முத்தம்மாள் பழனிசாமி அவர்கள் மலேசிய எழுத்தாளர். ’நாடு விட்டு நாடு’ (From shore to shore) என்ற தன்வரலாற்று நூலை முதலில் ஆங்கிலத்திலும் பின்னர் தமிழிலும் எழுதியிருக்கின்றார். தமிழ் வெளியீடு எதிர்பாராத வரவேற்பைப் பெற்றதனால், அதனைச் சற்றே விரிவாக எழுதி, திருத்திய பதிப்பாக டிசம்பர் 2007 இல் சென்னை -யுனைடெட் ரைட்டஸ்(United Writers) மூலம் தமிழகத்தில் வெளியிட்டிருக்கின்றார்.
”நாட்டுப் புறப்பாடல்களில் என் பயணம்” என்ற நாட்டார் பாடல்களின் தொகுப்பு நூல் ஒன்றும் மற்றும் சில கட்டுரைகளையும் ஆங்கிலத்திலும் எழுதியிருக்கின்றார். Unsung Heroes என்ற கட்டுரை நேதாஜியின் “இந்திய தேசிய இராணுவம்” என்ற இயக்கத்தில் இணைந்த தமிழ் இளைஞர்கள் எவ்வாறு ஜப்பானியச் சிப்பாய்களினால், ’மரண ரயில்பாதை’ என்று நினைவுகூரப்படுகின்ற சுமார் 450 கிலோமீட்டர் நீளமான பர்மா-சயாம்(தாய்லாந்து) புகையிரதப் பாதை அமைப்பதில் மரணிக்கும்வரை வேலை வாங்கப்பட்டனர் என்று விபரிக்கின்றது.
இது மிகச் சிறிய கட்டுரையே எனினும் மரணத்தின் கொடுவாயிலில் இருந்து தப்பி வந்த பொன்னுச்சாமி என்பவரின் அனுபவங்களை விபரித்து, வரலாற்றின் தொடர் தேடலைத் தூண்டும் கட்டுரை. இந்தியத் தேசிய இராணுவத்தில் இணைந்து போராடப் புறப்பட்ட தமிழ் இளைஞர்களின் ஏமாற்றம், ப.சிங்காரம் அவர்கள் எழுதிய ’கடலுக்கு அப்பால்’, ’புயலிலே ஒரு தோணி’ ஆகிய நாவல்களிலும் சொல்லப்படுகின்றது.
தமிழகத்தின் கொங்குநாட்டில் இருந்து மலாயாவிற்கு வந்த குடும்பம் ஒன்று, தமது கடின உழைப்பால் உயர்ந்த ஒரு குடும்பத்தின் கதையாகவே சுமார் 20 வருடங்களுக்கு முன்னதாக நான் வாசித்தபோது எனது முதல் அபிப்பிராயமாக இருந்தது. இப்பொழுது மீண்டும் விரிவாக்கிய நூலைப் படிக்கின்றபோது உள்ளிருக்கும் அனேக நிகழ்வுகளும் ஊடு செல்லும் வரலாறும் ஆழமான மனப்பதிவுகளை ஏற்படுத்துவதுடன், ஆவலையும் ஆய்வு நாட்டத்தினையும் தரத்தக்கதான அக்கால சமூக, பொருளாதார, அரசியல் வரலாறுகளின் சிறியதும் பெரியதுமான தடயங்களையும் தரவுகளையும் கொண்டிருப்பது தெளிவாகத் தெரிகின்றது.
முத்தம்மாள் பழனிச்சாமியின் கணவர், ஸ்கொட்லாந்துப் பெயரும், தோற்றத்தில் ஒரு பூர்வீக ஸ்கொட்லாந்துக் காரைப்போல் இருக்கும் ஒரு தமிழ் -இங்கிலாந்துப் பெண்ணின் மகனாவார். மலாயாவை ஜப்பானியத் துருப்புக்கள் கைப்பற்றி ஆட்சி நடாத்தியபோது, சிறுவனாய் இருந்த அவர் ஜப்பானியரின் அழித்தொழிப்பில் இருந்து சமூகத்தாற் காப்பாற்றப்பட்டிருகின்றார். அவரது தாயின் கதை நாம் ஏற்கனவே அறிந்த திருநெல்வேலி-பாழையங்கோட்டை “கிளரிந்தா”வினதோ (அ.மாதவையா கிளரிந்தாவின் உண்மைக் கதையினை நாவலாக ஆங்கிலத்தில் எழுதினார்.) அல்லது இலங்கையில் கொழும்பின் ஒரு நகரப் பகுதியான மவுண்ட் லவினியா (Mount Lavinia) என்ற பெயர் வழங்கக் காரணமாக இருந்த சிங்கள தலித் ரோடி இனப் பெண்ணான ”லவினியா” என்ற பெண்ணின் கதை போன்றதாகவே அச்சொட்டாக இருக்கின்றது.
காலங்கள் யாவும் உலகப் போர்கள் மூண்ட; நாம், வெள்ளைக் காலனித்துவத்திற்கு உட்பட்ட காலங்களாக இருக்கின்றன.
நிலம் மற்றும் உற்பத்திச் சாதனங்களைக் கையகப்படுத்திய நில-உடமைச் சமூகம், இந்தியச் சாதியச் சமூகம் போன்றவற்றில் பல பெண்களின் சோகமான வரலாற்றுகள் ஆங்காங்கே இந்த நூலில் காணப்படுகின்றன. மிக மோசமான எங்கள் பெண்ணொடுக்குமுறைச் சமூகத்தில் பெண்கள் தடைகளை, விலங்குகளை, அவலங்களை அவமானங்களை எதிர்கொண்டு உயிர்வாழ்ந்த வீர வரலாறுகளும் மனங்கொள்ளத்தக்கவையாகச் சொல்லப்படுகின்றன.
தாலிமாட்டிய மனைவியாகக் கணவன் என்பவனது வீட்டுக்கு அனுப்பிவைக்கப்பட்ட சிறுமி தாலியை அங்கேயே வைத்துவிட்டுத் தன் வீட்டுக்கு ஓடிவந்து விடுகிறாள். அதனால் பல காலங்களின் பின்னர் இன்னொருவருக்கு இரண்டாவது தாரமாக வாழ்க்கைப்பட்டவளே இந்தத் தன் வரலாற்றை எழுதிய முத்தம்மாள் பழனிச்சாமியின் தாய்.
வாழ்வின் நெடுகிலும் அவள் எவ்வாறு பழிவாங்கப்படுகின்றாள் என்பதை வாசிக்கின்றபோது மனிதக் கூட்டத்தின்மீது வெறுப்புங்கூட வந்துபோகின்றது.
இடப்பெயர்வுக்கு நிர்பந்திக்கப்பட்ட உலகந்தழுவிய சமூகங்களின் முதலாவது தலைமுறையிடம் காணப்படும் பொதுவான பண்புகளே, அன்று நூறு வருடங்களின் முன்பும் காணப்பட்டன என்று நூலை வாசிக்கும் போது எமக்குப் படுகின்றது.
(விரிவான கட்டுரை ஒன்றை எழுதும் நோக்கில்...,இது ஒரு முன்னோட்டம்)

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக