ஜெயகாந்தனின் ’ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்’ என்ற நாவல் சரியாக ஐம்பது வருடங்களுக்கு முன்னர் (1972-1973) எழுதப்பட்டிருக்கின்றது. இன்று அதனைப் படிக்கும்போது மனித நடத்தைகள், உடைகள், அன்றாடத்தேவைகள், பேசும் மொழி என்று ஏறத்தாள எல்லாமே எவ்வாறு மாறிப்போய் விட்டன என்பதையும் மனித உணர்வுகளும், வாழ்வின் புதிர்களும் அன்றிருந்தவாறே இன்றும் தொடர்கின்றன என்பதையும் உணரமுடிகின்றது.
இந்த நாவலில் வருகின்ற அனேக பாத்திரங்கள் கிராமத்து மனிதர்கள்; காலமும் அவர்கள் சூழலும் அன்று வரித்துவைத்திருக்கின்ற அறங்களில் அவர்கள் அவ்வப்போது விலகிச் சென்றாலும், அதனைப் பெரிதுபடுத்தாது உலகம் தன்பாட்டில் சுழல்கிறது. எல்லோருமே நல்ல மனிதர்கள்; அன்பானவர்கள். இன்றைய நவீனத்துவம், பூகோளமயமாக்கல், போர்கள், பாரிய இடப்பெயர்வுகள், முற்றிலும் புதிய இயற்கை இடர்கள் போன்றவற்றால் மனிதத்தின் மகத்தான விழுமியங்கள் முன்போல் இல்லை என்று நாம் அங்கலாய்க்கத்தாலும், ஈற்றிலும் ஈறாக மனிதம் வாழ்கின்றது. எனக்கு இந்த நாவலின் இன்றைய பொருத்தப்பாடு அதிசயமாகவும் ஆனந்தமாக இருக்கின்றது. ”…அந்த வீட்டுக்குள் மேளதாளத்துடன் ஒரு கிராமமே சஞ்சரித்து வாழ்ந்துகொண்டிருக்கின்றது...” என்றே இந்த நாவல் முடிகிறது. வீடு நிறைய மனிதர்களை உவந்தேத்துவாழும் மனோநிலை எங்களைவிட்டகன்று அவரவர் பெட்டிகளுக்குள் வாழப்பழகிவிட்ட மனிதர்கள் இன்று. இது போன்ற ஏக்கங்களை இலக்கியத்தில் காணும்போது இயலாமை எங்களை உலுக்கிவிடுகிறது.
தான் எழுதியவற்றில் தனக்குப் பிடித்த நாவல்களில் ஒன்றாக இதனையும், இதில் வருகின்ற ஹென்றி என்ற தனயன் பாத்திரம் தன்னுள் இருக்கின்ற மற்றவன், அதாவது நினைப்பில் மட்டுமே காலத்தை ஓட்டும் இலட்சியவான் என்றும் ஜெயகாந்தன் அவர்கள் இனங்காட்டிச் சென்றிருக்கின்றார். எதன்பொருட்டும் எதனையும் பற்றிக்கொண்டிராத, எப்பொழுதும் இன்புற்றிருக்க நினைப்பதுவே ஹென்றி தன் அப்பாவிடம் இருந்து கற்றுக்கொண்ட பாடம் என்பதுவும், நாம் வாழ நினைப்பதுவும் அதுவே, ஆனால் எமக்கு அது கைகூடாது கை நழுவிப்போவதுமான ஒரு கானல்நீர் என்பதையும் உணர்ந்துகொள்கிறோம்.
ஆலம்பட்டி என்பது ஒரு மிகச் சிறிய கிராமம். கிராமத்தின் அருகில் புதிய றங்கு ரோட் (Trunk Road). அந்த றங்கு ரோட்டு இன்னொரு றங்கு ரோட்டினை ஊடறுப்பதால், சற்றே ஆரவாரமடைந்து வரும் நாற்சந்திக் கிராமம் அது. ஆலம்பட்டிக்குக் கிழக்கே சுமார் இருபது மைல் மலைப்பாதைத் தொலைவில் குமாரபுரம் இருக்கின்றது. இவை இரண்டுக்குமிடையே அந்த மலைப்பாதையில் இருக்கும் சிறிய கிராம் கிருஷ்ணராஜபுரம். கையில் பீடியுடன் காணப்படும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்த துரைக்கண்ணு அயலூரில் மணமுடித்து ஒரு பழைய லாறி வைத்து அயற் கிராமங்களை இணைக்கும் மலைப்பாதைகளில் பாரங்கள், பொதிகள், மனிதர்கள் மற்றும் அவ்வப்போது நான்குமணி நேர இடைவெளியில் வரும் அரச பேருந்தினைத் தவறவிட்ட பயணிகளையும் ஏற்றி இறக்குவதைத் தொழிலாகக் கொண்டவர். அவரது உதவியாள் பாண்டு என்கிற பையன். ஒரு பயணத்தின் போது, இந்த மலைப்பாதையில் நடந்து செல்லும் அக்காலத்துக் ஹிப்பி போன்ற தோற்றங்கொண்ட ஒருவரை நான்கு கொண்டையூசி வளைவுகள் கொண்ட மலைப்பாதையின் தொடக்கத்தில் வைத்து தமது வண்டியில் ஏற்றிக் கொள்கின்றனர். அதே வண்டியில் பயணஞ்செய்யும் கிருஷ்ணராஜ புரத்தின் பள்ளி ஆசிரியர் தேவராஜனும் அந்தப் புதிய பயணி ஹென்றியும் அறிமுகமாகி, நட்பாகி தேவராஜனின் மொட்டைமாடி அறையிலேயே ஹென்றியும் தங்கிக்கொள்கின்றான்.
அந்த மொட்டை மாடியில் இருந்து பார்க்க்கும்போது எதிரே பெரிய பூட்டுத்தொங்கும் கதவுடன் ஒரு பாழடைந்த வீடு தெரிகின்றது. அந்தப் பூட்டின் சாவி ஹென்றியிடம்தான் இருகின்றது. அப்பா இறந்து மூன்று நாட்களின் பின், வாழ்நாளில் அவர் கூறியவற்றை நினைவிருத்தி, அவர்கள் விட்டுச் சென்றவற்றை காவிச் செல்லக்கூடிய பணமாக்கி அப்பா எனும் வேரிருந்த இடம்தேடி வந்திருக்கிறான் ஹென்றி.
எதிரே பெரிய பூட்டுத்தொங்கும் கதவுடன் கூடிய ஒரு பாழடைந்த வீடு ஒன்று தெரிகின்றது. அவ்வீட்டுத் திண்ணையில் படுத்துறங்கிய அக் கிராமத்தின் புத்திபேதலித்த நாவிதர் ஒருவர் எப்போதோ தூக்குப் போட்டு இறந்துவிட்டதால் பேயிருக்கும் வீடு என்றும் கிராமத்தார் சொல்கிறார்ர்கள். இதனைப் படித்தபோது, இலங்கையின் வடக்கே சிலகாலங்களுக்கு முன்னர் காணக்கிடைத்த காட்சிகளை எண்ணிப் பார்த்தேன். இன்னும் குறிப்பாகச் சொல்லவேண்டுமென்றால் யாழ்ப்பாணத்தில் இருந்து நெடுந்தீவுக்குச் செல்லும் பாதையில் பண்ணைப் பாலம் கழிந்துவுடன் வேலணைக்குட் புகுந்து புங்குடுதீவின் குறிகாட்டுவான் துறை செல்லும் வரை இரண்டு பக்கமும் காணக்கிடைத்த இடிந்து விழுந்து தம் எச்சங்களோடு மிஞ்சிய பாழடைந்த வீடுகளின் சோகக் காட்சிகள் வந்து நின்றன. மனிதர் நேற்றிருந்தார் இந்த வீட்டினிலே என்று நினைத்தால் நெஞ்சு வெடிக்கும் உணர்வுவரும். கவிஞர் வில்வரத்தினம் சொல்வதுபோல்…ஒக்க இருந்து உயிர் வளர்த்தோமே எப்ப வரும் இனிய எம் நாட்கள்?..” என்று சோகம் வரும். அந்த இனிய நாட்கள் வரப்போவதில்லை என்பதும், உச்சமாக நாளை வருங்காலமொன்றில் எமது பெயரை உச்சரித்தபடி நாங்கள் வாழ்ந்த வரலாறுகளைச் சுமந்து நாளை மூன்றாம் நாலாந் தலைமுறை ஒன்று வேர்தேடி வரக்கூடும்.
ஹென்றியின் அப்பா சபாபதிப்பிள்ளை அவர்கள் முப்பது அல்லது முப்பந்தைந்து வருடங்களுக்கு முன் நிலபுலம், உறவுகள், புகழ் , பூர்வீகம் எல்லாவாற்றையும் அப்படியே விட்டுவிட்டு இரவோடிரவாகத் தலைமறைவாகி விடுகின்றார். அவர் தன் வளர்ப்பு மகனுக்குச் சொன்ன அவரது வரலாற்றின் சில கூறுகளைச் சுமந்து கிருஷ்ணராஜபுரம் என்ற அப்பாவின் கிராமத்திற்கு வேர்கள்தேடி வந்து சேர்ந்திருக்கின்றான் ஹென்றி.
ஸ்ரெஃபான் ற்ஸ்வைக் (Stefan Zweig) என்ற, இரண்டாம் உலகப் போர்க் காலத்தில் தன் மனைவியுடன் கூட்டாகத் தற்கொலை செய்துகொண்ட ஜெர்மனிய எழுத்தாளர் “நேற்றைய உலகு” ( The world of yesterday) என்ற தன்வரலாற்றினை விட்டுச் சென்றுள்ளார். அதுவும் ’நேற்றிருந்தோம் அந்த வீட்டினிலே’ என்பது போன்றதுதான்.
பூட்டுத் தொங்கும் வீடு சிதைந்து அழிந்து கதவினைத் தாங்கிய முன்சுவர் மட்டும் விழுந்துவிடாதிருக்கின்றது. அந்த வீட்டை அன்றிருந்துபோலவே வடிவமைத்துத் திருத்தி குடிபோகிறான் ஹென்றி, கிராமத்தின் மனிதர்களும், கிராமத்தின் அத்தனை சௌபாக்கியங்களும் அவனுக்கு சொந்தமாகின்றன. படிக்க இனிக்கும் நாவல்; தேடிப்படியுங்கள்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக