளிலும் பெண்குழந்தைக்கு ஏழாவது நாளிலும் பெயர் சூட்டுகிறார்கள். அன்று குலதெய்வத்திற்குப் படைப்புப் போடுவார்கள்.
ஒருவர் இறந்தவுடன் பிணத்தைப் பந்தலுக்குள் வைக்கின்றனர். தலைக்குப் பக்கத்தில் கருவிகளையும் சட்டியில் மஞ்சள் தண்ணிரையும் வைக்கின்றனர். பிணத்தை மஞ்சளாலும் சந்தனத்தாலும் நீராட்டி, உடம்பின் மீது சாமையைத் தூவுகிறார்கள். மூத்த மகன் மூன்று முறை பிணத்தை வலம் வருகிறான், பந்தலில் நட்ட வாழையை வெட்டி எறிகிறார்கள் மீண்டும் மும்முறை வலம் வருகிறார், பின் மூங்கிலால் பாடை கட்டிப் பிணத்தைத் தூக்கிச் செல்கிறார்கள். உட்கார்ந்த நிலையில் பிணத்தைப் புதைக்கிறார்கள். இது குறித்துத் தொல் பொருளாய்வாளர்கள் நன்கு ஆராயவேண்டும். பிணத்துடன் அரிசி, விளக்கு முதலியவற்றைப் புதைக்கிறார்கள். மூன்றாவது நாள் பால் ஊற்றுகிறார்கள், அரிசியைத்தூவி மட்குடம் உடைக்கிறார்கள். நாற்பதாவது நாள் சோறு முதலியவற்றை வைத்துச் சுடுகாட்டில் ஆவிக்குப் படைக்கிறார்கள். குழந்தை இறந்தால் சடங்கின்றியே புதைப்பர், இருளன் ஒருவன் இறந்தால், குறும்பன் தலையை மொ ட்டையடித்துக் கொள்வான். அதற்காக அவனுக்குத் துணியும் விருந்தும் அளிக்கப் படும் அதற்குறிய காரணத்தை இருளர்களிடம் கேட்டபொழுது, இதன் உட்கருத்துத் தங்கட்குத் தெரியாது என்றும் பரம்பரை பரம்பரையாக இவ் வழக்கம் கையாளப்பட்டு வருவதாக என்னிடம் கூறினர். நீத்தார் நினைவுநாளாக ஆண்டுக்கொரு நாளைக் குறிப்பிட்டு வழிபாடு நடத்துகிறார்கள். உறவினர் அனைவர்க்கும் விருந்தொன்றும் நடைபெறுகிறது.
FOOT NOTES
1. “Anthropometric measurement shows a definite commonness among the sholaga, the Irula of Nilgiris, Yendi, Irulas of cast cost and urali" A.Aiyappan……. ' Report on the socio-economic conditions of the Aboriginal tribes of Madras', Page 157
2. V. Chidambaranatha Pillai, Kasabas, Aaraichi, March,71
3. A.Aiyappan Report on the Socio-econonic conditions of the Aboriginal Tribes in the Province of Madras p.102
4. Diffloth, Gorald Fiix, The Irula langunage a close relative of Tamil, University of California Ph. D. Disertation, 1968.
5. Luiz A. A, D, Tribes of Kerala, Page 52.
6. Dr. Gardner, Field Normon Palin: Wisconsir University.
7. G.R. Damodaran, A Socio-nconomic Survey of the Tribes of the Nilgiri District, P. 205
8. S. Sakthivel, Nilgiri Todas, Aarnichi, Vol IV. Palayaneottah, 1970
சு.சக்திவேல் M.A;M.A

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக