பக்கங்கள்

வியாழன், மே 26, 2022

தேசிய இனப்பிரச்சினையுள்ளே சாதியம் மறைந்துபோய்விட்டதாக...

”தேசிய இனப்பிரச்சினையுள்ளே சாதியம் மறைந்துபோய்விட்டதாக சாதியத்தை வளர்க்க விரும்புகின்றவர்களே சொல்லிக்கொண்டிருக்கின்றனர்! -தெணியான்”

[இப் படம் பரணீதரன் கலாமணி அவர்களது முகநூல் பக்கத்தில் இருந்து எடுக்கபட்டது. நன்றி]


எழுத்தாளர் தெணியான்(1942-2022) அவர்களை, அவர் விட்டுச் சென்ற எழுத்துக்களிலும், வரலாற்றின் பக்கங்களிலும் தான் இனி நாம் காணப்போகின்றோம். உரையாடப் போகின்றோம். இலங்கையில் இருந்து வெளியாகிய மூன்றாவது மனிதன் சஞ்சிகையின் 16ஆவது இதழில் (பெப்ரவரி-மார்ச் 2003) வெளியாகிய அவரது பேட்டியினை மிக்க நன்றியுடன் மீளவும் வெளியிடுகின்றோம்.


1960 களில் இருந்து எழுதிவரும் தெணியான் (கந்தையா நடேசன்) முற்போக்கு எழுத்தாளர்களில் மிகவும் கவனிப்புக்குரியவர். சமூக ஒடுக்குமுறைகளை இலக்கியமாக்குவதன் மூலம் ஒரு படைப்பாளியாகக் கணிப்புப்பெற்றவர். இவரது படைப்புக்களில் மிகப் பெரும்பாலானவை அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக் குரலாகவே உள்ளன. மேலும் குடும்ப உறவுகளை மென்போக்கான நிலையில் எழுதக்கூடிய ஒருவராயுமுள்ளார்.

தெணியான் அவர்கள் ஒரு படைப்பாளியாக, தீவிர இடதுசாரியாக மார்க்சிச சித்தாந்தத்தின் வழிநின்றவர் என்பதோடு, முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் முக்கிய பங்கினை வகித்து வந்தவர். அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகா சபையினருடனும், இடதுசாரிகளுடனும் மிக நெருக்கமான தொடர்பினைக் கொண்டிருந்தவர். 1960களில் முக்கியமாக பேசப்பட்ட ஆலயப் பிரவேசத்தில் முக்கிய பங்கு வகித்தவர். தமிழ் ஆசிரியராகக் கடமையாற்றி வந்த இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் தனது பணியிலிருந்து ஓய்வு பெற்றுள்ளார்.

ஈழத்து இலக்கிய உலகுக்கு தெணியானின் பங்களிப்பு புறக்கணிக்க முடியாததாகும். ’மரக்கொக்கு’ நாவல் உளவியல் சிக்கல்களை முதன்மைப்படுத்துவதாய் வித்தியாசமான படைப்பாகவே மிளிர்கிறது. இது இலங்கை அரசின் சாகித்திய மண்டல பரிசினையும் பெற்றுள்ளது. அத்துடன் ’காத்திருப்பு’ எனும் நாவல் பாலியல், மற்றும் சுரண்டல் ரீதியான பிரச்சினைகளை எடுத்துக்கூறும் வித்தியாசமான படைப்பாகும். ’சொத்து’ (சிறுகதைத் தொகுதி), மாத்துவேட்டி (சிறுகதைத் தொகுதி). ’கழுகுகள்’ (குறுநாவல்) ’விடிவை நோக்கி’ (நாவல்). ’பொற்சிறையில் வாழும் புனிதர்கள்’ (நாவல்) என்பன கவனிப்புக்குரிய இவரது ஏனைய படைப்புக்களாகும். இவரது படைப்புகளும் கருத்துக்களும் எப்பொழுதும் சர்ச்சைக்குரியனவாக இருந்து வருவதால், அதிக கவனம் பெற்ற படைப்பாளியாக உள்ளார்.
சந்திப்பு: இராகவன்




கேள்வி: உங்களுடைய படைப்புலக பிரவேசம் அதற்கான உந்துதல் பற்றி கூறுங்கள்?

எனது முதலாவது சிறுகதை 1964ம் வருடம் ’விவேகி’யில் வெளிவந்தது. அது "பிணைப்பு” எனும் சிறுகதையாகும். இதற்கு முன்னரும் மாணவ பருவத்தில் கதைகள் சிலவற்றை எழுதிப் பார்த்திருக்கின்றேன். அவையெல்லாம் அச்சேறாத கதைகளாகும். எனது எழுத்துலகப் பிரவேசத்திற்கு என்னிடத்திலிருந்த வாசிப்புப் பழக்கமும் எனக்கு நெஞ்சில் காயங்களும் தான் காரணமாக அமைந்தன. நான் கொழும்புத் துறை ஆசிரியர் கலாசாலையில் படித்துக்கொண்டிருந்த போது டொமினிக் ஜீவாவிற்கு, அவரது ’தண்ணீரும் கண்ணீரும்’ சிறுகதைத் தொகுதிக்கான இலங்கை அரசின் சாகித்ய மண்டலப் பரிசு கிடைத்தது. அதைக் கண்டு மனம் பொறுக்க முடியாத ஆசிரியர் கலாசாலை தமிழ் பண்டிதர் நாவிதனுக்கு இவ்வாண்டின் சாகித்ய மண்டலப் பரிசு கிடைத்திருக்கின்றதென வகுப்பில் நக்கலாகச் சொன்னார்! இதே பண்டிதர் அல்வாயூர் கவிஞர் செல்லையாவை ஒரு தடவை சந்தித்த பின்னர் என்னிடத்தில் வந்து கவிஞரைத் தெரியுமா? என்று கேட்டார். கவிஞர் எனக்குச் சொந்தக்காரன் என்று சொன்னதாகவும் சொன்னார். அதன் பின்னர் பண்டிதருக்கு என்மீதுள்ள பார்வையில் பாரிய மாற்றம் ஏற்பட்டது. நான் நல்லது எதைச் செய்தாலும் பண்டிதருக்கு அதன் பின்னர் உவப்பாக இருப்பதில்லை. எதிலும் குறைகண்டுகொண்டே இருப்பார். ஒருசமயம் வகுப்பில் கவிதை எழுதுவதற்கு தந்தார். எங்களுடைய மாணவ தலைவரின் வேண்டுகோளுக்கு செவிசாய்த்து அவனுக்கும் ஒரு கவிதை எழுதிக் கொடுத்தேன். அவனுடைய கவிதையை சிலாகித்து பகிரங்கமாகப் பாராட்டிய பண்டிதர் என்னுடைய கவிதையை சத்திர சிகிச்சை செய்து என்னையும் கிண்டல் பண்ணினார்.

சாதியின் பெயரால் எனக்கிழைக்கப்பட்ட கொடுமைகள் பல. ஆசிரிய கலாசாலையிலிருந்து வருடா வருடம் வெளியிடப்படும் கலாசாலை சஞ்சிகைக்கு நான் ஆசிரியனாக வராதவாறு மிகுந்த முயற்சியெடுத்து என்னைத் தடுத்தார்கள். ஆயினும் கலாசாலை சஞ்சிகையில் எழுதுமாறு அவர்களும் வேறு பலரும் என்னை வற்புறுத்திக் கேட்டனர். நான் எழுத மறுத்ததோடு அன்றே என்னுடைய உள்ளத்தில் பேனா பிடிப்பேன் என்ற சபதத்தை எடுத்துக் கொண்டேன். கலாசாலையை விட்டு வெளியேறுகின்ற போது நான் வெளியில் போய் எழுதுகின்றேன் என்று சொல்லிவிட்டே வந்தேன். பயிற்சி முடிந்து வெளியேறி பண்டாரவளை, அட்டம்பிட்டிய மகாவித்தியாலயத்திற்கு ஆசிரியனாக அனுப்பப்பட்டேன். எனக்கு ஒரு வருடம் மூத்த ஆசிரியர் கலாசாலை மாணவனாக இருந்த எழுத்தாளர் சா.பி.சுப்பிரமணியம் அவர்கள் பண்டாரவளை சென் மேரிஸ் கல்லூரியில் அப்போது (1964) ஆசிரியராக இருந்தார். அவர் பத்திரிகைகளுக்கு எழுதுமாறு தூண்டி அடிக்கடி கடிதம் எழுதிக்கொண்டிருந்தார். அவர் தந்த உற்சாகத்திலேயே முதல் கதையை எழுதினேன்.

கேள்வி: “தெணியான்” என்ற பெயருக்கான காரணம் என்ன?

எனது குடும்பப் பெயரே தெணியான். எனது பாட்டனாரினது பாட்டனருடைய பெயர் மடந்தையன். இவர் பருத்தித்துறை. காங்கேசன்துறையில் எனது ஊரான பொலிகண்டியில் தற்போது மீன் விற்கும் இடமான ஆலடி என்று சொல்லப்படும் இடத்திற்கெதிரே, இன்றைய வீதிக்கு தெற்கே 250,300 ஆண்டுகளுக்கு முன் குடியிருந்தவர். அவர் வாழ்ந்த இடத்தில் இன்றும் 14 பரப்பு நிலம் அவரது சந்ததியராகிய எங்களுக்கு உரிமையுடையதாக இருக்கின்றது. அந்த நிலத்தில் எனது மூதாதையர் நிறுவிய மடம் இன்று புனருத்தாரனம் செய்யப்பட்டு வருகின்றது. அந்தப் பகுதியில் வாழும் முதியவர்களால் இன்றும் ’பள்ளன் மடம்' என பெயர் சூட்டி அழைக்கப்படுகிறது. அந்த நிலத்தின் பெயர் தான் வண்ணான் தெணி. கடற்கரையோரமாக பிரதான வீதியின் அருகே தனது வீட்டின் அருகாக மடமொன்றையும் அமைத்து வாழ்ந்து வந்த எனது மூதாதையர் சமூக நிர்ப்பந்தம் காரணமாக அந்த இடத்தை விட்டு நீங்கி தற்போது எனது குடும்பம் வாழ்கின்ற இடத்தில் குடியேறினர். வண்ணான் தெணியிலிருந்து வந்து குடியேறியமையால் அவர்கள் வாழ்விடம் தெணி என அழைக்கப்பட்டது. எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தெணியார் என இன்றும் அழைக்கப்படுகிறார்கள். இலக்கிய உலகிற்கு தெணியான் என நான் இப்படித்தான் அறிமுகமானேன்.

கேள்வி:இடதுசாரி எழுத்தாளர்களுக்கும் உங்களுக்கும் இடையிலான தொடர்புகள் பற்றி குறிப்பிட முடியுமா?

ஆரம்பகாலத்தில் நான் திராவிட முன்னேற்ற கழக நூல்களைப் படிக்கின்ற ஒரு வாசகனாக இருந்தேன். பின்னர் பொன்.கந்தையாவின் வருகையுடன் ஏற்பட்ட மாற்றங்கள் காரணமாக மார்க்சிய, லெனினிய கருத்துக்களுடன் கூடிய நூல்களையும் ஈழத்து இலக்கியத்தின் நூல்களையும் படிக்க ஆரம்பித்தேன். இக்காலகட்டத்தில் டானியல், ஜீவா, கணேசலிங்கன், நந்தி போன்றவர்களுடைய படைப்புக்களை வாசித்தேன். அந்தப் படைப்புக்களின் மூலம் இவர்கள் எனக்குப் பரிச்சயமாக இருந்தார்கள். 1960ஆம் ஆண்டளவில் அகில இலங்கைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபைக் கூட்டங்களுக்கு நான் போகவாரம்பித்தேன். அங்கு இவர்களைப் பார்த்திருக்கிறேன். இவர்களுக்கென ஒரு கெளரவம், வரவேற்பு இருந்ததையும் அவதானித்திருக்கிறேன். பின்னர் பொன். கந்தையாவின் தேர்தல் பிரசாரத்தை கிராமம் கிராமமாக மேற்கொள்கின்ற நடவடிக்கையின் போது டானியல் அவர்கள் வீடு தேடி என்னிடம் வந்து, தனது மோட்டார் சைக்கிளில் ஏற்றிச் சென்று கூட்டங்களில் பேசவைத்திருக்கின்றார். ஜீவாவுடனான உறவின் நெருக்கம் நான் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக இணைந்த பிறகும் ஜீவா மல்லிகையை வெளியிட ஆரம்பித்த பிறகுமே உண்டானது. இவர்கள் இருவரும் பேராசிரியர் கா.சிவத்தம்பியும் எனது இலக்கியத் துறை சார்ந்த வளர்ச்சியிலும் எனது ஏனைய முன்னேற்றங்களிலும் அக்கறைகாட்டி வந்துள்ளனர்.

கேள்வி: ”இலங்கையில் ரகுநாதனையோ, எஸ்.பொன்னுத்துரையையோ ஒரு தலித்தாகப் பார்ப்பதில்லை. டானியல், ஜீவா, தெணியான் போன்றவர்கள் எங்களுடைய தமிழ் மரபில் முக்கியமானவர்கள். இங்கு அவர்கள் தலித் போராட்டத்தினூடாக அந்த அங்கீகாரத்தைப் பெறவில்லை. இதுதான் தமிழ் நாட்டுக்கும் இலங்கைக்குமான வித்தியாசம்” எனப் பேராசிரியர் கா.சிவத்தம்பி குறிப்பிட்டுள்ளார். இது பற்றி உங்கள் அபிப்பிராயம் என்ன?

பேராசிரியர் குறிப்பிடுகின்ற கருத்து இன்றைய தமிழ்நாட்டு தலித்தியவாதிகளைப் பின்னணியாகக் கொண்டதே. தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில் தலித்தியவாதிகள் தங்களது அடையாளமாக தலித்துவத்தை முன்வைத்து அதன் அடிப்படையிலேயே தங்களை இலக்கியவாதிகளாக வெளிப்படுத்துகின்றார்கள் இலங்கையைப் பொறுத்தவரையில் எஸ்.பொ, ரகுநாதன் போன்றவர்கள் வரன்முறையான கல்வியைக் கற்று ஆசிரியராக வந்தவர்கள். ரகுநாதனின் "நிலவிலே பேசுவோம்” என்ற சிறுகதை குறிப்பிட்டுச் சொல்லப்பட்ட போதும், இவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகளை அடியொற்றி பெருமளவு இலக்கியம் படைத்தவர்களல்ல. ஆனால், டானியல், ஜீவா போன்றவர்கள் இந்தப் பிரச்சினைகளை மையப்படுத்தி நிறைய எழுதியிருக்கிறார்கள். இவர்களுள் தெணியான் வரன்முறையான கல்வியைக் கற்ற ஆசிரியராக இருந்தவர். இவர்கள் மாக்ஸிஸக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டு இலக்கியம் படைத்தவர்கள். வர்க்க அடிப்படையில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினையை உள்வாங்கிக் கொண்டவர்கள். எனவே இவர்கள் முற்போக்கு இலக்கியம் சார்ந்த இலக்கியவாதிகளாக இலக்கிய உலகில் அங்கீகரிக்கப்பட்டவர்களேயன்றி தமிழ்நாட்டைப் போல் தலித் இலக்கியவாதிகள் எனும் அடையாளத்துடன் இலக்கிய உலகில் பேசப்படுபவர்கள் அல்ல.

கேள்வி: டானியல் தேசிய இனப் பிரச்சினை முனைப்புப் பெற்றிருந்த காலப்பகுதியிலும் கூட, அவர் சாதியம் பற்றியே திரும்பத் திரும்ப எழுதிக்கொண்டிருந்தார் என்று சொல்லப்படுவது பற்றி உங்களின் கருத்து என்ன?


தேசிய இனப் பிரச்சினை பல்வேறு நியாயங்களின் அடிப்படையில் முனைப்புப் பெற்ற போதும் பல கலைக் கழகங்களுக்கு தமிழ் மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவதில் இழைக்கப்பட்ட அநீதி காரணமாகவே தேசிய இனப்பிரச்சினை விஸ்வரூபமெடுத்தது. ஒடுக்கப்பட்ட மாணவர்களின் கல்வி உரிமைகள் மறுக்கப்பட்ட போது அது சாதியப் பிரச்சினையாக இருந்து வந்தது. இதே பிரச்சினை பெரும்பான்மை தமிழ் மாணவர்களுக்கு ஏற்படுகின்ற போது இனப்பிரச்சினையாக பேசப்பட்டதை மீண்டும் நான் வலியுறுத்த விரும்புகின்றேன். எனவே தேசிய இனப்பிரச்சினையினது எழுச்சியின் போது தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினை முற்றாக தீர்ந்துவிடாமலும், அந்தப் பிரச்சினை இல்லாதது போல் பின்தள்ளியும், இருட்டடிப்புச் செய்தும் இருந்த சூழ்நிலையில் ஒடுக்கப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட மக்களின் விடிவுக்காக போராடிய டானியல் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினையை முனைப்புடன் முன்வைக்க வேண்டியிருந்தது. தேசிய இனப்பிரச்சினையோடு தாழ்த்தப்பட்ட மக்களின் பிரச்சினைகளும் சமகாலத்தில் நியாயமாக முன்னெடுக்கப்பட்டிருக்குமாயின் டானியலுக்கோ தெணியானுக்கோ இப் பிரச்சினையைத் தொடர்ந்து பேசவேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. தமிழ் மக்கள் மத்தியில் இருந்து வந்த சாதியக் கொடுமையை அழித்தொழித்து தமிழ் மக்களை ஒன்றுபடுத்துவதற்கு முற்பட்டதன் மூலம் தேசிய இனப்பிரச்சினையில் டானியல் பங்காளியாக நின்றாார் என்பதுதான் இன்னொரு உண்மை.

கேள்வி:டானியலின் படைப்புக்கள் : ஒவ்வொன்றும் ஆவணப்படுத்தல்களாகவே கருத முடியும். அவற்றில் கலைத்துவத்தை காண முடியாது எனும் திறனாய்வாளர்களின் கருத்து பற்றி.?

திறனாய்வாளர்கள் என்று சொல்லப்படுபவர்கள் அனைவரது பார்வையும் ஒன்றுபட்தல்ல. பல்வேறுபட்ட பக்கச் சார்புகள் அவர்களிடம் காணப்படுகின்றன.டானியலின் படைப்புக்களை விளங்கிக்கொள்ள வேண்டுமானால் அடிநிலை மக்கள், அவர் தம் வாழ்வு, அவர் தம் பேச்சுவழக்கு, அவர்களுக்கான பிரத்தியேகமான சடங்குகள், சம்பிரதாயங்கள் என்பவற்றை அறிய வேண்டும், புரிந்துகொள்ள வேண்டும். அத்தகைய புரிந்துகொள்ளல் நிகழும் இடத்திற்தான் டானியலின் எழுத்தின் கலைத்துவத்தை புரிந்துகொள்ள முடியும். அவற்றிற்கு அந்நியப்பட்டு நிற்கின்ற, விமர்சனங்கள், டானியலின் படைப்புக்களில் கலைத்துவம் இல்லையென்பதும் அவரின் படைப்புக்கள் வெறும் ஆவணப்படுத்தல்கள் என்று சொல்வதும் கண்டு ஆச்சரியப்படுவதற்கில்லை. அந்த விமர்சனங்கள் அந்நியப்பட்டு நிற்கும் அறியாமையே அவர்கள் கருத்தின் மூலம் வெளிப்படுகின்றது. அவர்கள் அப்படிச் சொல்வதன் மூலமும் மண்டைக்குள் இருக்கும் தமது திமிரை வெளிப்படுத்துகின்றனர்.

கே: எழுத்தாளர்கள் சாதியம் பற்றி எழுதாவிட்டாலும் காலப் போக்கில் அரசியல், சமூக, பொருளாதார கலாச்சார மாற்றங்கள் சாதியத்திலும் கணிசமான மாற்றத்தை ஏற்படுத்தி இருக்குமல்லவா?

இலக்கியம் என்று சொல்லப்படுவது ஒரு சமூகத்தில் நேரடியாகச் சென்று சமூக மாற்றத்தை உருவாக்குவதில்லை என்பது உண்மை. அதே சமயம் சமூக மாற்றத்தின் உந்து சக்தியாக இருந்து இலக்கியம் சமூகத்தை மாற்றியமைத்திருக்கின்றது என்பதற்கு பல ஆதாரங்கள் உண்டு. இன்றைய காலகட்ட சமூகமாற்றம் என்று சொல்லப்படுவது பொதுவாக மக்கள் எல்லோர் மத்தியிலும் ஏற்பட்டுவந்த போதும் தாழ்த்தப்பட்ட மக்களை இன்றைய நிலைக்கு தயார் செய்ததில் எழுத்தாளர்களுடைய எழுத்திற்கு பங்குண்டு. தாழ்த்தப்பட்ட மக்கள் தமது உரிமைகளை 1950, 60களில் போராடியே பெற்றார்கள். அப்போராட்டம் அரசியல், சமூக இயக்கங்களின் பின்னணியில் நிகழ்ந்த போதும் அவற்றிற்கு உறுதுணையாக எழுத்தாளர்களின் எழுத்துக்கள் பயன்பட்டிருக்கின்றன. தாழ்த்தப்பட்ட மக்கள் தங்களைத் தாங்கள் கண்டுகொள்ளவும், தங்களை அடிமைப்படுத்தி அமுக்கி வைத்திருக்கும் சாதியத்தின் கொடுமையையும் உணர்ந்து கொள்ளவும், அவற்றை உடைத்தெறிந்து தாழ்த்தப்பட்ட மக்கள் முன்னேறவும் அவர்களது படைப்புக்கள் பயன்பட்டிருக்கின்றன. உயர் சாதியைச் சேர்ந்தவர்களுள் தமது காட்டுமிராண்டித் தனத்தைக் கண்டு வெட்கப்பட்டு தம்மை மாற்றிக் கொள்வதற்கும் இவர்களது படைப்புக்கள் உதவியுள்ளன.

கேள்வி:”முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆரம்பித்த காலம் தொடக்கமது ஆற்றிவரும் இலக்கிய வளர்ச்சிக்கான பணியைப் பாரட்டலாம். எனினும்கூட இந்த முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை நடத்தியவர்களும், அதிலிருந்தவர்களும், இலக்கியப் பணி புரிந்தவர்களும் தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்கள். ஆதலால் அந்த சமூகத்தின் குறைபாடுகளை ஒட்டியவர்களும் வருகிறார்கள். இவர்கள் காலங்காலமாக உயர் சாதியினரிடத்தில் ஒருவித வெறுப்பும் பகை உணர்ச்சியும் கொண்டிருந்ததால் அதைத் தீர்ப்பதற்காக தங்கள் எழுத்தைப் பயன்படுத்தினார்கள்" என்று மு.பொன்னம்பலம் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் நீங்கள் என்ன கூற விரும்புகிறீர்கள்?

தெணி: முற்போக்கு எழுத்தாளர் சங்கம் ஆரம்பித்த காலம் தொடக்கம் அது ஆற்றிவரும் இலக்கிய வளர்ச்சிக்கான பணியை இன்று மறுத்து, மறுதலித்து இலக்கிய வரலாறு சொல்லுவதும், எழுதுவதுமே தமது பெருந்தொண்டெனக் கருதி மூர்க்கத்தனமாக செயற்பட்டுக்கொண்டிருக்கிறார்கள் பலர். இலக்கிய வளர்ச்சிக்கான பணியை உணர்ந்து பாராட்டியிருக்கும் மு.பொன்னம்பலத்தை நான் எப்படி பாராட்டாமல் விட்டுவிட முடியும்? அடுத்து முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தை நடாத்தியவர்களும் அதிலிருந்தவர்களும் இலக்கியப் பணிபுரிந்தவர்களும் தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்தவர்களெனச் சொல்லுவதன் மூலம், இச் சங்கம் பற்றிய மு.பொவின் பார்வை நன்றாகப் புலப்படுகிறது. இங்கு ஒரு பட்டியல் தர விரும்பாத காரணத்தினால் இச் சங்கத்திலிருந்தவர்களின் பெயர்ப் பட்டியலைத் தருவதைத் தவிர்த்துக்கொள்கிறேன். வேண்டுமானால் பின்னர் அதனைக் குறிப்பிடலாம். ஒரு சமூகத்தில் தோன்றியவர்கள் குறிப்பிட்ட அச்சமூகத்திற்கென்றே உரிய குறைபாடுகளோடு பிறக்கிறார்கள் என்பது மிக அற்பத்தனமானது. சாதிப் புத்தி என்று சொல்வதை இவர் இன்னொரு வகையாக குறிப்பிடுகின்றார். எந்தவொரு சாதியில்ற் பிறந்தவனாக இருந்தாலும் அவன் பிறந்த குடும்பச் சூழலின் தாக்கம் அவனுக்கிருந்தேயாகும். அது மு.பொவுக்கும் பொருந்தும். கால கதியில் அவன் பெறுகின்ற பல்வேறு வளர்ச்சியின் காரணமாக அவன் உருவாக்கம் பெறுகிறான். உயர் சாதியார் என்று சொல்லப்படுபவர்களின்சமூகத்தில் மிகப் பிந்தங்கிய பகுதியில் பிறந்தவனும் இவ்வாறே வளர்ந்து வருகிறான்.

இவனுக்கு பிறப்புரிமையான விசேட குணங்கள் எதுவும் கிடையாது. இந்த பின்னணியில் முற்போக்கு எழுத்தாளர்களாக வளர்ந்து வந்தவர்கள் தமது சமூகத்துக்கு இழைக்கப்படுகின்ற கொடுமையை உயிர்ப்புடன் எடுத்துச் சொல்வதற்கு முன்னர் இந்த மக்களின் பிரச்சினைகள் எடுத்துச்சொல்லப்படவில்லை. காலங் காலமாக சமூகத்தில் உயர்ந்தவர்கள் அல்லது உயர் சாதியினர் என்று சொல்லப்படுவோரே கல்வியைப் பெறுகின்றவர்களாகவும் தமது வர்க்க நலன்களைப் பேணும் இலக்கியங்களை படைப்பவர்களாகவும் இருந்து வந்திருக்கின்றார்கள். இவர்களுடைய இலக்கியங்கள் தாழ்த்தப்பட்ட மக்களை இழிவுபடுத்தியே காட்டின. 'தண்டிகைக் கனகராயன் பள்ளு' எனும் பள்ளுப் பாடலைப் பாடிய புலவன் ஒரு பள்ளனாக இருந்திருந்தால் அந்தப் பள்ளுப் பாடல் எப்படி அமைந்திருக்கும்? தாழ்த்தப்பட்ட மக்கள் மீது அதிகாரம் செலுத்தி அவர்களை சமூக ரீதியாகவும் இலக்கியங்களுக்கூடாகவும் இழிவுபடுத்தி வந்த ஒரு சமூகத்திற்கெதிராக, அச்சமூகத்தின் குறைபாடுகளை முற்போக்கு எழுத்தாளர்கள் எடுத்து முன்வைக்கப்படுகையில் மு.பொ. போன்றவர்களால் அதை ஜீரணிக்க முடியவில்லை. தமிழ்ச் சமூகத்தின் அக முரண்பாடுகளை மூடிமறைக்க வேண்டிய போலித்தனத்தில் மூச்சிறைக்கிறார்கள். இதன் மூலம் யாருடைய பிரதிநிதி தான் என்பதை மிகத் தெளிவாக மு.பொ. வெளிப்படுத்துகிறார்.

கேள்வி: அகில இலங்கை சிறுபான்மைத் தமிழர் மகா சபையின் தொடர்பு. இடதுசாரிகளின் நெருக்கமான உறவு என்பன உங்களை எவ்விதம் பாதித்தன?

சிறுபராயம் முதல் வாசிப்பதில் மிகுந்த ஆர்வம் எனக்கு இருந்து வந்துள்ளது. நான் ஏழாம் வகுப்பு படிக்கின்ற காலத்திலேயே எனது தந்தையார் தினகரன் பத்திரிகையை தினமும் எடுத்துவந்து எனக்குப் படிக்கத் தந்தார். நான் எட்டாம் வகுப்பு படிக்கையில் நான் படித்த தேவரையாளி இந்துக்கல்லூரியில் 'சுற்றி வாசிப்பு' என்று சொல்லப்படுகின்ற ஒரு திட்டம் காரணமாக ஒவ்வொரு வகுப்பிலும் சுமார் 35, 40 நூல்களை வாசிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அக்காலத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் வெளியிடுகின்ற நூல்கள், சஞ்சிகைகளை விரும்பிப் படித்தேன். இவைகளையெல்லாம் வாங்கிப் படிப்பதற்கு எனக்குப் பணம் தந்துகொண்டிருந்தவர் என்னுடைய தாய். இந்த வாசிப்புக் காரணமாக எனக்குள்ளே சமூக அக்கறையுள்ள சிந்தனைகள், மனித விடுதலைக்கான சிந்தனைகள் என்பவற்றோடு என்னிடமிருந்து வந்த மானுட நேயமும் வளர்ந்து வந்தது. பின்னர் பொன்.கந்தையா, பருத்தித்துறை பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்ட சமயம், என்னுடைய குடும்பத்தவர்கள் கந்தையாவின் ஆதரவாளர்களாக இருந்தார்கள். இந்தக் காலத்தில் தான் டானியல், எம்.சி. சுப்பிரமணியம் போன்ற இடதுசாரிகளை மாணவனாகிய நான் சந்தித்தேன். கந்தையாவின் வருகையோடு எனது வாசிப்பு இரசனையிலும் சிறிதுசிறிதாக மாற்றம் ஏற்படத் தொடங்கியது. இடதுசாரிக் கருத்துள்ள நூல்களையும் இலக்கியங்களையும் நான் வாசிக்கவாரம்பித்தேன். அகில இலங்கைச் சிறுபான்மை தமிழர் மகாசபைக்குள் போனபோது அதன் தலைவராக இருந்த எம்.சி. சுப்பிரமணியம் அவர்களோடு நெருக்கமான உறவு ஏற்பட்டது. கம்யூனிஸ்ட் கட்சியின் வட பிரதேச முக்கியமானவர்களுள் ஒருவரான அவர், அகில இலங்கை சிறுபான்மை தமிழர் மகாசபையின் தலைவராக இருந்தமையால் அங்கு இடதுசாரிகளின் செல்வாக்கு மேலோங்கியிருந்தது. இந்த மகாசபை தாழ்த்தப்பட்ட மக்களின் முன்னேற்றத்திலும் போராட்டங்களிலும் அக்கறையுடையதாகவிருந்து வந்துள்ளது. சமூகக் கொடுமையினால் பாதிக்கப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் குரலாகவும், அவர்களின் பாதுகாப்பு அரணாகவும் இந்த மகாசபை விளங்கியது. உதாரணத்துக்கு ஒன்றைச் சொல்லலாம், நீர்வேலியில் தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகள் உயர் சாதியினரால் தீவைத்துக் கொளுத்தப்பட்ட போது மகாசபையைச் சேர்ந்தவர்கள் திரண்டு சென்று மீண்டும் அவர்களுடைய வீடுகளை அமைத்துக் கொடுத்ததுடன் நிதியுதவி செய்து பக்கபலமாக இருந்தோம். அவர்களுக்கு வேண்டிய நிதியைத் திரட்டுவதற்காக நான் வீடு வீடாக உண்டியல் குலுக்கிப் பணம் சேர்த்தேன். இது மாத்திரமல்லாமல் எமது ஊரான பொலிகண்டி கந்தவனக் கடவை ஆலயக் கதவை திறப்பதற்கான போராட்டத்தை நானும் என்னுடன் சேர்ந்த இளைஞர்களும் முன்னெடுத்த போது மகாசபையின் பின்னணிப்பலம் எமக்கிருந்தது. ஆலயப் பிரவேசம் நடைபெற்ற சமயம் எம். சி.சுப்ரமணியம் தலைமை தாங்கினார் என்பதும் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியதாகும். இடதுசாரித் தலைவரான எம்.சி.சுப்ரமணியம் போன்றவர் தொடர்பும் இயல்பாகவே எனக்கிருந்த மானுட நேசமும் விடுதலையுணர்வும் காரணமாக நான் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக இணைந்துகொண்டேன். அங்கு ஏ. வைத்தியலிங்கம், வி. பொன்னம்பலம். ஆர். பூபாலசிங்கம், ஐ.ஆர்.அரியரட்ணம் போன்றவர்களையும், முற்போக்குச் சிந்தனையுடைய பல தோழர்களையும் சந்தித்தேன். பிற்காலத்தில் பொன். குமாரசாமி அவர்களோடு மிக நெருக்கமான உறவு இருந்து வந்திருக்கிறது. தென்னிலங்கையிலிருந்து வந்த பல தலைவர்களை நான் சந்தித்திருக்கின்றேன். அவர்களுடைய கருத்துக்களைக் கேட்டிருக்கிறேன். எனது உருவாக்கத்திற்கு இவை யாவும் முக்கிய காரணிகளாக இருந்திருக்கின்றன.

கேள்வி:நீங்கள் சாதியம் பற்றியே எழுதும் எழுத்தாளர் எனும் கருத்தினையே பலர் கொண்டிருப்பது பற்றி உங்கள் கருத்தென்ன?

நான் சாதியம் பற்றியும் எழுதுகின்ற எழுத்தாளனேயன்றி சாதியம் பற்றி மாத்திரம் எழுதுகின்ற ஒரு எழுத்தாளனல்ல. ஆனால் என்னை அப்படி நோக்குகின்றார்கள் என்றால் சாதியம் என்பது ஒழிந்து போய்விட்டதெனப் போலியாகச் சொல்லிக் கொண்டு அதை மறைக்க முற்படுகின்றவர்கள் மத்தியில் சாதியக் கொடுமைகளை இடையிடையே எடுத்து இனப்பிரச்சினையினுள்ளே சாதியம் முன்வைக்கின்றவன் நானாகவேயிருக்கின்றேன். தேசிய போய்விட்டதாகச் சாதியத்தை வளர்க்க விரும்புகிறவர்களே கொண்டிருக்கின்றார்கள். சாதியப் Endu மறைந்து பிரச்சினையை அது இன்று கூர்மையடைந்துள்ள முறைமையினை வெளியே எடுத்துச் சொல்வதன் மூலம், அதனை தீர்க்க வேண்டுமென்னும் சமூகக்கடமையை நான் செய்து கொண்டிருக்கின்றேன். தெணியான். டானியல் போல சாதியம் பற்றியே எழுதவேண்டுமென சொல்கின்றவர்கள் , எதிர்பார்க்கின்ற ஒருசாரார் இருக்கின்றனர். இல்லை தெணியான் சாதியத்தை எழுதவேண்டிய அவசியமில்லை. அவர் 'காத்திருப்பு', 'கானலில் மான்' போன்ற சாதியம் பேசாத படைப்புகளையே தரவேண்மென்று எதிர்பார்க்கின்ற இன்னொரு சாராரும் இருக்கின்றனர். நான் இந்த இருசாராரையும் ஏற்றுக்கொள்ளாதவன். சாதியம் மாத்திரம்தான் நமது பிரச்சினையென்று எண்ணுகின்றவனல்ல. அதேசமயம் சாதியப் பிரச்சினைகள் தீர்ந்து விட்டதென்றும் தவறாக எண்ணவில்லை. பழக்கப்பட்டதொரு மிருகத்தைப் பிடித்து கயிறு கொழுவி கட்டையில் கட்டிவிட்டால் அது எந்தப் பிரச்சினையுமில்லாமல் தான் மிகச்சௌகரியமாக இருப்பதாக எண்ணிக்கொண்டு படுத்திருக்கும். அந்த மிருகத்தை ஒத்தவர்களாகவே தாழ்த்தப்பட்ட சமூகத்திலிருந்து வந்த கற்றோர் சிலர் இருந்து வருகின்றார்கள். எழுத்தாளர்கள் சிலர் இருக்கின்றார்கள். தெணியானால் அப்படியிருக்க முடியாது. கட்டையில் பிடித்துக் கட்டப்படும் பழக்கப்பட்ட மிருகமல்ல நான்.

கேள்வி:உங்களுடைய படைப்புகள், அவை எப்படி நூலுருப் பெற்றன?

நான் எழுத ஆரம்பித்து 38 ஆண்டுகளாகின்றது இந்த 38 ஆண்டுகளில் எட்டுநூல்கள் மாத்திரம் வெளிவந்துள்ளன. ஈழத்தைப் பொறுத்தவரையில் நூல் வெளியீடென்பது படைப்பாளிகளுக்கு பெரியதொரு பிரச்சினை வசதிபடைத்த எழுத்தாளர்கள் தமது படைப்புகளைப் பொறுத்தவரையில் (ஒருசிலர்) நூல் வடிவங் கொடுத்து வெளிக்கொண்டு வருகின்றார்கள். வசதியற்றவர்கள் தமது ஆக்கத்தை நூல்வடிவில் கொண்டுவரும் ஆர்வம் காரணமாக கடன்பட்டே வெளியீட்டை செய்து சிரமப்படுகின்றார்கள். எனது நூலாக இதுவரை வெளிவந்திருப்பின் இந்த எட்டு நூல்கள் மாத்திரமல்ல இன்னும் பல நூல்கள் வெளிவந்திருக்க வேண்டும் எனது பணத்தை முதலீடு செய்து நூலாகக் கொண்டு வரும் நிலையில் நானில்லை. ஆனால் இதுவரை வெளிவந்த நூல்களை வெளியீட்டாளர்கள் சிலர் மனம் விரும்பி வெளியீடு செய்துள்ளனர். எனது முதல் நாவலான விடிவை வீரகேசரிப் பிரசுரமாக வெளிவந்தது. ஆக்கங்கள் என்னுடைய படைப்புகளை நோக்கி" (1973) .. 'கழுகுகள்' நாவல்(1981), 'சொத்து' சிறுகதைத் தொகுதி(1984) இவையிரண்டும் தமிழ்நாட்டில் நூலுருப் பெற்றன. 'கழுகுகள்' நர்மதா வெளியீடாகவும். 'சொத்து' என்.சி.பி.எச் வெளியீடாகவும் வெளிவந்தன. இந்த இரண்டு நூல்களும் தமிழ்நாட்டில் நூலுருப்பெறக் காரணமாயிருந்தவர் டொமினிக் ஜீவா ஆவார். பிரதிகளை அவரே எடுத்தச் சென்று நுாலாக Orien வெளிவருவதற்கான கான ஏற்பாடுகளைச் செய்தார் என்பதை நன்றியுடன் நினைவு கூர்கின்றேன். 'பொற்சிறையில் வாடும் புனிதர்கள்', 'முரசொலி' வெளியீடாக (1989) வெளிவந்துள்ளது. 'மாத்துவேட்டி' சிறுகதைத்தொகுதி மல்லிகைப்பந்தல் வெளியீடாக (1996) ஜீவா வெளியிட்டுள்ளார். 'மரக்கொக்கு' நாவல்(1994), 'காத்திருப்பு நாவல் (1999).'கானலில் மான்’ நாவல் (2002) ஆகிய படைப்புகளை பூபாலசிங்கம் புத்தக நிலையத்தினர் வெளியிட்டுள்ளனர். பூபாலசிங்கம் பதிப்பக உரிமையாளர் சிறிதர்சிங் அவர்களின் தந்தையார் அமரர் பூபாலசிங்கம் அவர்கள் எமது கட்சியின் முன்னோடிகளுள் ஒருவர். என்மீது தோழமையும், அன்பும், அக்கறையுடையவராகவும் அவர் இருந்தார். அந்த உறவின் தொடர்ச்சியாகவே அவரது மகன் சிறிதர்சிங் அவர்கள் எனது படைப்புகளை நூல்வடிவில் தந்து கொண்டிருக்கின்றார். என்னுடைய நூல்களை தொடர்ந்தும் இவ்வாறு வெளியீட்டாளர்கள் வெளியிட்டு வைப்பார்கள் என்று நான் நம்புகின்றேன். அந்த நம்பிக்கை வாசகர்களுக்கு நூல்களாக கிடைக்கவே செய்யும்.

கேள்வி:நீங்கள் எழுதவாரம்பித்த காலப்பகுதியிலிருந்து இன்று வரையான கால இடைவெளியில் படைப்பிலக்கியங்களின் உட்பொருளில் எத்தகைய மாறுதல் களை இனங்கண்டுள்ளீர்கள் ?

ஒரு படைப்பாளி தான் வாழும் சமூகத்திலிருந்தே தனது படைப்பிலக்கியங்களுக்கான கருவை தேடிக்கொள்கின்றான். படைப்பிலக்கியம் என்பது அந்த இலக்கியம் தோன்றிய காலத்தின், சமூகத்தின் அறுவடையாகவே அல்லது வெளிப்பாடாகவே தோன்றுகின்றது. அவ்வாறு இல்லாத இலக்கியங்கள் வெறும் கற்பனாவாத இலக்கியங்களாகவே கொள்ளப்படும். அவைகளினால் சமூகத்திற்கு எந்தவிதமான பெரும் பயனும் விளைந்துவிடப் போவதில்லை. காலத்தின் விளைவாக சமூகத்திலிருந்து பிறக்கின்ற இலக்கியங்கள் சமூகத்தின் மாற்றங்களையும் வெளிக்கொணர தவறுவதில்லை. இந்த அடிப்படையில் 1950, 60களில் அதனைத் தொடர்ந்து 70 வரை முற்போக்கு இலக்கியம் வீச்சுடன் எழுச்சியுற்று வெளிவந்த காலம். இக்காலகட்டத்தில் வர்க்கப் பிரச்சினை. சாதியப் பிரச்சினை என்பனவே ஈழத்துத் தமிழ் இலக்கியத்தில் பேசப்படும் பொருளாக இருந்தது. 70களின் பின்னர் இன முரண்பாடு வலுப்பெற்று போராட்டங்கள் தலைதூக்கின. இக்காலகட்டத்தில் இனமுரண்பாடு பற்றிய ஆக்க இலக்கியங்கள் இனப்பிரச்சினையின் காரணமாக துன்பப்படும் தமிழர்களது அவலங்களும் இலக்கியங்களாகின. இவை இரண்டும் தான் பிரதானமாக கோடிடப்பட வேண்டிய காலகட்டங்கள் எனலாம். எந்தவொரு இலக்கியமும் அதன் வளர்ச்சியும் வரலாற்று அடிப்படையிலேயே தோன்றுகின்றது. முற்போக்கு 2. இலக்கியத்தின் எழுச்சி மிக்க வளர்ச்சியின் வழிவந்ததே E இன்றைய இலக்கியம் நாளைய இலக்கியங்கள் இன்றைய இலக்கியங்களை உள்வாங்கி இவற்றிலிருந்து மேலெழுகின்றவையாகவே அமையும் எனவே இன்றைய 9 இலக்கியங்கள் கடந்தகால இலக்கியங்களை மிக உன்னதமானது எனக்கருதுவது மிகத்தவறானதாகும். இனப்பிரச்சினை பற்றிப் பேசும் இலக்கியங் தான் சிறந்த இலக்கியங்கள் எனச்சொல்லப்படும் ஒரு பக்கப்பார்வை ஆரோக்கியமானதல்ல. நீங்கள் ஒருசிறுகதைப் படைப்பாளியாகவும் இருக்கிறீர்கள்; வாசகர்களுக்கு நாவலாசிரிய னாகவே பரிச்சயமாகி உள்ளமைக்கான காரணம் என்ன? நாவலாசிரியர்கள் எல்லோரும் ஆரம்பத்தில் சிறுகதைகள் அந்த எழுதிய பின்னர் நாவல் எழுதியவர்களே. என்னுடைய நிலையும் அதுவேதான். பத்திரிகை, சஞ்சிகைகளில் சிறுகதைகளை உதிரியாக படைப்பதன் மூலம் ஓர் எழுத்தாளன் இலக்கிய கணிப்பைப் பெற்றுவிடுவதில்லை. அவனுடைய சிறுகதைகள் நூல் வடிவில் தொகுக்கப்பெற்று வெளிவரும்போது தான் விமர்சகர்களிடமிருந்தும் ப்பெற்று வாசகர்களிடமிருந்தும் எழுத்தாளன் கணிப்பைப் பெறுகின்றான். என்னுடைய படைப்புகளாக இதுவரை எட்டு வெளிவந்துள்ளன. இவற்றுள் ஆறு நாவல்கள். தொகுதிகளாக இருந்த போதும் வாசகர்களின் கவனத்தைப் பெறத் தவறிவிட்டன. முதல் தொகுதியான 'சொத்து' தமிழ் நாட்டில் பிரதிகளே இலங்கைக்கு வாசகர் கருத்துக்கு எட்டாத சபதுக்கும் - Baim odsen நூல்கள் ஏனைய இரண்டு wwww..comm சிறுகதைத் அவைகளும் சம் நூலுருப்பெற்றது. மிகச் சொற்பமான வந்து சேர்ந்தன. அதனால் செங்கையாழியான் எழுதி அண்மையில் வெளிவந்திருக்கும் நூலாக அது போய்விட்டது. நண்பர் 'ஈழத்து சிறுகதை வரலாறு' நூலில் கூட 'சொத்து'ப் பற்றிய தகவல் இல்லை. அடுத்த சிறுகதைத் தொகுதி 'மாத்துவேட்டி' மல்லிகைப் பந்தல் வெளியீடாக வந்தது. மிகச் சிறிய எழுத்துக்களில் நிறைந்த அச்சுப் பிழைகளோடு வெளிவந்திருக்கும் நூல் இது. மல்லிகைப்பந்தல் வெளியீடுகளின் தயாரிப்பில் மிக மோசமான நூல் எது என்று கேட்டால் அது ‘மாத்துவேட்டி' தான். நான் கையில் எடுத்துப் படிப்பதற்கே சிரமமாக உள்ளது. இதுவரை நான் எழுதிய சிறுகதைகளை தொகுதிகளாகப் போட்டிருந்தால் 10 தொகுதிகள் தேறியிருக்கும். இதில் ஒரு ஐந்து தொகுதிகளைத் தானும் என்னால் நூல் வடிவில் பார்க்கமுடியவில்லை. ஆகவே ஆறு நாவல்கள் வெளிவந்து நான் நாவலாசிரியனாக நோக்கப்படுவதற்கு வழி கோலியுள்ளது.

கேள்வி:உங்களது 'காத்திருப்பு' நாவல் மிகப் பெருமளவில் பாலியல் சார்ந்த நாவல் எனக் கூறப்படும் விமர்சனம் பற்றி?

'காத்திருப்பு' பாலியல் பிரச்சினையைப் பற்றி மட்டும் பேசும் ஒரு நாவலல்ல. இது பாலியல் பிரச்சினையோடு சுரண்டல் பற்றியும் பேசுகின்ற ஒரு படைப்பு. உளவியலை நோக்கும் இந்த நாவல் ஊடு பாவாக பொதிந்திருக்கிறது. இந்த பாலியல் பிரச்சினை சார்ந்த நாவல் என்று சொல்லுகின்றபோது நான் மிக எச்சரிக்கையாகவே பேச விரும்புகிறேன். கடந்த காலத்தில் பாலியல் குறிப்பிடப்பட்ட யல் நாவல்கள் என்று இறியாய உள்ளத்தில் இருக்கவே செய்யும். அந்த மன ஒரு மனப்பதிவு வாசகன் நத்தப்புக்கள் பற்றி , மனப்பதிவோடு நாவலை பேசப்படுகிறது, பாலியல் பிரச்சினைகளை ஒரு 900.00 எனது காத்திருப்பு நாவலை வாசகர்கள் நோக்குதல் கூடாது. இந்த நாவலில் பேசப்படாத பொருளாக பாலியல் யாரும் முகஞ்சுழிக்கா வண்ணம் எவ்வாறு இலக்கியத்தினுள் கொண்டு வரலாம் என்பதை மிக நிதானத்துடன் இந்தப்படைப்பில் நான் செய்துகாட்டியுள்ளேன். இந்த வகையில் இது என் வெற்றி என்றும் கருதுகிறேன். இந்த நாவல் பெரிய அளவில் பலருடைய கவனத்தை இன்னும் ஈர்க்காதிருப்பது தான் எனக்கு வியப்பாக இருக்கிறது.

கேள்வி:'அறிவோர் கூடல்' நிகழ்வு உங்களை எவ்விதம் பாதித்தது?

பருத்தித்துறையில் டொக்ரர் முருகானந்தன், நண்பர் குலசிங்கம். ரகுவரன் போன்றோர் முன்னின்று ஆரம்பித்ததுதான் இந்த அறிவோர் கூடல், மாதத்தில் இரண்டு தடவை. பின்னர் ஒருதடவை இந்தக் கூடலில் இருந்த நண்பர்கள் குறித்தவொரு தினத்தில் ஒன்றுகூடினோம். இந்த ஒன்றுகூடல் பெரும்பாலும் டொக்ரர் முருகானந்தன் இல்லத்தில் நடைபெற்றுவந்தது. ஒரு கூடலின் போது கூடலைச் சேர்ந்த நண்பர் ஒருவர் அல்லது வெளியார் ஒருவர் குறித்தவொரு பொருள்பற்றிப் பேசுவார். பேச்சு முடிந்ததும் கூடலிலிருந்த நண்பர்கள் கலந்துரையாடுவர். கூடல் முடிந்து நண்பர்கள் சிலர் பேசிக்கொண்டிருப்போம், வீடுதிரும்புவதற்கு இரவு ஒன்பது பத்து மணிகூட ஆகலாம். இந்தக் கூடலில் இலக்கியம் பற்றிய கருத்துரைகள் மாத்திரம்தான் இடம்பெற்றன என்றில்லை, பல்வேறு துறை சார்ந்தவர்களும் தமது துறைசார்ந்த பொருள் பற்றிக் கருத்துரை வழங்கியுள்ளனர். பேராசிரியர் சிவத்தம்பி அவர்கள் முதற்கொண்டு பல பல்கலைக்கழக பேராசிரியர்கள் அங்கு சமூகந்தந்துள்ளனர். அங்கு இடம்பெற்றகருத்துரைகள் பல்துறைசார் விடயங்களை எடுத்துச் சொல்வனவாகவும் தெளிவுபடுத்துவனவாகவும் கருத்து மோதல்கள் மூலம் புதியவற்றை வெளிக்கொணர்பவையாகவும் இடம் பெற்றன. இன்று இவைகளைத் திரும்பிப்பார்க்கையில் நான் கேட்டறிந்த விடயங்கள் எனக்குப் பெரிதாகப்படவில்லை. நூல்கள் வாயிலாக ஆற அமர அந்த விடயங்களை நான் படித்தறிந்திருக்க முடியும். அறிவோர் கூடல் மூலம் உண்மையில் நான் பெற்றுக்கொண்டது நல்ல நண்பர்களைத்தான். அறிவோர் கூடல் இன்று நடைபெறாது தடைப்பட்டு விட்டபோதும் அந்த நண்பர்களில் ஆழ்ந்த அன்போடு கூடிய நட்பே எனக்கு மிஞ்சி நிற்கிறது.

கேள்வி:நீங்கள் ஓர் ஆசிரியர் என்ற வகையில் இப்போது நடை முறைப்படுத்தப்பட்டு வரும் கல்விமுறை பற்றி தங்களது கருத்து என்ன?

கடந்த காலத்தில் அமுலுக்கு கொண்டுவரப்பட்ட புதிய கல்வி முறைகள் பல் பின்னர் தவறானவையாக விமர்சிக்கப்பட்டு கைவிடப்பட்டன. இன்று புதியதொரு கல்விமுறை அறிமுகப் படுத்தப்பட்டுள்ள போதும் கடந்த காலத்தில் நடைமுறையிலிருந்த அமைப்பு முற்றாக மாற்றியமைக்கப்படவில்லை. குறிப்பாகச் சொல்வதாக இருந்தால் ஆரம்பவகுப்புகளில் செயல் P முறையிலான கல்வி இன்று நடை Szom கல்வி முறைப்படுத்தப்படுகின்றது. இது மிகவும் வரவேற்கப்பட வேண்டியதொன்று. இச்செயல் திட்டத்தினை அமுல்படுத் துகின்ற ஆசிரியர்கள் அதற்கான தயார்நிலையில் இருக்க வேண்டியது மிக அவசியம். அவ்வாறிருக்கின் றார்களோ என்பது கேள்விக்குரிய தொன், தொன்றுதான் அதே சமயம் புலமைப்பரிசில் பரீட்சை (தரம் -5) என்று வருகின்ற போது மாணவன் பழைய பரீட்சை முறைக்குள்ளே தள்ளப்படு கிறான். இங்கே இரண்டுங்கெட்டான் நிலையிலேயே மாணவர்கட்கான 2011 50 போதனை உள்ளது ஆரம்ப வகுப்புக்களுக்கு மேலேயுள்ள வகுப்புக்களை நோக்கினால் பாட அலகுகள் தோறும் கணிப்பீடுகள் இடம்பெற்று செம்புள்ளி, கரும்புள்ளி தந்தது குத்தப்படுகிறது. புள்ளியை ஒழுங்காகக் குத்தி மேலதிகாரிகளுக்கு நேர்த்தியாகக் - காட்டுவதன் மூலம் மாணவர்களின் கல்வி நிறைவு பெற்றுவிட்டதாக கொள்ள முடியாது. இங்கும் ஆரம்பப் பிரிவுக்கல்வி போல ஒரு பிரச்சினை எழுகின்றது. அலகுகள் தோறும் கணிப்பீடுகள் நடைபெற்ற போதும் க.பொ.த. போன்ற (உ.த.சா.த) பகிரங்கப் பரீட்சைகளின் போது பழைய பரீட்சைமுறைக்கே மாணவர் மீண்டும் தள்ளப்படுகின்றனர். கணிப்பீட்டுப் புள்ளிகளில் குறிப்பிட்டதொரு வீதம் அரசின் பொதுப் பரீட்சையின் போது சேர்ந்தே புள்ளி வழங்கப்படுமென அண்மையில் அறிவிக்கப்பட்டிருந்த போதும் மாணவர்களை நேரடியாக அறிந்து வைத்துள்ள ஆசிரியர்களின் சாதக, பாதக நடத்தைகளால் எதிர்காலத்தில் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள். இவையெல்லாம் முழுமையாக மாற்றியமைக்காது இடையிடையே செய்கின்ற சீர்திருத்தங்களினால் விளைகின்ற குழப்பம் எனலாம். இது சமூகத்துக்கும் பொருந்தும்.

கேள்வி:'நான்காவது பரிமாணம்' இதழுடன் நீங்கள் எத்தகைய தொடர்பினைக் கொண்டிருந்தீர்கள்? அவ்விதழ் ஏன் தொடர்ந்து வெளிவராது போயிற்று?

நான்காவது பரிமாணம் கனடாவிலிருந்து வெளிவந்த ஒரு மாதாந்த சஞ்சிகையாகும். அதன் ஆசிரியராக இருந்து வெளியிட்டுவந்தவர் எனது சொந்தத் தம்பி நவரத்தினம். சஞ்சிகை பற்றிச் சொல்வதற்கு முன்னர் அவரைப் பற்றி சொல்வதன் மூலம் சஞ். சிகையின் பின்னணியை ஓரளவுக்கு விளங்கிக் கொள்ளலாம். அவர் ஒரு M.S.C. பட்டதாரி. கொழும்பு விவேகானந் தா கல்லூரியில் ஆசிரியராக இருந்தவர். 83ம் ஆண்டு கலவரத் தின் போது அவரது குடும்பம், வீடு பாதிக்கப்பட்டதனால் நாட்டை விட்டு வெளியேறவேண்டி நேர்ந்தது. சங்கீதம், சித்திரம். நாடகம், நடிப்பு. உதைப் பந்தாட்டம், கிரிக்கெட் போன்ற பல்துறை ஆற்றல்கள் அவரிடமிருந்தன. க.நவம் என்ற பெயரில் சிறுகதைகள், உருவகக் கதைகள், கட்டுரைகள் என்பவற்றை 'உள்ளும் புறமும்' எழுதிவந்தார். என்ற சிறுகதைத் தொகுதியும் 'உண்மையின் மௌன ஊர் வலங்கள்" எனும் அரசியல் - கட்டுரைத் தொகுதியும் அவருடைய படைப்புக்களாக நூல்வடிவில் வெளிவந்துள்ளன. எனக்குக் கீழே அவர் வளர்ந்து வந்த காரணத்தினால், சிறுவயதுமுதல் கலை இலக்கியச் சூழலொன்று அவருக்கு வாய்ப்பாய் அமைந்திருந்தது. அதனால் பெருமளவில் இல்லாது விட்டாலும் எப்போதும் கலை இலக்கிய ஈடுபாடுள்ளவராக செயற்பட்டுக் கொண்டிருந்தார். அந்த உணர்வும் தமிழுக்கு, தமிழிலக்கியத்துக்கு தன்னால் இயன்றது எதையாவது செய்ய வேண்டும் என்ற ஆர்வம் காரணமாக தனித்து நின்றே நான்காவது பரிமாணத்தை வெளியிட்டு வந்தார். ஒரு சஞ்சிகை வெளியிடுவதன் மூலம் பொருளாதார ரீதியாக நட்டப்படுவதைத் தவிர வேறு எந்தவித இலாபத்தையும் பெறமுடியாது என்பதைத் தெரிந்து கொண்டே வெளியீட்டு முயற்சியில் இறங்கியிருந்தார். இங்கிருந்து சில படைப்பாளிகளின் படைப்புக்கள் அவருக்கு கிடைக்கச் செய்தது ஒன்றே எனக்கந்தச் சஞ்சிகையோடு இருந்த தொடர்பு எனலாம். எனது ஆக்கங்கள் சில அச்சஞ்சிகையில் இடம்பெற்றுள்ளன. இச்சஞ்சிகை அன்று பலருடைய கவனத்துக்கும் உள்ளான ஒன்றாக இருந்தது. வாசகர்களின் கருத்தைக் கவர்ந்தமை இச்சஞ்சிகை மீது சிலருடைய அதிருப்தியை தோற்றுவித்தது. எந்தவித அரசியல் அல்லது குழுவாதக் கருத்தினையும் பின்னணியாகக் கொண்டிருக்காத நான்காவது பரிமாணத்தின் மீது கொடுக்கப்பட்ட அழுத்தம் காரணமாக இச்சஞ்சிகையை அவர் தொடர்ந்து வெளியிடாமல் நிறுத்திக் கொண்டார். இதுதான் தமிழுக்கும், தமிழிலக்கியத்துக்கும் செய்த பெருந்தொண்டு.

கேள்வி:உங்களது தற்போதைய படைப்புக்கள் முக்கியமாக உளவியல் சிக்கல்களைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளன. இதற்கான காரணம் என்ன?

இலக்கியம் என்று சொல்லப்படுவது ஒரு சமூகத்தின் வாழ்வியல் நிலையிலிருந்தே எழுகிறது. நான் எழுத ஆரம்பித்த காலத்திலிருந்த சமூகம் இன்றைக்கு எந்தவித மாற்றமுமடையாது அப்படியே இருந்துவிடவில்லை. சமூகம் மாறிக் கொண்டேயிருக்கிறது. அடக்கியொடுக்கப்பட்ட மக்களும் அக்காலத்திலிருந்தது போல இன்று அவர்களின் வாழ்வு நிலையில்லை. கல்வி, வெளிநாடுகளிலிருந்து வரக்கூடிய பணம். என்பவற்றால் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுள்ளன. அக்காலத்தில் அடக்கியொடுக்கியது போல இன்று இலகுவாகச் செய்ய முடியாது. வெளிப்படையான அடக்கியொடுக்குதல் வெகுவாக குறைந்து கொண்டே வருகிறது. ஆனால் உள்ளீடாக கூர்மைப்படுத்தப்பட்டதாக அது இன்று வேறு பரிமாணத்தைப் பெற்றிருக்கின்றது. இந்த நிலையில் அடக்கியொடுக்குதல் பற்றிக் கடந்தகாலம் போல் சொல்லுகின்ற இலக்கியம் தோன்றுவதற்கான வாய்ப்பில்லை. அதே சமயம் வெளியே தோன்றும் மனிதன் ஒருவனாகவும் உள்ளேயிருக்கும் மனிதன் வேறு ஒருவனாகவும் வாழ்வதை நான் அவதானிக்கின்றேன். இத்தகைய அவதானிப்பும் எனது அனுபவமும் இணைந்தே உளவியல் அடிப்படையிலான இலக்கியங்கள் என்னிடமிருந்து பிறக்கின்றன.

கேள்வி:இன்றைய ஈழத்துப் புனைகதை இலக்கியம் எந்நிலையிலுள்ளது? நம்பிக்கை தரும் படைப்பாளியாக உங்களால் இனங்காணப்பட்டுள்ளோர் யாவர்?

இன்றயை ஈழத்துப் புனைகதை இலக்கியம் வளர்முகமாகச் செல்கின்றது என்பது என்னுடைய கருத்தாகும். இளைய தலைமுறை எழுத்தாளர்கள் சிலரும் மூத்த தலைமுறை எழுத்தாளர்கள் சிலரும் நல்ல படைப்புக்களைத் தந்து கொண்டிருக்கின்றனர்.
[இப் படம் பரணீதரன் கலாமணி அவர்களது முகநூல் பக்கத்தில் இருந்து எடுக்கபட்டது. நன்றி]

இளைய தலைமுறை எழுத்தாளர்களின் படைப்புக்களுக்கு இன்றைய போர்க்காலச்சூழல். புலம்பெயர்வாழ்வு என்பன தகுந்த கருப்பொருளாக அமைகின்றன. அதே சமயம் இளையதலைமுறை எழுத்தாளர்கள் சிலரிடத்தில் ஒரு பலவீனமும் காணப்படுகின்றது. வார்த்தை ஜாலங்களினால் ஒருவகை மாயத்தோறற்ங்களை உருவாக்கி இதுதான் இலக்கியம் என முன்வைக்கப் பார்க்கின்றனர் சிறிய ஒரு கருப்பொருளை வைத்துக்கொண்டு வார்த்தை சோடனைகளால் வாசகனை கிறங்கடித்து இறுதியில் ஏமாற்றத்திற் குள்ளாக்குகின்றார்கள். இத்தகைய குறைபாட்டிலிருந்து இளந்தலைமுறை எழுத்தாளர்கள் சிலர் விடுபடவேண்டும். இலக்கியம் இரசனையுள்ளதாக இருக்கின்ற அதேசமயத்தில் இலக்கும் பயனுமுள்ளதாக அமைதல் வேண்டும்.

இன்றைய கால கட்டத்தில் நம்பிக்கை தரும் படைப்பாளிகள் எனக்குறிப்பாக யாருடைய பெயரையும் சுட்டுவதற்கு நான் விரும்பவில்லை. நம்பிக்கை தரும் படைப்புகள் ஒன்றிரண்டைத்தந்தவர்கள் பின்னர் எழுதாமலே இருந்து விடுகின்றார்கள். இவ்வாறு ஏன் இவர்கள் எழுதாமல் இருக்கவேண்டும்? இப்படியானவர்களை, நம்பிக்கை தரும் படைப்பாளிகளாக எப்படி நான் சொல்லமுடியும்.? இப்பொழுது எழுதிக்கொண்டிருக்கின்ற சிலரது சில படைப்புகள் நம்பிக்கைக்குரியவையாகக் காணப்படுகின்றன. இவர்களும் எமக்கு ஊடடிய ஊட்டிய இந்த நம்பிக்கையோடு பேனாவைக் கீழேவைத்துவிட்டுச் சும்மா இருந்துவிடலாம். எதிர்காலத்தில் இவர்கள் தரப்போகின்ற கருத்திற்கொண்டே இவர்களைப் பற்றியும் தீர்மானிக்கமுடியும். தொடர்ந்து எழுதிக்கொண்டிருக்கும் மூத்த எழுத்தாளர்கள் சிலர் இன்றும் நல்ல படைப்புகளைத் தந்த வண்ணமுள்ளனர். நான் இவ்வாறு குறிப்படுவதன் மூலம் இளைய தலைமுறை எழுத்தாளர்களின் ஆற்றலை மழுங்கடிப்பது என்பது நோக்கமல்ல. அவர்கள் தொடர்ந்தும் எழுதவேண்டும். தமிழிலக்கியத்திற்கு வளம் சேர்க்க வேண்டும் என்பதே எனது அவா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக